Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

மிகவும் இளம்வயதிலேயே மாரடைப்பு வருவதற்கான காரணம் என்ன..?

Nandhinipriya Ganeshan September 02, 2022 & 16:20 [IST]
மிகவும் இளம்வயதிலேயே மாரடைப்பு வருவதற்கான காரணம் என்ன..?Representative Image.

Reasons for Heart Attack in Young Adults: மாரடைப்பு என்பது ஒரு பொதுவான இருதய நோய். ஆண் பெண் என வேறுபாடின்றி ஏற்படும் இந்த மாரடைப்பு, இப்போது வயது வித்தியாசம் இல்லாமல் மக்களை பாதித்து வருகிறது. இதற்கு காரணம் தொழில்நுட்ப வளர்ச்சி. நவீன யுகம் என்ற பெயரில் நம் ஆரோக்கியத்தை நாமே கெடுத்து கொண்டு வருகிறோம். உதாரணமாக, ஸ்மார்ட்ஃபோனை சொல்லலாம். உலகமே உள்ளங்கையில் வந்துவிட்டது. ஒரு ஸ்மார்ட்ஃபோன் இருந்தாலே போதும். உண்ணும் உணவிலிருந்து உடுத்தும் உடை வரை அனைத்தையும் இருக்கும் இடத்துக்கே வரவழைத்து விட முடியும். அந்த அளவிற்கு உலகம் சுருங்கிவிட்டது. 


பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள்..


இதனால், அனைவரும் எதற்கு எடுத்தாலும் மொபைல் போனையே நாடுகிறோம். நடைப்பயிற்சி, உடல் உழைப்பு என்பதையே மறந்துவிட்டது. முன்பெல்லாம் வீட்டில் உறவினர்கள் கூடி மகிழ்ந்து பேசி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவோம். ஆனால், இப்போதோ எதற்குகெடுத்தாலும் வீடியோ கால் தான், உணர்வுகள் அனைத்தும் சோஷியல் மீடியாவில் பகிர்ந்துக்கொண்டு மகிழ்ச்சியை முழுவதும் தொழில்நுட்ப பக்கமே செலவிடுகிறோம். இதனால், இயற்கையான சிரிப்பு, மகிழ்ச்சி என எல்லாமே புதைந்துப்போய்விட்டன. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் முன்னோர்கள் நமக்கு வகுத்துக்கொடுத்த வாழ்க்கை முறையை முற்றிலும் தொலைத்துவிட்டோம்.


மாரடைப்பு வருதற்கான அறிகுறிகள் என்னென்ன? 


இதனால் மனகவலை, சோர்வு, உடற்பருமன், தனிமை போன்றவற்றில் சிக்கிக்கொள்கிறோம். இவையே உயிரை பறிக்கும் இருதய நோய்களுக்கு காரணமாக அமைகின்றன. இதுமட்டுமல்லாமல், பல காரணிகளும் இளம்வயதிலேயே மாரப்படைப்பை ஏற்படுத்தலாம். அவையாவன;

போதைப்பொருள் பயன்படுத்துவது

புகைப்பழக்கம்

அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வது

உடல் பருமன்

உயர் இரத்த அழுத்தம்

நீரிழிவு நோய்

மோசமான உணவுப்பழக்கங்கள்

உடல் செயல்பாட்டில் ஈடுபாடமல் இருப்பது

மனக்கவலை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்