Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Kitchen Tips and Tricks in Tamil: இல்லத்தரசிகளுக்கு பயனுள்ள 10 புதிய கிச்சன் டிப்ஸ்...!!

Nandhinipriya Ganeshan May 29, 2022 & 11:35 [IST]
Kitchen Tips and Tricks in Tamil: இல்லத்தரசிகளுக்கு பயனுள்ள 10 புதிய கிச்சன் டிப்ஸ்...!!Representative Image.

Kitchen Tips and Tricks in Tamil:

1. டீ வைத்து மீதியாகும் சக்கையை கொண்டு எண்ணெய் பாத்திரங்களை துலக்கினால், எண்ணெய் பசை எளிதில் நீங்கும். கை வலியும் மீதி.

2. இனிப்பு பலகாரங்களில் எறும்பு வராமல் இருக்க கொஞ்சம் கிராம்புகளை அதில் போட்டு வைக்கவும். அந்த வாசனையால் எறும்பு வரவே வராது.

3. தரையில் கைத்தவறி எண்ணெய் கொட்டிவிட்டால், உடனே துணியை கொண்டு துடைக்க வேண்டாம். அதன்மீது கோலப்பொடியை தூவி துடைத்து பாருங்கள் எண்ணெய் பசை இருக்காது.

4. குழம்பில் புளி அதிகமாகி விட்டால் சிறிதளவு உருண்டை வெல்லத்தை சேருங்கள். புளிப்பு சுவை உடனே (useful kitchen tips in tamil) குறைந்துவிடும்.

5. என்ன பண்ணாலும் சப்பாத்தி மிருதுவாக வரவில்லை. கவலையை விடுங்க... கோதுமையை நன்கு கழுவி, அதை நான்கு மணி நேரம் ஊற வைத்து நன்றாக வெயிலில் காயவைத்து பின் மிஷினில் அரைத்து சப்பாத்தி செய்தால் மிருதுவான சப்பாத்தி ரெடி.

6. பொதுவாக, வெங்காயம், பூண்டு, முட்டை சமைத்த பாத்திரங்களில் நாம் என்னதான் சோப்பு போட்டு விலக்கினாலும், அதில் இருக்கும் வாடை நீங்காது. அதற்கு பாத்திரத்தில் சிறிதளவு உப்பு போட்டு தேய்த்து பின்னர் தண்ணீரில் கழுவினால் வாடை போய்விடும்.

7. நாம் வாங்கிய கருப்பட்டியில் கொஞ்சம் நாள் கடந்த பின் மேல்புறம் புள்ளிப் புள்ளியாக மாறும். அது பதநீரில் சுண்ணாம்பு சேர்ப்பதால் தான் ஏற்படுகிறது. ஆனால், போலியான கருப்பட்டியில் இந்த மாதிரியான புள்ளிகள் வராது. 

8. தோசை மாவு ரொம்ப புளித்து விட்டதா? உடனே எடுத்து கீழே கொட்டாமல், அதில் கால் டீஸ்பூன் உப்பு, அரை டம்ளர் வெந்நீரை ஊற்றிக் கலக்கி, தோசை சுட்டால் புளிப்பு தன்மை குறைந்து ருசியும் அமோகமாக இருக்கும். 

9. பால் திரிந்துவிட்டால், கீழே கொட்டாமல் அதில் 4 ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து கலக்கி, அடுப்பில் வைத்து 2 நிமிடம் கிளறி இறக்கினால் நொடி பொழுதில் பால்கோவா ரெடி. 

10. பூரிக்கு மாவு பிசையும் போது தண்ணீருக்கு பதில் வெந்நீருடன் சிறிது பாலும் சேர்த்து பிசைந்தால் பூரி நன்கு உப்பியும், மிருதுவாகவும் (kitchen useful tips in tamil) வரும். 

உங்க வீட்டை அலங்கரிக்கும் அழகான குட்டி குட்டி செடிகள்...!! இனி உங்க வீடும் மாடர்னாக தான் இருக்கும்..!!

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்த ளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்