Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Science Behind Tamil Culture: நம் முன்னோர்கள் எதையும் காரணம் இல்லாம பண்ணமாட்டங்கனு இத படிச்சா உங்களுக்கே புரியும்...!! 

Nandhinipriya Ganeshan May 29, 2022 & 17:55 [IST]
Science Behind Tamil Culture: நம் முன்னோர்கள் எதையும் காரணம் இல்லாம பண்ணமாட்டங்கனு இத படிச்சா உங்களுக்கே புரியும்...!! Representative Image.

Science Behind Tamil Culture: நாம் இதுவரை கடைபிடித்து வரும் பழக்க வழக்கங்களுக்கு பின்னால் இருக்கும் காரணம் எதுவும் தெரியாமல் தான் எல்லாவற்றையும் செய்துக் கொண்டு வருகிறோம். ஆனால், நம் வாழ்க்கையில் தினமும் செய்து வரும் பல காரியங்களுக்கு பின்னால் மிகப் பெரிய அறிவியலே மறைந்திருக்கிறது. இதனால், தான் பெரியவர்கள் அதை செய்யதே இதை செய்யாதே என்று நமக்கு அறிவுரை சொல்லுவார்கள். ஆனால், நாம் அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் நம் இஷ்டத்துக்கு இருக்கிறோம். 

அதனாலையே பல பிரச்சனைகளை நாள்தோறும் சந்தித்து வருகிறோம். சரி, இந்த பதிவில் நாம் அன்றாடம் கடைப்பிடித்து பழக்க வழக்கங்களுக்கு பின்னால் மறைந்திருக்கும் உண்மையான அறிவியலை பற்றி விரிவாகப் பார்க்கலாம். இதையெல்லாம், நீங்க படித்துப் பார்த்தீர்கள் என்றால் நிச்சயம் ஆச்சர்யமாகவும், சுவாரஸ்யமாகவும் (scientific reasons behind indian traditions in tamil) இருக்கும். 

ஹோமங்கள் எதற்காக நடத்தப்படுகிறது?

நம் நாட்டில் திருமணம் மற்றும் மற்ற சுப நிகழ்ச்சிகளில் ஹோமங்கள் நடத்துவதை நாம் பார்த்திருப்போம். ஆனால், எதற்கு என்று என்னைகாவது சிந்தித்து பார்த்திருக்கிறீர்களா? இதற்கான காரணம், பொதுவாக இந்த ஹோமங்களில் மூலிகைகள் மற்றும் அரியவகை மருத்துவகுணமிக்க தாவரங்களை போட்டு எரிப்பார்கள். இதனை நாம் சுவாசிப்பதன் மூலம் நமக்கு பல்வேறு நோய்த்தொற்றுகள் வருவதற்கான வாய்ப்புகள் குறையும். இதனால் தான் அடிக்கடி யாருக்காவது உடம்பு சரியில்லாமல் போனால், வீட்டில் ஹோமங்கள் நடத்தச் சொல்வார்கள். 

காக்கைக்கு உணவு எதற்காக வைக்கப்படுகிறது?

இந்தக் காலத்திலும் காக்காவுக்கு சாப்படு வைப்பது ஒரு வழக்கமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஏன் காக்கைக்கு சோறு வைக்கிறோம் என்பது நம்மில் பாதி பேருக்கு தெரிவதே இல்லை. இதற்கான காரணம், அந்த காலத்தில் மின்சாரம் என்பது கிடையாது, சரியான வெளிச்சம் இல்லாததால் சமைக்கும் பொழுது விஷமுள்ள பூச்சிகள் அதில் விழுந்துவிட்டால் உணவு விஷமாகிவிடும். இதனை கண்டுபிடிப்பதற்காக தான் காக்காவுக்கு உணவு வைக்கிறார்கள். காக்காவுக்கு உணவில் விஷம் உள்ளதா என்பதை கண்டறியும் தன்மை உண்டு. இதனால்தான் எல்லாரும் சாப்பிடுவதற்கு முன்பு எச்சிப்படாத சாப்பாடு காக்கைக்கு வைக்கப்படுகிறது. 

பல்லி விழுந்தால் துரிதிர்ஷ்டம் உண்மையா?

பல்லியின் நிறம் கோடுகள் மற்றும் ஒரு நபரின் உடலில் அது விழும் இடம் ஆகியவற்றை கொண்டு எதிர்கால நிகழ்வுகளை குறிப்பதாக நம்பப்படுகின்றது. ஆனால், உண்மை காரணம் என்னவென்றால் இயற்கையாகவே நச்சுத்தன்மை வாய்ந்த பல்லிகள் தங்கள் எதிரிகளிடமிருந்து பாதுகாக்க நச்சு இரசாயனங்களை வெளியிடுகின்றன. அவை மனிதர்கள் மேல் விழுந்தால் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. அதனால்தான் பல்லி விழுந்த இடத்தை உடனே கழுவ (scientific reasons behind indian culture)  வேண்டும் என்றும் அபச குணம் என்று கூறுகின்றனர். 

புளியமரத்துக்கு கீழே படுத்த பேய் அடுக்குமா?

மற்ற மரங்களை காட்டிலும் புளிய மரம் அதிக CO2 மற்றும் நைட்ரஜனை வெளியிடுகிறது. அதனால் தான் புளிய மரத்தின் அடியில் தூங்கும் பொழுது மூச்சு விட சிரமமாக இருக்கிறது. இதை தான் மக்கள் பேய் (scientific facts about indian traditions) பிடிக்கும் என்று கூறுகின்றனர். 

மாவிலை தோரணம் எதற்கு?

நாம் அனைவரும் விஷேச நாட்களில் மாவிலை தோரணத்தை வீட்டின் முன் எதற்காக கட்டுகிறோம் என்று தெரியுமா? இதற்கு காரணம் மாவிலைகளுக்கு ஒரு சிறப்பு தன்மை உண்டு. அவை மரத்தில் இருந்து பறித்த பிறகும் கரியமில வாயுவை எடுத்து கொண்டு ஆக்ஸிஜனை வெளிவிடும் தன்மை கொண்டது. இதனால், மாவிலை தோரணங்களை வீட்டின் முன் கட்டச் (scientific reasons behind indian traditions) சொல்வார்கள். 

பெண்கள் வளையல் போடுவதற்கு எதற்கு?

அந்த காலத்தில் பெண்கள் கை நிறைய வளையல்கள் அணிந்திருப்பார்கள். ஆனால், காலப்போக்கில் ஃபேஷன் என்ற பெயரில் எல்லாம் மறந்துவிட்டார்கள். ஆனால், வளையல் போடுவதன் மூலம் அந்த பகுதியின் புள்ளிகளில் அழுத்தம் ஏற்படுகிறது. இதனால், உடலில் வெள்ளையணு உற்பத்தி அதிகரிக்கிறது. அதுமட்டுமல்லாமல், முக்கியமான ஹார்மோன் சுரப்பும் ரெகுலேட் செய்யப்படுகிறது. இதனால் தான் கர்ப்பிணிகளுக்கு அதிகமான வளையல்கள் போடுவார்கள். இதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் நோய் எதிர்ப்பாற்றல் கூடும். 

மூக்குத்தி அணிவது எதற்கு?

பெண்கள் மூக்கில் இருக்கும் சில புள்ளிகளுக்கும் பெருங்குடல் மற்றும் சிறுகுடலுக்கும் நெருக்கமான தொடர்பு ( scientific reasons behind indian rituals) உண்டு. அந்த புள்ளிகள் தூண்டப்படும் போது அது சமந்தமான நோய்கள் குணமாகுமாம். மூக்குத்தி அணியும் பெண்கள் சில நாட்களில் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் சரியாகி வருவதை உணரலாம். அதுமட்டுமல்லாமல், உஷ்ண வாயுவையும் வெளியேற்றுகிறது. இதனால், தான் அக்காலத்தில் பெண்கள் இரண்டு மூக்குத்தி அணிந்திருப்பார்கள். ஆனால், இந்த காலத்தில் ஒரு மூக்குத்தி அணிவதே பெரும்படாக இருந்துவருகிறது.

பெண்கள் மெட்டி அணிவது ஏன்?

பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒரு வித தொடர்பு உள்ளது. கால் விரலில் மெட்டி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை எப்போதும் பாதிப்படையாமல் இருக்கும். வெள்ளியால் செய்த மெட்டியை பெண்கள் அணியும்போது வெள்ளியில் இருக்ககூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளி இருந்து உடலில் ஊடுருவி நோய்களை நிவாரணம் செய்யும் ஆற்றல் உள்ளது. கர்ப்ப காலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது ஏற்படும் மயக்கம், சோர்வு, வாந்தி, பசியின்மை ஆகியவை குறையும். இதனால், தான் பெண்கள் காலில் மெட்டி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றனர். 

தலையில் பூ வைக்க காரணம்?

நம் வீட்டில் பெரியவர்கள் தலை நிறைய பூ வைக்க சொல்லுவார்கள். இதற்கு காரணம் பூக்களில் உள்ள பிராண ஆற்றல், மூளைச் செல்களால் ஈர்க்கப்பட்டு, நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளின் சீரான இயக்கத்துக்கு உதவுகிறது. இந்த பிராண ஆற்றலானது மன அழுத்தத்தைக் குறைத்து மன அமைதிக்கு உதவுகிறது.

மாதவிடாய் காலத்தில் சுகாதாரமின்மையால் ஏற்படும் மோசமான நோய்த்தொற்று பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பாக இருக்க சில டிப்ஸ்...!!.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்