Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Wash Pattu Saree at Home in Tamil: இனி வீட்டிலேயே பட்டுப் புடவையை அலசலாம்...!!

Nandhinipriya Ganeshan August 13, 2022 & 16:00 [IST]
How to Wash Pattu Saree at Home in Tamil: இனி வீட்டிலேயே பட்டுப் புடவையை அலசலாம்...!!Representative Image.

How to Wash Pattu Saree at Home in Tamil: பொதுவாக, பெண்களுக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று புடவை தான். அது எவ்வளவு விலையாக இருந்தாலும் வாங்கி உடுத்திய பிறகுதான் மனம் நிம்மதியடையும். அதிலும் பட்டுப் புடவையின் மீது பிரியம் கொஞ்சம் ஜாஸ்தி. அப்படி, ஆசை ஆசையாய் வாங்கிய பட்டுப் புடவைகளை பராமரிப்பது தான் பெரிய வேலையே. ஏனென்றால், பட்டு புடவைகளை ரொம்ப நாட்கள் அப்படியே மடித்து வைத்திருந்தால், பட்டு நூல்கள் எளிதில் சேதமடைந்துவிடும். 

இதனால், அவற்றை 30 - 50 நாட்களுக்கு ஒருமுறையாவது மாற்றி மடித்து வைக்க வேண்டும். அதைவிட பெரிய வேலை அதை வாஷ் செய்வது. பொதுவாக மற்ற துணிகளை போன்று பட்டு துணிகளை வாஷ் செய்ய கூடாது. ஏனென்றால், அதில் பலவிதமான கலர்களில் பட்டு நூல்கள் போட்டு நெய்யப்பட்டிருக்கும். இதை நாம் தண்ணீரில் போடும் போது, ஒன்றின் சாயம் மற்றொரு சாயத்தில் கலந்து பட்டுப் புடவையையே பழாக்கிவிடும். அதனாலையே பலர் கடையில் கொடுத்து ட்ரைவாஷ் செய்துக் கொள்வார்கள். ஆனால், பட்டுப் புடவைகளை வீட்டிலேயே எந்த சேதமும் இல்லாமல் எளிய முறையில் வாஷ் செய்யலாம். எப்படி? கீழே உள்ள வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

❖ இதை செய்ய உங்களுக்கு வேண்டியதெல்லாம், மூன்றே பொருட்கள் தான். வாஷிங் லிக்விட் (Washing Liquid), பக்கெட், குளிர்ந்த தண்ணீர். 

❖ பட்டுப் புடவைகளை அலசுவதற்கு சாதாரண தண்ணீரோ, சூடான தண்ணீரோ கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. குளிர்ந்த தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

❖ அரை பக்கெட் குளிர்ந்த் நீரில், தேவையான அளவு மைல்டான வாஷிங் லிக்விட்டை ஊற்றி நன்றாக கலந்துக் கொள்ளவும். பின்னர், அந்த தண்ணீரில் ஒரு சிறிய பஞ்சை சில நிமிடங்கள் போட்டு வெளியே எடுத்துவிடுங்கள்.

❖ அப்போது, அந்த பஞ்சில் நிறம் ஏதேனும் மாறியிருக்கிறதா அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா என்பதை சோதித்து கொள்ள வேண்டும். அதன்பின், பட்டுப் புடவையை முழுக்க விசிறி மடிப்பாக மடித்து, பார்டரை மொத்தமாக சேர்த்து நூலால் கட்டிக்கொள்ளவும்.

❖ அதேப்போல், முந்தானையையும் நூலால் கட்டிக்கொள்ளவும். இப்போது முந்தானை, பார்டரரை தவிர, புடவையின் நடுப்பகுதியை மட்டும் தண்ணீரில் போட்டு ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும். (5 நிமிடங்களுக்கு மேல் ஊற வைக்கக்கூடாது)

❖ அதன்பிறகு, மற்றொரு பக்கெட்டில் மீண்டும் அரை பக்கெட் அளவில் குளிர்ந்த நீரை எடுத்துக்கொண்டு, அதில் புடவையை மென்மையாக அலசி எடுக்கவும். எக்காரணத்திற்காவும் பிரஷ் பயன்படுத்தவோ, பிழியவோ, கசக்கவோ கூடாது.

❖ அலசி முடித்த பின்னர் தண்ணீரை ஒரு டவல் கொண்டு உலர்த்தி கட்டாயம் நிழலில் தான் காய வைக்க வேண்டும். சீக்கிரம் காயவேண்டும் என்பதற்காக வெயிலில் காயவைத்தால், அன்றோடு அந்த புடவையை மறந்துவிட வேண்டியது தான். ஏனென்றால், நூல் பாதிக்கப்பட்டு நிறம் மாறி வெளுத்துப்போய் விடும். 

Tags:

Silk saree washing at home, Silk saree washing tips, How to wash a silk saree, How to wash silk saree at home, How to wash pattu saree at home in tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்