Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் உடற்பயிற்சிகள்..! | Brain Exercises for Increasing Brain Power in Tamil

Gowthami Subramani Updated:
மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் உடற்பயிற்சிகள்..! | Brain Exercises for Increasing Brain Power in TamilRepresentative Image.

நம் உடல்நலத்தைப் பேணிப்பாதுகாக்கும் வகையில், தினந்தோறும் உடற்பயிற்சி செய்து வருகிறோம். அந்த வகையில், நம் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றிற்கும் பல்வேறு விதமான உடற்பயிற்சி உள்ளது. உடல் உறுப்புகளுக்குத் தேவையான சத்துக்களை உணவுப் பொருள்கள் மூலமாகப் பெறுகிறோம். அதே போல, உடல் உறுப்புகளுக்குத் தேவையான வலிமையை உணவின் மூலமும், உடற்பயிற்சி செய்வதன் மூலமும் பெறலாம். வயிறு, கால், கை, முகம் என ஒவ்வொரு உறுப்பிற்கும் தனித்தனியே உடற்பயிற்சி உள்ளது. அதன் படி, நம் உடல் உறுப்புகளை இயங்கச் செய்யும் மூளையின் வளர்ச்சியை அதிகரிக்கவும் உடற்பயிற்சி இருக்கிறது. அவற்றைப் பற்றி இங்குக் காணலாம்.
 

மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் உடற்பயிற்சிகள்..! | Brain Exercises for Increasing Brain Power in TamilRepresentative Image

மூளை வளர்ச்சி

நாம் நிறைய சத்துள்ள உணவுப் பொருள்களையும், குறிப்பாக காய்கறிகளை உண்பதன் மூலமாக, நம் மூளைக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கப் பெறுகின்றன. அதே போல, வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் உண்பதன் மூலமாக மூளை வேலை செய்யும் திறன் அதிகரிக்கும் என்பதைக் கேள்விப் பட்டிருப்போம். உணவுப் பொருள்கள் இருப்பது போல, உடற்பயிற்சி செய்வதன் மூலமும், மூளை வேலை செய்யும் திறனை அதிகரிக்கலாம்.
 

மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் உடற்பயிற்சிகள்..! | Brain Exercises for Increasing Brain Power in TamilRepresentative Image

The Gibberish Game

மூளை வளர்ச்சிக்கு உதவும் Gibberish விளையாட்டைப் பற்றிப் பார்ப்போம். இந்த விளையாட்டில், சில வித்தியாசமான வார்த்தைகள் அடங்கிய வரிகளைப் படிக்க வேண்டும்.

இதை நாம் வேகமாகப் படித்துப் பார்க்கும் போது, எதாவது பொருள் தரும் வகையில் தோன்றும். இதனைக் கண்டுபிடிப்பதன் மூலமாகவோ, இந்த வரிகளைப் புரிந்து கொள்வதன் மூலமாகவோ நம் மூளைக்கு வேலை கொடுப்பதாக அமையும். இது மூளையின் திறனை அதிகரிக்கும்.

உதாரணம்: High Dance EEK

இந்த வார்த்தையை வேகமாகப் படிக்கும் போது, நமக்கு ஒரு அர்த்தமுள்ள, புரியக்கூடிய வார்த்தையாகக் கிடைக்கும். அதாவது Hide And Seek என்று கிடைக்கும். இது போல, பல்வேறு வார்த்தைகளை வேகமாகப் படிக்கும் போது, நம் மூளை தன்னிச்சையாக அதற்கான பொருளைத் தரும்.

மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் உடற்பயிற்சிகள்..! | Brain Exercises for Increasing Brain Power in TamilRepresentative Image

The Schulte Table

சிறு வயதில் நாம் விளையாடும் சில விளையாடுகள் மூளைக்கு பயிற்சி தருபவையாக இருந்திருக்கும். அந்த வகையில் நாம் விளையாடிய Bingo விளையாட்டும் மூளைக்கு வளர்ச்சியைத் தரக்கூடியதாக அமையும். இது போல, நிறைய எண்கள் கலவையாக உள்ளவாறு எடுத்து, அதில் உள்ள எண்களை 1,2,3 என ஆர்டராக குறிப்பிட்ட நேரத்திற்குள் கண்டுபிடிக்க வேண்டும். இந்த விளையாட்டை தினந்தோறும் நாம் செய்து பார்ப்பதன் மூலம், நமது மூளை வளர்ச்சி அதிகரிப்பதுடன், கண் பாதுகாப்புக்கும் உதவுகிறது.
 

மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் உடற்பயிற்சிகள்..! | Brain Exercises for Increasing Brain Power in TamilRepresentative Image

Spot Jogging or Running

ஒரு இடத்தில் நின்று ஜாகிங் அல்லது ரன்னிங் செய்வதன் மூலமும், நமது மூளைத் திறனை மேம்படுத்தலாம். ஸ்மார்ட் வாட்ச் போன்ற நேரத்தைக் கணக்கிடும் கருவிகளைக் கொண்டு, நீங்கள் ஜாகிங் அல்லது ராகிங் செய்யலாம். இதில், உங்கள் இதய துடிப்பானது 150BPM அளவாக இருக்க வேண்டும். முடிந்த அளவு வேகமாக ஒரே இடத்தில் ஓடலாம். இல்லையெனில் ஜாகிங் செய்யலாம்.

இது ஏன் செய்யப்படுகிறது எனில், ஓடும் போது இரத்த ஓட்டம் அதிகமாகும். இதன் மூலம், ஆக்ஸிஜன் அளவு சீராகும். இவ்வாறு, ரன்னிங் செய்வதன் மூலம் Brain-Derived Neurotrophic Factor (BDNF) என்ற புரோட்டீன் உறத்தியாகிறது. இது மூளைக்குச் செயல்திறனை அதிகரிப்பதுடன், ஈடுபாட்டையும் அதிகரிக்கச் செய்கிறது.

மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் உடற்பயிற்சிகள்..! | Brain Exercises for Increasing Brain Power in TamilRepresentative Image

Hand Gestures

இந்த வகை உடற்பயிற்சியானது, மூளைக்கு பயிற்சி தரக்கூடியதாக அமையும். நாம் ஒரு விஷயத்தில் எவ்வளவு ஈடுபாட்டுடன் இருக்கிறோம் என்பதை எடுத்துக் கூறுகிறது. ஒருவர் ஒரு விஷயத்தில் முழு ஈடுபாட்டுடன் இருக்கும் போது அதில், எந்த குழப்பமும், தவறும் நேரிடாது.

இதற்கு உதாரணமாக, வீட்டில் சாமிக்கு பூஜை செய்யும் போது ஆரத்தி காட்டுவதைச் சொல்லலாம். ஆரத்தி காட்டும் போது, ஒரு கையில் கற்பூரத் தட்டை சுற்றும் போது, மறு கையில் மணி அடிப்பது வழக்கம். இவ்வாறு செய்யும் போது, இரு கைகளும் நாம் மூளையின் செயல்பாட்டிற்கு ஏற்றாற் போல செய்ய வேண்டும்.

மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் உடற்பயிற்சிகள்..! | Brain Exercises for Increasing Brain Power in TamilRepresentative Image

Say the Color

இந்த வகை விளையாட்டில், நாம் உண்மையான நிறத்தைப் பற்றி கூறுவது. இதில் கலரின் பெயர்களை வெவ்வேறு கலர் கொண்டு எழுதி வைக்க வேண்டும். அதில் கலரின் பெயர் வரும் போது, அந்த எழுத்தின் கலர் சொல்லாமல் அந்த கலரின் பெயரைச் சொல்ல வேண்டும். இது ஒருவரின் ஞாபகச் சக்தியை அதிகரிக்கும் வகையில் அமையும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்