Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சாப்பிட்டதும் இந்த தப்ப மட்டும் பண்ணிடாதீங்க.. ஆபத்து உங்களுக்கே..

Nandhinipriya Ganeshan September 16, 2022 & 20:00 [IST]
சாப்பிட்டதும் இந்த தப்ப மட்டும் பண்ணிடாதீங்க.. ஆபத்து உங்களுக்கே..Representative Image.

இந்த காலத்தில் முறையாக அமர்ந்து சாப்பிடும் பழக்கமே அதிசயமாக தான் இருக்கிறது. பெட்டில் அமர்ந்து சாப்பிடுவது, மொபைல் பார்த்துக் கொண்டு சாப்பிடுவது, டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிடுவது, பேசிக்கொண்டு சாப்பிடுவது, டிவி பார்த்துக் கொண்டு சாப்பிடுவது ஆக யாரும் நிலத்தில் அமர்ந்து முறையாக சாப்பிடுவதே கிடையாது. இதனால், நம்மில் பலரும் பலவிதமான உடல் உபாதைகளால் பாதிப்படைகிறோம். இதுவே கேள்விக்குரியாக இருக்கும் பட்சத்தில் பலர் ரொட்டீனாக சில பழக்கங்களை பின்பற்றுவார்கள். இனிப்பு சாப்பிடுவது, புகைபிடிப்பது, பீடா போடுவது என ஒரு நீளமான பட்டியலே உண்டு. உண்மையில் உணவு சாப்பிட்டவுடன் செய்யவே கூடாத சில விஷயங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன என்பது பற்றி தெரிந்துக்கொள்வோம்.

குளிக்கக் கூடாது

சாப்பிட்ட உடனேயே குளிக்கும்  பழக்கம் கூடவே கூடாது. ஏனென்றால், நாம் சாப்பிட்ட உடனேயே நமது உடலானது அந்த உணவை செரிமானம் செய்வதற்கான பணிகளை ஆரம்பித்துவிடும். அந்த சமயத்தில் நாம் குளிக்கும்போது கை, உடல், கால்களுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால், உணவு செரிமானத்துக்குச் செல்ல வேண்டிய இரத்த ஓட்டம் குறைந்துவிடும். இது நமக்கு செரிமானம் மந்த நிலை, அசிடிட்டி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்பாகவோ குளிக்கலாம். 

உடனே நடக்கக் கூடாது

சாப்பிட்ட உடனே நடந்தால் நல்லது என்று சிலர் சொல்கிறார்கள். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் தடுக்க, உடனடி நடை உதவும் என்றுகூடச் சிலர் சொல்லலாம். ஆனால், அது முற்றிலும் தவறான ஒன்று. இவ்வாறு நடப்பதால் உணவில் உள்ள சத்துகளை உணவு மண்டலத்தால் எடுக்க இயலாமல், சரியான சத்துக்கள் நம் உடலுக்கு கிடைக்காமல் போய்விடும். அதேபோல், சாப்பிட்ட பிறகு உடற்பயிற்சி செய்வதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

பழங்கள் சாப்பிடக் கூடாது

பலரும் சாப்பிட்ட பிறகு பழங்கள் சாப்பிடுவது நல்லது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், அது தவறு. ஏனென்றால், பழங்கள் சீக்கிரம் ஜீரணமாக்கூடியவை என்பதால் நாம் சாப்பிட்ட பிறகு உண்ட பழங்கள் தான் முதலில் ஜீரணமாகும். அதேபோல், நாம் உண்ட உணவு செரிமானம் ஆகாமல் ஃபுட் பாய்சன் ஆவதற்கும் அதிகம் வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல், காற்றை வாயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்துக்கும் ஆளாக்கும். ஆகவே 2 மணி நேரத்துக்குப் பிறகோ அல்லது உணவு எடுத்துக்கொள்வதற்கு 1 மணி நேரத்துக்கு  முன்போ பழங்களை சாப்பிடுவது நல்லது.

டீ, காபி குடிக்கக் கூடாது

டீ, காபியில் உள்ள ஆக்சலேட் மற்றும் ஃபைலேட், உடல் சாப்பிட்ட உணவுகளில் உள்ள சத்துக்கள் உறிஞ்சுவதை சரியாக நடக்கவிடாமல் தடுக்கும். இதனால், நாம் சாப்பிட்ட உணவில் உள்ள அத்தியாவசியமான சத்தான இரும்பு உடலில் போய் சேராது. எனவே, சாப்பிட்டவுடன் டீ, காபி குடிப்பதை முற்றிலும் தவிர்க்கவும். அதேபோல், தண்ணீரும் குடிக்க கூடாது. 

புகைப்பிடிப்பது கூடாது

சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதலை நமக்கு உண்டாக்குகிறது. உதாரணமாக, பல சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் புற்றுநோய் ஏற்பட எந்த அளவுக்கு ஆபத்து இருக்கோ அந்தளவிற்கு தீங்கான ஒரு செயல். 

தூங்கக் கூடாது

பொதுவாக நம் உடல் சாப்பிட்டவுடனேயே அவற்றை செரிமான செய்ய ஆரம்பித்துவிடும். அப்போது நாம் படுத்துவிட்டோம் என்றால் நாம் உண்ட மேல்நோக்கி வர ஆரம்பித்துவிடும். இதனால், வயிற்றில் உள்ள செரிமான அமிலங்கள் தொண்டை வரை வந்து தொண்டை எரிச்சலை உண்டாக்கிவிடும். மேலும், சாப்பிட்ட உணவு நன்றாக செரிமானம் ஆகாமல் வாய்வு பிரச்சனையை ஏற்படுத்திவிடும். சாப்பிட்டவுடன் தூங்குவது உடல்பருமனாக முக்கிய காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. எனவே மதிய உணவு, இரவு உணவுக்குப் பின் அரை மணி நேரம் கழித்தே தூங்கச் செல்ல வேண்டும். 

இடுப்பு உடையை தளர்த்தக் கூடாது

ஒரு சிலர் சாப்பிட்ட பிறகு லேசாக இருக்கட்டுமென்று இடுப்பில் உள்ள பெல்ட்டை, பெண்கள் பாவாடை அல்லது பேண்ட்டை தளர்த்தி விடுவார்கள். இதனால், சாப்பிட்ட உணவு உடனடியாக குடலுக்கு சென்று விழுவதால் சரியானபடி வேலை செய்ய முடியாமல் செரிமான கோளாறுகளை ஏற்படுத்திவிடும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்