Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வீட்டிலேயே ஒரு இனிப்பான அன்னாசி அல்வா செய்வது எப்படி ?

Vaishnavi Subramani Updated:
வீட்டிலேயே ஒரு இனிப்பான அன்னாசி அல்வா செய்வது எப்படி ?Representative Image.

பலருக்கும் அன்னாசிப் பழம் மிகவும் பிடிக்கும். ஆனால் அதில் உள்ள முட்கள் மற்றும் செதில்கள் அதிகமாக உள்ளதால் சாப்பிடுவது என்பது கடினமாக இருக்கும். அன்னாசிப் பழம் மிகவும் சத்து நிறைந்த பழம். இந்த பழம் சாப்பிட்டால் உடலில் உள்ள பிரச்சனைகளை இந்த பழம் எளிதில் சரி செய்து கொடுக்கும். இந்த பழம் உடல் எடை குறைக்கும் தன்மை கொண்டது.

வீட்டிலேயே ஒரு இனிப்பான அன்னாசி அல்வா செய்வது எப்படி ?Representative Image

✤ இதில் உள்ள சத்துகளால் ஜீரணமாக்கும் பகுதியை நன்றாகத் தூண்டிவிட உதவும் ஒரு பழம். இவ்வளவு நன்மைகள் கொண்ட பழத்தில் ஒரு அல்வா என்றால் யாருக்குப் பிடிக்காமல் இருக்கும். இந்த பதிவில் வீட்டிலேயே ஒரு இனிப்பான அன்னாசி அல்வா எப்படிச் செய்வது என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

வீட்டிலேயே ஒரு இனிப்பான அன்னாசி அல்வா செய்வது எப்படி ?Representative Image

தேவையான பொருள்கள்

✤ அன்னாசிப் பழம் – 1 பழம்

✤ ரவை – 1 கப்

✤ முந்திரி – 1 கப்

✤ திராட்சை- 1கப்

✤ நெய் - 2ஸ்பூன்

வீட்டிலேயே ஒரு இனிப்பான அன்னாசி அல்வா செய்வது எப்படி ?Representative Image

✤ சர்க்கரை -1/2கிலோ

✤ ஏலக்காய் பொடி – 7கிராம்

✤ எலுமிச்சை சாறு – 1/2ஸ்பூன்

✤ உப்பு – சிறிதளவு

✤ கேசரி பவுடர் -தேவையான அளவு

வீட்டிலேயே ஒரு இனிப்பான அன்னாசி அல்வா செய்வது எப்படி ?Representative Image

செய்முறை

✤ அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு நெய் ஊற்றி, அதில் ஒரு கப் அளவிற்கு முந்திரி மற்றும் ஒரு கப் அளவிற்குத் திராட்சை சேர்த்து நன்றாக வதக்கவும்.

✤ பொன்னிறமாக வந்த உடன் அடுப்பை அணைத்து பாத்திரத்தை இறக்கி மற்றொரு பாத்திரத்திற்கு மாற்ற வேண்டும். அந்த நெய் பாத்திரத்தில் ஒரு கப் அளவிற்கு ரவை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்.

✤ அது பொன்னிறமாக வந்த உடன் அடுப்பை அணைத்து பாத்திரத்தை இறக்கி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

வீட்டிலேயே ஒரு இனிப்பான அன்னாசி அல்வா செய்வது எப்படி ?Representative Image

✤ ஒரு அன்னாசிப் பழத்தை எடுத்து அதில் தோல் சீவி அதை நன்றாக பொடிப் பொடியாக நறுக்க வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் இரண்டு கப் அளவிற்குத் தண்ணீர் சேர்த்து அதில் நறுக்கிய அன்னாசிப் பழம் மற்றும் அரை கிலோ சர்க்கரை சேர்க்க வேண்டும்.

✤ அது நன்றாக வேக விடவும். அதில் சிறிதளவு கேசரி பவுடர் சேர்க்க வேண்டும். பழம் முழுவதுமாக வெந்த உடன் அதில் நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும்.

வீட்டிலேயே ஒரு இனிப்பான அன்னாசி அல்வா செய்வது எப்படி ?Representative Image

✤ அதில் ஏலக்காய் பொடி மற்றும் ஒரு சிட்டிகை அளவிற்கு உப்பு மற்றும் புளிப்பு தன்மை வேண்டும் என்றால் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும்.

✤ இது ஒரு கொதி வந்த உடன், அதில் வறுத்த ரவையைச் சேர்க்க வேண்டும். கட்டி சேராமல் கிளற வேண்டும். கிளறி முடித்தால் சூடான மற்றும் சுவையான அன்னாசி அல்வா தயார்.

✤ சூடாகச் சாப்பிடலாம்.வீட்டில் விழாக்கள் மற்றும் சந்தோஷம் ஆக இருந்தால் இதைச் சமைத்துச் சாப்பிடலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்