Tue ,Mar 05, 2024

சென்செக்ஸ் 73,872.29
66.14sensex(0.09%)
நிஃப்டி22,405.60
27.20sensex(0.12%)
USD
81.57
Exclusive

Relationship Tips in Tamil: பெண்களே.... திருமணத்துக்கு அப்புறம் தப்பி தவறிக் கூட இந்த விஷயங்களை மட்டும் உங்க கணவரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள்..!!

Nandhinipriya Ganeshan May 28, 2022 & 14:25 [IST]
Relationship Tips in Tamil: பெண்களே.... திருமணத்துக்கு அப்புறம் தப்பி தவறிக் கூட இந்த விஷயங்களை மட்டும் உங்க கணவரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள்..!!Representative Image.

Husband and Wife Relationship Tips in Tamil: எல்லா ஆணுக்கும், பெண்ணுக்கும் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான மற்றும் மகிழ்ச்சிகரமான தருணம் என்றால் அது திருமணம் தான். திருமணத்துக்கு பின் நடக்கும் விஷயங்களை ஒருவருக்கொருவர் எதையும் மறைக்காமல் பகிர்ந்து கொள்வது இயல்பான ஒரு விஷயம் தான். கட்டாயமும் கூட, ஏனெனில் பின்னாளில் வரும் பிரச்சனைகளை சமாளிக்க ஒரே வழி இதுதான். 

ஆனால், அதற்காக திருமணத்துக்கு முன்பு நடந்த அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எந்த அவசியமும் கிடையாது. ஒருவேளை நான் எதையும் மறைக்கமாட்டேன் என்று உங்க துணையுடன் அனைத்தையும் கொட்டி தீர்த்துவிட்டீர்கள் என்றால், அதுவே எதிர்காலத்தில் பெரிய ஆப்பாக வந்து நிற்கும். ஆரம்பத்தில் கண்டுக்கொள்ளாது போல தான் இருப்பார்கள். போக போக இருவருக்கும் இடையே ஈகோ வெடிக்க ஆரம்பமாகும். அப்புறம் என்ன பிரச்சனை தான். அந்த வகையில், பெண்கள் தங்களுடைய கணவனிடம் எந்தெந்த விஷயங்களை சொல்லக் கூடாது என்பதை பற்றி பார்க்கலாம்.

கணவரின் குடும்பம்

ஒரு சில பெண்களுக்கு திருமணத்துக்கு பின் கணவருடைய குடும்பத்தையோ அல்லது அவருடைய அம்மாவை பிடிக்காமல் போய்விடுகிறது. திருமணத்துக்கு பிறகு எல்லா பெண்களும் இந்த மாதிரி நடந்துக் கொள்வது இயல்பு தான். ஆனால், அதை ஒருபோதும் உங்க துணையுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். ஏனெனில், எந்த ஆணுக்கும் முதலில் அவங்க அம்மா தான். அவரையே நீங்க பிடிக்கவில்லை என்று சொன்னால் உங்களையும் பிடிக்காமல் போய்விடும். தப்பி தவறிக் கூட இதை மட்டும் செஞ்சிடாதீர்கள். 

உங்களுடைய பிரேக் அப்

எல்லா பெண்ணுக்கும் ஆணுக்கும் திருமணத்துக்கு முன்பு ஒரு பழைய காதல் கண்டிப்பாக இருக்கும். அப்படி, உங்களுக்கு கல்யாணத்து முன்பு ஏதேனும் காதல் இருந்து, அந்த காதலருடன் பிரிவு ஏற்பட்டிருந்தால் அதை பற்றி கணவரிடம் சொல்லாமல் இருப்பது ரொம்பவே நல்லது. பொதுவாக, புதுத் தம்பதிகள் ஒருவருக்கொருவர் சுவாரஸ்யமாக பேசிக்கொள்வது வழக்கம். அப்போது ஆண்கள் தங்களுடைய பழைய காதலை பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்வார்கள். 

பகிர்ந்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல், உங்களிடமும் கேட்பார்கள். உடனே நீங்களும் உணர்ச்சி வசப்பட்டு உங்களுடைய முன்னால் காதலை பற்றி சொல்லிவிட்டீர்கள் என்றால், எதிர்காலத்தில் அதுவே மிகப்பெரிய பிரச்சனையாக தலைதூக்கும். அதன் பின், உங்களுடைய ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கண்காணிக்க ஆரம்பிப்பார்கள். அதன்பின், என்ன நடக்கும் என்று உங்களுக்கே தெரியும். எனவே, கவனமாக இருங்கள்.

முன்னால் காதலருடன் நட்பு

திருமணத்திற்கு முன்பு நீங்க யாரையாவது காதலித்து இருக்கலாம். ஏதாவது, சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்திருப்பீர்கள். ஆனால், உங்களுக்கு திருமணப்பிறகு எதிர்ப்பாராத விதமாக சந்தித்து இருக்கலாம். பழைய காதலை மறந்து நட்பை தொடர விரும்பி நண்பர்களாக மாறி சகஜமாக பேசிக்கொண்டிருக்கலாம். ஆனால், இவர் உங்களுடைய முன்னாள் காதலர் என்ற விஷயத்தை மட்டும் உங்கள் கணவரிடம் சொல்லி விடாதீர்கள். ஏனெனில், எதிர்க்காலத்தில் கணவன், மனைவி உறவிலும் சரி உங்களுடைய நட்பிலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். 

உடலமைப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள்

ஒவ்வொரு பெண்ணுக்கும் தங்களுடைய கணவர் ஃபிட்டாகவும் கவர்ச்சியான உடலமைப்புடனும் இருக்க வேண்டும் என்ற ஆசை இருப்பது சகஜம் தான். அதேப்போல தான் ஆணுக்கும். ஏனெனில், உடல் சார்ந்த கவர்ச்சி தான் கணவன், மனைவி உறவுக்கு இடையில் கூடுதலான அந்நியோன்யத்தை ஏற்படுத்தும். 

ஒருவேளை உங்கள் கணவர் குண்டாகவோ அல்லது உடலில் ஏதேனும் பிழை இருப்பின் அதை அவர்களிடம் மறைமுகமாக சொல்லி தான் அவரை மாற்ற முயற்சி செய்ய வேண்டும். அப்படி இல்லாமல், நேரடியாக சொல்லிவிட்டீர்கள் என்றால், ஆண்களுக்கு அது மிகப்பெரிய ஈகோ பிரச்சனையாக மாற வாய்ப்பு உண்டு. அதனாலையே நீங்க விளையாட்டாக பேசினாலும் அது விபரீதமாக தான் முடியும். அதுமட்டுமல்லாமல், இருவருக்கும் இடையில் இருக்கும் காதலும், அன்பும் குறைந்து வெறுப்பு ஆரம்பித்து விடும். 

அந்த மாதிரியான விஷயங்கள்

ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி மனதில் ஆபாசங்கள் தோன்றுவது மனித இயல்புகளில் ஒன்று தான். உங்களுடைய அந்த மாதிரியான விருப்பங்கள் மற்றும் ஆசைகள் போன்றவற்றை கணவராகவே இருந்தாலும் கூட சொல்லாமல் இருப்பது தான் நல்லது. ஆண்களுக்கும் அந்த மாதிரியான எண்ணங்கள் ஏற்படும் அதை குறிப்பிட்ட எல்லைக்கு மேல் மனைவியிடம் வெளிபடுத்த மாட்டார்கள். ஒருவேளை நீங்க இந்த மாதிரியான விஷயங்களை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் போது அவர்கள் உங்களை பற்றி தவறாக நினைக்கவும் வாய்ப்புள்ளது. 

ஆபீஸ் சம்பந்தமான விஷயங்கள்

இந்த காலத்தில் முக்கால் வாசி பெண்கள் வேலைக்கு செய்கிறார்கள். நீங்க உங்க கணவரிடம் வெளிப்படையாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும் என்று அங்கு நடக்கும் பிரச்சனைகளையோ, ஆபீஸ் நண்பர்களையோ அல்லது அவர்களுடைய குடும்ப பிரச்சனைகளையோ போன்றவற்றை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. எப்போதும் ஆபீஸ் சம்பந்தமாகவே பேசிக் கொண்டிருப்பது அவர்களை எரிச்சலடைய செய்யும். பிறகு, உறவில் விரிசல் விழும். 

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்த ளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்