Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

How to Use Guava Leaves for Hair Growth in Tamil: கருகரு கூந்தலுக்கு ஹோம் மேட் ஹேர் ஆயில்.. 7 நாட்களில் முடி உதிர்வுக்கு குட் பை..!!

Nandhinipriya Ganeshan July 23, 2022 & 14:15 [IST]
How to Use Guava Leaves for Hair Growth in Tamil: கருகரு கூந்தலுக்கு ஹோம் மேட் ஹேர் ஆயில்.. 7 நாட்களில் முடி உதிர்வுக்கு குட் பை..!!Representative Image.

How to Use Guava Leaves for Hair Growth in Tamil: முடி வளர்ச்சியை மேம்படுத்த உதவும் கொய்யா இலை எண்ணெய். இயற்கை முறையில் தயாரிக்கப்படும் இந்த எண்ணெயில் பயன்படுத்தக்கூடிய முக்கிய பொருளான கொய்யா இலையில் உள்ள வைட்டமின், தாதுக்கள், பைட்டோ கெமிக்கல்ஸ் போன்றவை முடி உதிர்வு, பொடுகு மற்றும் பிற தலைமுடி பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. இந்த எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வருகையில் அடர்த்தியான, ஆரோக்கியமான கூந்தலை பெற இயலும். இதை வீட்டிலேயே மிகவும் சுலபமாக தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

தேங்காய் எண்ணெய் – 1 கப்

வைட்டமின் ஈ மாத்திரை – 1

கொய்யா இலை – 15

செய்முறை:

முதலில் கொய்யா இலைகளை மிக்ஸியில் போட்டு பேஸ்ட் மாதிரி நைசாக அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்த பேஸ்ட்டை ஒரு காற்று பூகாத கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் பாட்டிலில் ஊற்றிக் கொள்ளுங்கள்.

இப்போது அதில் தேங்காய் எண்ணெய் மற்றும் வைட்டமின் ஈ மாத்திரையை உடைத்து ஊற்றிக் கொள்ளுங்கள்.

இதை நன்றாக குலுக்கி மூடிப்போட்டு மூடிவிடவும். சுமார் 24-48 மணி நேரம் வரை ஒரு இடத்தில் வைத்து நன்றாக ஊறவிடவும்.

அவ்வளவு தான், கொய்யா இலை எண்ணெய் ரெடி. இதை வடிகட்டி ஒரு வாரம் வரை பயன்படுத்திக்கொள்ளலாம்.

எப்படி பயன்படுத்துவது?

நாளைக்கு தலைக்கு குளிக்க போகிறீர்கள் என்றால், அதற்கு முந்தநாள் இரவே உங்களுடைய முடிக்கு தேவையான எண்ணெயை எடுத்து கொண்டு, ஸ்கேல்ப் மற்றும் முடியில் தேய்த்து 2 நிமிடம் மசாஜ் செய்து கொள்ளுங்கள்.

பின்னர், முடியை பின்னிக்கொண்டு தூங்கச்செல்லவும். இரவு முழுவதும் எண்ணெய் தலையில் நன்றாக ஊறிவிடும், மறுநாள் காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில், கொஞ்சமாக ஷாம்பு போட்டு முடியை அலசிக்கொள்ளுங்கள்.

கொய்யா இலை பவுடர்:

ஒருவேளை, கொய்யா இலையை பச்சையாக இல்லாமல் பவுடராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால், சித்த மருத்துவ கடைகளில் கிடைக்கும்.

அல்லது வீட்டிலேயே 15-20 இலைகளை பறித்து வெயிலில் 2-3 நாட்கள் நன்றாக மொறுமொறுப்பாக காயவைத்து மிக்ஸியில் பொடியாக்கிக் கொள்ளலாம்.

அதை 3-4 டீஸ்பூன் சேர்த்து இதேப்போல் வைட்டமின் ஆயில், தேங்காய் எண்ணெயுடன் கலக்கி 24-48 மணி நேரம் மூடி போட்டு ஊறவிடுங்கள்.

இதை நீங்க தினமும் பயன்படுத்தும் எண்ணெயாக கூட தலையில் தடவிக்கொள்ளலாம். இந்த எண்ணெயை ஒரு வருடம் வரை பயன்படுத்திக்கொள்ளலாம்.

Tags:

How to use guava leaf for hair growth | How to make guave leaves oil for hair growth | Guava leaves for hair growth | How to make guava leaf oil for hair growth | How to make guava leaves oil at home for hair growth | How to use guave leaves for hair | How to make guava leaf oil for hair at home in tamil | How to use guave leaves for hair growth in tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்