Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கருகருனு, நீளமா முடி வேணுமா.? செம்பருத்திய இப்படி பயன்படுத்துங்க.. | How to Use Hibiscus Flower For Hair

Gowthami Subramani Updated:
கருகருனு, நீளமா முடி வேணுமா.? செம்பருத்திய இப்படி பயன்படுத்துங்க.. | How to Use Hibiscus Flower For Hair Representative Image.

எப்படி பராமரித்தாலும், இந்த ஒரு பிரச்சனைக்கு மட்டும் தீர்வு கிடைப்பதில்லை. அப்படி என்ன பிரச்சனை என்று நீங்கள் சிந்திக்கிறீர்களா.? வேறு எதுவும் இல்லை. முடி பராமரிப்பு பிரச்சனை தான். முடியைப் பொறுத்த வரை, முடி வறட்சி, இளநரை, செம்பட்டை முடி போகுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆனால், இதற்கு பல்வேறு தீர்வுகள் உள்ளன. அந்த வகையில், செம்பருத்தியை வைத்து முடி பிரச்சனைகளை நீக்க முடியும். எவ்வாறு செம்பருத்தியை வைத்து முடி தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் நீக்க முடியும் என்பதை இதில் பார்க்கலாம்.

கருகருனு, நீளமா முடி வேணுமா.? செம்பருத்திய இப்படி பயன்படுத்துங்க.. | How to Use Hibiscus Flower For Hair Representative Image

செம்பருத்தியின் குணங்கள்

செம்பருத்தி பூவானது ஐந்து அடுக்கு இதழ்களைக் கொண்ட பூ ஆகும். இதன் அடுக்கடுக்கு இதழ்கள், செம்பருத்தி செவ்வரத்தை என அழைக்கப்படுகிறது. இவை ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கிறது. இத்தகைய நற்குணங்களைக் கொண்ட செம்பருத்தி பல்வேறு வகையில் உதவுகிறது. அதன் படி, செம்பருத்தியானது கூந்தலுக்கு, முகப்பொலிவிற்கும் பயன்படுத்தக் கூடியதாக அமைகிறது. எப்படி முடிக்கு செம்பருத்தியைப் பயன்படுத்தலாம் என்பது பற்றிக் காணலாம்.

கருகருனு, நீளமா முடி வேணுமா.? செம்பருத்திய இப்படி பயன்படுத்துங்க.. | How to Use Hibiscus Flower For Hair Representative Image

கூந்தலுக்கு செம்பருத்தி

செம்பருத்தியை கூந்தலுக்குப் பயன்படுத்துவதன் மூலம், இளநரை நீக்கப்படுவதுடன், முடி கருமையாகவும், நீளமாகவும் வளர உதவுகிறது. மொத்தமாக செம்பருத்தி பூவை வாங்கிக் கொண்டு அதை நிழலில் உலர்த்தி பொடியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் படி, வாரம் ஒரு முறை கற்றாழையை நீரில் அலசி செம்பருத்தி பவுடருடன் சேர்த்து கலக்க வேண்டும். பிறகு, அரை மணி நேரம் கழித்து கெமிக்கல் கலக்காத ஷாம்புவை உபயோகித்து பின், தலை முடியை அலாசலாம்.

கருகருனு, நீளமா முடி வேணுமா.? செம்பருத்திய இப்படி பயன்படுத்துங்க.. | How to Use Hibiscus Flower For Hair Representative Image

எண்ணெயைப் பயன்படுத்தி

செம்பருத்தி இதழ்களைப் பயன்படுத்தி, அதனுடன் கறிவேப்பிலை, நெல்லிக்காய், மருதாணி போன்றவற்றை சம அளவு சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். பின், சுத்தமான தேங்காய் எண்ணெயுடன் செம்பருத்தியைக் கலந்து காய்ச்சி கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைத்துப் பயன்படுத்தலாம். இதனை அதிகபட்சம் மூன்று மாதங்கள் வரை பயன்படுத்துவதற்குத் தேவையான பொருள்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கருகருனு, நீளமா முடி வேணுமா.? செம்பருத்திய இப்படி பயன்படுத்துங்க.. | How to Use Hibiscus Flower For Hair Representative Image

செம்பருத்தியின் பயன்கள்

இவ்வாறு செம்பருத்தியை தலை முடிக்கு உபயோகப்படுத்துவதன் மூலம், தலையில் உள்ள பேன், பொடுகு, பேன் ஆகிய அனைத்துத் தொல்லைகளும் நீங்கி விடும். மருதாணி, நெல்லிக்காய் போன்றவை இல்லையெனினும், வெறும் செம்பருத்தியை மட்டும் பயன்படுத்தி முடி கருமை நிறத்தில் கொண்டு வர உதவலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்