Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Jaggery Benefits in Tamil: உருண்டை வெல்லத்தில் இருக்கும் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்....! 

Nandhinipriya Ganeshan September 03, 2022 & 15:30 [IST]
Jaggery Benefits in Tamil: உருண்டை வெல்லத்தில் இருக்கும் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்....! Representative Image.

Jaggery Benefits in Tamil: வெல்லம் என்பது சர்க்கரையின் தூய்மையான, சுத்திகரிக்கப்படாத வடிவமாகும். மேலும், இது பல உணவுகளில் ஆரோக்கியமான இனிப்புப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது சர்க்கரையைவிட ஆரோக்கியமானதும் கூட. உருண்டை வெல்லம் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், இரும்பு, மெக்னீசியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் வளமான மூலமாகும்.

வெல்லத்துடன் இந்த உணவுப்பொருட்களை சேர்த்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..

முடி பராமரிப்பு, தோல் பராமரிப்பு மற்றும் அனைத்து ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக விளங்குகிறது. பொதுவாக, நாம் அன்றாடம் பயன்படுத்தும் சர்க்கரையில் ஒரு ஊட்டச்சத்து நன்மைகளும் கிடையாது, ஏனெனில் சுத்திகரிப்பு சுழற்சியின் போது அதன் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் வெளியேற்றப்படுகின்றன. அதை உணவில் சேர்ப்பது உடலின் ஆரோக்கியத்தை கெடுக்கும். அதுமட்டுமல்லாமல், சளி, காய்ச்சல், தோல் எரிச்சல் போன்ற பல உடல்நல அபாயங்களை உருவாக்குகிறது. இதனால் தான் அக்காலங்களில் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை (Brown Sugar Benefits in Tamil) தினசரி உணவில் பயன்படுத்தி வந்தார்கள்.

சளி மற்றும் காய்ச்சலுக்கு

வெல்லத்தில் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகளவில் இருக்கிறது, இதனால் உடலை பொதுவான காய்ச்சல் மற்றும் இருமல் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இது காய்ச்சல் போன்ற அறிகுறிகளைத் தடுக்க எளிதான மற்றும் பயனுள்ள வீட்டு வைத்தியம். தேநீரில் சர்க்கரைக்குப் பதிலாக சிறிதளவு வெல்லம், இஞ்சி பொடி போன்றவற்றை போட்டு நன்றாக கொதிக்க வைத்து குடித்தால், இருமல், சளி பறந்து போகும்.

மாதவிடாய் காலத்தில்

வெல்லத்தில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, மேலும் இது மாதவிடாய் பிரச்சனைகளுக்கு, குறிப்பாக மாதவிடாய் பிடிப்புகளுக்கு சிறந்த இயற்கை சிகிச்சையாகும். வெல்லத்தை சேர்த்துக் கொண்டால், எண்டோர்பிங்களை வெளியிட உதவுகிறது, இதனால் மாதவிடாய் காலத்தில் பிடிப்பு, வலி, சோர்வு எல்லாம் பறந்து போகும். அதுமட்டுமல்லாமல், உடலில் ஹாப்பி ஹார்மோன்களையும், இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. ஒரு நாளைக்கு இரண்டு முறை சிறிதளவு வெல்லம் சேர்த்த வெதுவெதுப்பான பாலைக் குடித்து வர, மாதவிடாய் கால பிரச்சனைகளில் (benefits of Nattu Sakkarai) இருந்து விரைவில் விடுபடலாம்.

தோல் ஆரோக்கியம்

குளிர்காலங்களில் சருமம் மிகவும் வறண்டு காணப்படும். எனவே ஆரோக்கியமான மற்றும் மென்மையான சருமத்தைப் பெற நீங்கள் அவற்றைப் பற்றி அதிக கவனம் செலுத்த வேண்டும். அந்த வகையில், தினமும் வெல்லம் சாப்பிடுவதன் (nattu sakkarai health benefits) மூலம் உடலுக்கு ஊட்டச்சத்தை அளித்து, பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். இது பருக்கள், முகப்பரு, சுருக்கங்கள் மற்றும் கரும்புள்ளிகள் போன்ற சரும பிரச்சனைகளில் இருந்தும் பாதுகாக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

வெல்லம் மனித உடலில் உள்ள சில நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராடுகிறது, ஏனெனில் இதில் அதிக அளவு தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. காற்றில் உள்ள நச்சு மாசுக்களிலிருந்து உங்கள் நுரையீரலைப் பாதுகாக்கவும் வெல்லம் உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், இதில் இரும்புத்து வளமாக இருப்பதால் இரத்தசோகை வராமல் தடுக்கிறது.

அஜீரணப் பிரச்சனைகளுக்கு

அஜீரணத்திற்கு முக்கிய காரணம் பலவீனமான செரிமான நொதிகள். வெல்லம் வயிற்றில் உள்ள செரிமான நொதிகளை செயல்படுத்துகிறது, இதனால் உணவு சரியாக செரிமானமடைந்து அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளை குறைக்கிறது.

எடை இழப்புக்கு

வளர்சிதை மாற்றம் தொப்பை பகுதியைச் சுற்றியுள்ள கொழுப்பை வேகமாக எரிக்க உதவுகிறது. அந்த வகையில், வெல்லத்தில் பொட்டாசியத்தின் அளவு அதிகளவில் உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதற்கும் உடலில் நீர் தக்கவைப்பைக் குறைப்பதற்கும் பொறுப்பு வகிக்கிறது. எனவே, இத்தனை மருத்துவகுணம் நிறைந்த உணவை சரியான அளவுகளில் உட்கொள்வது எடை இழப்புக்கு உதவி செய்யும்.

பனை வெல்லத்தின் அற்புத நன்மைகள்...

Jaggery benefits in tamil, brown sugar benefits in tamil, benefits of Nattu Sakkarai, nattu sakkarai health benefits


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்