Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Whiten Teeth in Tamil: எப்படி பல் தேய்ச்சாலும் மஞ்சளாவே இருக்கா..? ஒரே நாளுல முத்து போன்ற பற்களுக்கு இத பண்ணுங்க..!

Nandhinipriya Ganeshan July 07, 2022 & 12:15 [IST]
How to Whiten Teeth in Tamil: எப்படி பல் தேய்ச்சாலும் மஞ்சளாவே இருக்கா..? ஒரே நாளுல முத்து போன்ற பற்களுக்கு இத பண்ணுங்க..!Representative Image.

How to Whiten Teeth in Tamil: நம் அனைவருக்குமே நல்லா வெள்ளையான முத்து போன்ற பற்கள் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால், துரிதிர்ஷ்டவசமாக அந்த பாக்கியம் எல்லாருக்கும் கிடைப்பதில்லை. இதற்கு காரணம் சரியாக பல் துலக்காமல் இருப்பதும், உணவு பழக்கங்களும் தான். இதனால், ஏற்படும் மஞ்சள் கறைகளை சில வீட்டு வைத்தியங்கள் மூலமே நீக்கிவிடலாம். இதோ உங்களுக்கான டிப்ஸ்.. இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க... 

சாம்பல்: நம் முன்னோர்கள் முந்தைய காலத்தில் சாம்பலைக் கொண்டு தான் பற்களை துலக்கினார்கள். ஏனென்றால் சாம்பலுக்கு கறைகளை போக்கும் திறன் உள்ளது. சிறிதளவு சாம்பலை ஈரமான டூத் பிரஷில் நனைத்து, பற்களை வழக்கம் போல துலக்க வேண்டும். இதை தொடர்ந்து ஒரு வாரம் செய்யலாம்.

எலுமிச்சை சாறு: பல் துலக்கும் போது எலுமிச்சை சாறு, சிறிதளவு உப்பு சேர்த்து கறைப்பட்ட இடத்தில் தேய்த்து, வாய் கொப்பளிக்க வேண்டும். 

பேக்கிங் பவுடர்: ஒரு டீஸ்பூன் பேக்கிங் பவுடர், ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு இரண்டையும் ஒன்றாக கலந்து, பல் துலக்கும்போது டூத் பிரஷில் தொட்டு 2 நிமிடம் தேயுங்கள். ஆனால், 2 நிமிடத்திற்கு மேல் தேய்க்கக்கூடாது. வாரத்தில் இரண்டு முறை மட்டும் செய்தால் போதுமானது.

ஆப்பிள் சீடர் வினிகர்: ஆப்பிள் சீடர் வினிகர் அரை டீஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர்ல் கலந்து கொள்ளுங்கள். இந்த தண்ணீரால் தினமும் காலையில் பல் துலக்கியதற்கு பின்பு வாயை கொப்பளிக்க வேண்டும். 

எலுமிச்சை ஜூஸ் மற்றும் தண்ணீரை சரிசம அளவில் கலந்து கொண்டு பல் துலக்கிய பின் அந்நீரால் வாயை கொப்பளிக்க வேண்டும். இதனால் பற்களில் உள்ள மஞ்சள் கறை காணாமல் போய்விடும்.

வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டும் இரவில் சாப்பிட்டு முடித்ததும், தண்ணீரில் உப்பு போட்டு கலந்து வாய் கொப்பளிப்பதன் மூலமும் கறையை தவிர்க்கலாம். இதற்காக கடையில் "மவுத் வாஷ்" வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. 

அதிகளவில் உமிழ்நீர் சுரப்பதாலும் பற்களில் மஞ்சள் கறை ஏற்படலாம். இதை தடுக்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

குறிப்பு: மேலே கொடுக்கப்பட்டிருக்கும் வீட்டு வைத்தியங்களை அளவுக்கு மீறிச் செய்தால், பற்களில் சென்சிட்டிவ் தன்மை அதிகரித்து பற்கூச்சத்தை ஏற்படுத்தும். எனவே, அளவோடு பின்பற்றுங்கள். அதுவே போதுமானது. 

உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளையும் உடனுக்குடன் பெறுங்கள். 

Tags:

How to whiten teeth in tamil | How to get rid of yellow teeth | How to remove yellow stains from teeth in tamil | How to remove yellow teeth in tamil 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்