Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

PCOD Problem Symptoms in Tamil: பெண்களே உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தா அலட்சியம் காட்ட வேண்டாம்...!!

Nandhinipriya Ganeshan August 09, 2022 & 15:45 [IST]
PCOD Problem Symptoms in Tamil: பெண்களே உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தா அலட்சியம் காட்ட வேண்டாம்...!!Representative Image.

What is PCOD Prblem in Females in Tamil: இன்றைய காலகட்டத்தில் பருவமடைந்த பெண்கள் முதல் மெனோபாஸ் வயதில் உள்ள பெண்கள் வரை சந்திக்கும் ஒரு பொதுவான கர்ப்பபை சம்பந்தமான பிரச்சனை தான் பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசீஸ் (Polycystic Ovarian Disease). அதாவது, சினைப்பையில் ஏற்படும் நீர்க்கட்டிகளைத்தான் பிசிஓடி என்று சொல்கிறோம். நிபுணர்களின் கூற்றுப்படி, இந்தியாவில் சுமார் 10 முதல் 20 சதவிகித பெண்கள் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிசிஓடி என்பது நோயல்ல, இது உடலில் ஏற்படும் ஹார்மோன் கோளாறுகளால் ஏற்படுகிறது. எனவே, ஒவ்வொரு பெண்ணும் இது குறித்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். 

மெட்ராஸ் ஐ குணமாக என்ன பண்ணனும்..?

PCOD -க்கான காரணங்கள் என்னென்ன?

பிசிஓடி வருவதற்கு காரணம் என்ன என்று கேட்டால், ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ஒருமுறை சினைமுட்டை வெடித்து வெளியேற வேண்டும். அதாவது மதாவிடாய் வெளியேற வேண்டும். அப்படி வெளியேறாமல் சினைப்பையிலேயே தங்கிவிடும். இதனால், ஹார்மோன் பிரச்சனை உருவாகி மாதவிடாய் சுழற்சியில் பிரச்சனை ஏற்பட்டு சினைப்பையில் சிறு சிறு நீர்க்குமிழ்கள் உருவாகும். இதை தான் பிசிஓடி என்கிறோம். ஆனால், ஒரு சிலருக்கு மரபணு மூலமும் இந்த பிரச்சனை வருவதற்கு வாய்ப்புள்ளது.

உடலில் புழுக்கள் அதிகமாக இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்..

PCOD -யின் அறிகுறிகள் என்ன?

ஒழுங்கற்ற மாதவிடாய்

அளவுக்கு அதிகமாக முடி கொட்டுதல்

முகம், மார்பு, முதுகு போன்ற இடங்களில் அதிகப்படியான முடி வளர்ச்சி

முகப்பரு தோன்றுதல்

உடல் பருமன் அல்லது திடீர் எடை அதிகரிப்பு

கைகள், கழுத்து, மார்பகங்கள் மற்றும் தொடைப் பகுதிகளில் கருப்பாக இருத்தல்.

மனச்சோர்வு மற்றும் கவலை

இருப்பினும் ஒரு சில பெண்கள் கர்ப்பம் தரிப்பதில் சிரமம் ஏற்படும் வரை மேற்கூறிய அறிகுறிகள் தென்படாமல் போகலாம். 

அடிக்கடி ஒற்றை தலைவலி வருவதற்கு இதுதான் காரணமாம்.. 

சிக்கல்கள்:

பிசிஓடி உள்ள பெண்களில் முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை என்றால் உயர் இரத்த அழுத்தம், டைப் 2 சர்க்கரை நோய், எண்டோமெட்டீரியல் கேன்சர், இதயப் பிரச்சனைகள், குறிப்பாக கருவுறாமை உள்ளிட்ட மோசமான பிரச்சனைகளையும் எதிர்க்கொள்ளக்கூடும். எனவே, 20 வயதிற்கு மேல் உள்ள அனைத்துப் பெண்களும் மேற்கூறிய அறிகுறிகளை இருந்தால் உடனே மருத்துவரை சந்தித்து பரிசோதனைகளை செய்து உறுதி செய்துக் கொண்டு முறையான சிகிச்சைகளை பின்பற்ற தொடங்குங்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்