Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Optical Illusion Game: நீங்க இப்படி ஃபோனை பயன்படுத்துறீங்களா..? அப்ப உங்க பர்சனாலிட்டி இப்படி தான் இருக்கும்.... தெரிஞ்சிக்கோங்க...!!

Nandhinipriya Ganeshan May 30, 2022 & 13:45 [IST]
Optical Illusion Game: நீங்க இப்படி ஃபோனை பயன்படுத்துறீங்களா..? அப்ப உங்க பர்சனாலிட்டி இப்படி தான் இருக்கும்.... தெரிஞ்சிக்கோங்க...!!Representative Image.

Optical Illusion Game: இன்றைய ஆப்டிக்கல் இல்யூசன் புகைப்படுமானது ஆளுமை (personality)சோதனையை அடிப்படையாகக் கொண்டாதாகும். இந்த காலத்தில் சோறு இல்லாமல் கூட இருந்துவிடலாம், ஆனால் செல்போன் இல்லாமல் ஒரு நாள் கூட கடக்க முடியாத நிலைக்கு வந்துள்ளோம். அப்படி, ஒவ்வொருவருக்கும் நிச்சயம் ஒரு ஃபோன்  இருக்கும். அதேப்போல், ஒவ்வொருத்தரும் ஒரு ஸ்டைலில் ஃபோனை பயன்படுத்துவார்கள். அந்த வகையில், சமீபத்தில் ஒரு ஆப்டிக்கல் இல்யூசன் புகைப்படம் உங்களுடைய ஆளுமையை சோதனை செய்யும் விதத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது உண்மையில் சுவாரஸ்யமானதாக இருக்கும். இப்போது இந்த படத்தை பாருங்கள்... நீங்க உங்க ஃபோனை எப்படி பிடித்து பயன்படுத்த விரும்புவீர்களோ அப்படி தான் உங்களுடைய பர்சனாலிட்டி இருக்கும். ட்ரைப் பண்ணிப்பாருங்க.

உங்க ஃபோனை எப்படி பிடிப்பீர்கள்?

உங்க ஃபோனை நீங்க வைத்திருக்கும் விதத்தில் உங்களுடைய பர்சனாலிட்டியை பற்றி சொல்ல முடியும் என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆளுமை சோதனையின் (personality test) அடிப்படையிலான ஆப்டிக்கல் இல்யூசன் புகைப்படங்கள் உங்களுடைய ஆளுமை, உறவு போன்றவற்றைப் பற்றி வெளிப்படுத்துவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றன. 

ஆப்டிக்கல் இல்யூசன் புகைப்படங்கள் பொழுதுபோக்கு அம்சமாகவும், சிந்தனைத் திறனை தூண்டும் விதமாகவும் அமைந்துள்ளன. அதாவது, ஒரு புகைப்படத்தில் நம் கண்களுக்கு தெரியும் காட்சி, சிலருக்கு வேறு மாதிரியாகவும், கூர்ந்து கவனித்தால் முற்றிலும் வேறு மாதிரியாகவும் தோன்றும். இந்த மாதிரி ஆப்டிக்கல் இல்யூசன் புகைப்படங்களில் பல வகை உண்டு. 

அந்த வகையில், டோடாவின் ஆப்டிக்கல் இல்யூசன் ஒரு ஆளுமை சோதனையை அடிப்படையாகக் கொண்டது, இதில் உங்கள் ஃபோனை பயன்படுத்தும் உங்களுக்கு விருப்பமான முறையை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். பின்னர், உங்கள் ஆளுமை மற்றும் உங்கள் மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். இந்த படத்தை பார்த்து, நீங்க எப்படி உங்க ஃபோனை பிடித்து பயன்படுத்துவீர்கள் என்பதை தேர்ந்தெடுக்கவும். 

நிலை 1 | Using one hand to hold it and scroll

ஒரு கையால் ஃபோனைப் பிடித்துக் கொண்டு கட்டை விரலைப் பயன்படுத்தி ஸ்க்ரோல் செய்து டைப் பண்ணுவது. இதன் பொருள் நீங்கள் கவலையற்ற, மகிழ்ச்சியான மற்றும் தன்னம்பிக்கை கொண்ட நபர். நீங்கள் வாழ்க்கையின் பிரகாசமான பக்கத்தைப் பார்க்க விரும்புகிறீர்கள். வாழ்க்கையில் எதற்கும் குறை சொல்வதில்லை. வாழ்க்கை உங்களுக்கு என்ன தருகிறதோ அதை ஏற்றுக்கொள்ளும் திறன் உங்களிடம் உள்ளது. உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை உள்ளது மற்றும் உங்களின் இந்த குணம் உங்கள் பாதையில் எந்த புதிய வாய்ப்பையும் பெற்றுக்கொண்டு முன்னேற உதவுகிறது. 

தேவைப்பட்டால், உங்கள் இலக்கு, குறிக்கோள்கள் மற்றும் ஆசைகளை அடைய நீங்கள் எந்த எல்லைக்கும் போக தயாராக இருப்பீர்கள். ஆனால், நீங்க மனதில் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், இந்த மனநிலை வணிகத்தில் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றாலும், அது உறவுகளில் பொருந்தாது. அதாவது, காதல் என்று வரும்போது, எந்த விஷயங்களிலும் எப்போதும் பொறுமையாகவும் எச்சரிக்கையாகவும் தான் இருக்க விரும்புகிறீர்கள். இதனால், உங்கள் துணை உங்களை அர்ப்பணிப்பு பற்றி அக்கறையற்றவராக உணரலாம்.

நிலை 2 | Using both hands to hold it but just one thumb to scroll

இரு கைகளாலும் மொபைலைப் பிடித்துக்கொண்டு, ஸ்க்ரோல் செய்து டைப் செய்ய ஒரே ஒரு கட்டைவிரலைப் பயன்படுத்தினால், நீங்கள் புத்திசாலி, உள்ளுணர்வு மற்றும் நடைமுறைச் சிந்தனை உடையவர் என்று அர்த்தம். ஒன்றின் மீது ஆசைவைத்து விட்டால், பல பிரச்சனைகளை சந்திக்கவும், எல்லாவற்றையும் இழக்கும் நிலையிலும், எந்த தவறையும் செய்து அதை அடையக்கூடியவர். 

நீங்கள் எப்போதும் விழிப்புடன் இருப்பதால் உங்களை ஏமாற்றுவது கடினம், மேலும் மற்றவர்களின் எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளுக்கு நீங்கள் மிகவும் எளிதில் புரிந்துக்கொள்ள கூடியவர். இந்த குணம் தான் உங்களை மற்றவர்களிடம் உங்களை உயர்த்தி காட்டுகிறது. ஆனால், முக்கிய முடிவுகளை எடுக்கும்போது எந்த பாரபச்சமும் பார்க்க மாட்டீர்கள். எது சரியோ அதை மட்டும் செய்வீர்கள். இதனால், சில விரிசல் ஏற்படும். உறவுகள் என்று வரும்போது, அந்த நபர் உங்கள் நேரத்தையும் முயற்சியையும் மதிப்பாரா என்பதை நீங்கள் எளிதில் தீர்மானித்துவிடுவீர்கள். 

நிலை 3 | Using both hands to hold it and to scroll

இரு கைகளாலும் ஃபோனைப் பிடித்துக் கொண்டு இரு கட்டைவிரல்களாலும் ஸ்க்ரோலிங் செய்து தட்டச்சு செய்தால், நீங்கள் விரைவாகவும் திறமையாகவும் விஷயங்களைச் செய்ய விரும்பும் நபர். உங்கள் விரல்களைப் போல வேகமான மூளை உங்களுக்கு உள்ளது, மேலும் நீங்கள் ஒரு சிக்கலை ஆராய்ந்து சில நொடிகளில் தீர்வைக் கொண்டு வந்துவிடுவீர்கள். நீங்கள் ஒரு பல்துறை நபர், எந்த சூழ்நிலைகளுக்கும் எளிதில் மாறிக் கொள்வீர்கள். நீங்கள் விருந்துகளில் சுறுசுறுப்பாகவும், அறிவார்ந்த விவாதங்களின் போது தீவிரமாகவும், குழந்தைகளுடன் இருக்கும்போது கவலையற்றவராகவும் இருப்பீர்கள். நீங்கள் விருந்துகளில் சுறுசுறுப்பாகவும், அறிவார்ந்த விவாதங்களின் போது தீவிரமாகவும், குழந்தைகளுடன் இருக்கும்போது கவலையற்றவராகவும் இருக்கிறீர்கள்.

இருப்பினும், காதலில், ஒரு பிரச்சனையைத் தீர்ப்பது போல் ஒருவரின் இதயத்தை வெல்ல முடியாது. கவர்ச்சிகரமான ஒருவரை கவர்ந்திழுக்கும் போது நீங்கள் அடிக்கடி தடுமாறுகிறீர்கள், மேலும் உங்கள் செயல்திறன் உங்களை அடிக்கடி தோல்வியடையச் செய்கிறது. இறுதியில், உங்கள் அன்பை நிரூபிக்க எடுக்கும் முயற்சியையும் நேரத்தையும் எப்படிச் செய்வது என்பதை நீங்கள் கற்றுக்கொள்கிறீர்கள். நீங்கள் ஆழமான, வளமான உறவுகளை பெறுவதற்கு இதுவும் ஒரு காரணம்.

நிலை 4 | Using one hand to hold it and the thumb of the other to scroll

ஒரு கையால் ஃபோனைப் பிடித்துக்கொண்டு, மறுபுறம் ஆள்காட்டி விரலால் ஸ்க்ரோலிங் செய்தால், நீங்கள் சிறந்த கற்பனைத் திறன் கொண்ட படைப்பாளி. யதார்த்தத்தை மீறிய சாத்தியக்கூறுகள் மற்றும் எதிர்காலங்களை உங்களால் கற்பனை செய்ய முடிகிறது, மேலும் உங்களின் தனித்துவமான கருத்துக்களால் மக்கள் அடிக்கடி பிரமிப்பு அடைகின்றனர். நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் ஒரு சிந்தனை உலகம் இருப்பதால், மக்கள் இதைப் பற்றி அறியாதவர்களாக இருப்பதால், நீங்கள் நகைச்சுவையான மற்றும் விசித்திரமானவராகக் காணப்படுவீர்கள். 

நீங்கள் தன்னிச்சையான மற்றும் உற்சாகமான நபராக இருந்தாலும், சில சமயங்களில் கூட்டத்தின் சலசலப்பிலிருந்து உங்களைப் பிரித்து, உங்கள் ஆற்றலை நிரப்ப தனிமையான இடத்திற்குச் செல்ல விரும்புகிறீர்கள். உறவுகள் என்று வரும்போது நீங்கள் ரொம்ப ஷை டைப், நீங்களும் உங்க துணையும் வாழ்க்கையில் ஒவ்வொரு அடியிலும் எடுத்த வைக்க ரொம்ப பயப்படுகிறீர்கள். சிலர் உங்களை ஆர்வமில்லாதவர் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் உங்களை நன்றாக அறிந்துகொள்ளவும், உங்கள் ஆறுதல் மண்டலத்திலிருந்து உங்களை வெளியேற்றவும் முயற்சி செய்யும் போது, அவர்கள் உங்களைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு வியப்படைவார்கள். 

சரி, உங்க பர்சனாலிட்டி பற்றி தெரிந்துக் கொண்டீர்களா? அப்போ அடுத்தது என்ன… உங்க நண்பர்கள் மற்றும் குடும்பங்களுக்கு இதை ஒரு ஷேர் செய்யலாமே. அவர்களும் தெரிந்துக் கொள்ளட்டும். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்