Sat ,Feb 24, 2024

சென்செக்ஸ் 73,142.80
-15.44sensex(-0.02%)
நிஃப்டி22,212.70
-4.75sensex(-0.02%)
USD
81.57
Exclusive

Vijayakanth Birthday Special: நடிகர் விஜய்காந்த் இவளோ நல்லவரா... இவரை பற்றிய சுவாராஸ்யமான தகவல்கள் சில...

Nandhinipriya Ganeshan August 25, 2022 & 16:20 [IST]
Vijayakanth Birthday Special: நடிகர் விஜய்காந்த் இவளோ நல்லவரா... இவரை பற்றிய சுவாராஸ்யமான தகவல்கள் சில...Representative Image.

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களுள் ஒருவரான விஜயகாந்த், 150 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். தனது ஒவ்வொரு படத்தின் மூலமும் நாட்டின் நிலைமையை அக்குவேறா ஆணிவேராக பிரித்து வைப்பதில் வல்லவர். சினிமா துறையில் அனுபவமிக்க நடிகரான இவர் பல இயக்குனர்களுடன் பணிபுரிந்துள்ளார். அதுமட்டுமல்லாமல், இளைய தலைமுறைகளுக்கு முன் உதாரணமாகவும் திகழ்பவர். சினிமா உலகில் தனது நடிப்பாலும் திறமையாலும் உழைப்பாலும் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டவர். இவர் சினிமாவில் மட்டுமின்றி, அரசியலிலும் தனது திறமையால் பலரது நெஞ்சங்களை கொள்ளையடித்தவர். இன்று தனது 70 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருடைய பிறந்தநாளான இன்று அவரை பற்றி சில சுவாரஸ்யமான உண்மைகளை தெரிந்துக் கொள்ளலாம்.

மக்களால் "கேப்டன்" என்ற செல்லமாக அழைக்கப்படும் விஜயகாந்தின் உண்மையான பெயர் "விஜயராஜ் அழகர்சுவாமி". அதுமட்டுல்லாமல், இவர் நடித்த புலன் விசாரணை என்ற படத்தின் வெற்றிக்குப் பிறகு, 1991 ஆர்.கே.செல்வமணி இயக்கிய "கேப்டன் பிரபாகரன்" என்ற படத்தின் மூலம் இவருக்கு கேப்டன் என்ற புனைப்பெயர் வந்தது. இது அவருடைய 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

காதல், ஆக்ஷன், குடும்பம் என அனைத்துவிதமான படங்களிலும் நடித்துள்ள விஜயகாந்த தனது சம்பளத்தை பற்றி கவலையேப்படமாட்டாராம். இந்த காலத்தில் படத்திற்கு முன்பே சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு மத்தியில், இவர் எப்போதும் படம் முடிந்து வெற்றியடைந்த பிறகே சம்பளம் வாங்குவாராம். அதுவே படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்துவிட்டால் சம்பளத்தை குறைத்தும் வாங்கிக் கொள்வாராம். அதுமட்டுமல்லாமல், துணை வேடத்தில் நடித்த நண்பர்களின் திரைப்படங்களுக்கு சம்பளமே வாங்கமாட்டாராம்.

இவர் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் எந்த பட ஸூட்டிங்கும் கேன்சல் ஆகாதாம். ஒரு நாளில் மூன்று ஷிப்ட்களாக பிரித்துக் கொண்டு 24 மணி நேரமும் இதற்காகவே செலவிடுவாராம். 

திறமையின் மறுஉருவமாக விளங்கும் விஜயகாந்த் மன்சூர் அலிகான், சரத்குமார், அருண் பாண்டியன் மற்றும் பல பெரிய நடிகர்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர். சினிமாவிலும் சரி தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவர்களுடன் ஒரு நல்ல நண்பராக பழகுபவர். 

முன்னணி நடிகராக இருந்து, நடிகர் சங்கத்தை (தென்னிந்திய கலைஞர்கள் சங்கம்) வளர்க்கும் பொறுப்பை ஏற்று, நீண்ட காலம் சங்கத்தின் தலைவராக இருந்தார். தலைவராக பொறுப்பு வகித்த காலத்தில் அவர் சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக பல பொது நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார். அந்த நிதி மூலம், வேலை இல்லாத சினிமா நட்சத்திரங்களுக்கு உதவி செய்து, ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர். இப்படி இவருடைய திறமையையும் தையரித்தையும் அடுக்கிக் கொண்டே போகலாம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்