Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tips to Maintain Hygiene During Periods: மாதவிடாய் காலத்தில் ஏற்படும் மோசமான நோய்த்தொற்று பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பாக இருக்க சில டிப்ஸ்...!!

Nandhinipriya Ganeshan May 28, 2022 & 11:43 [IST]
Tips to Maintain Hygiene During Periods: மாதவிடாய் காலத்தில் ஏற்படும் மோசமான நோய்த்தொற்று பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பாக இருக்க சில டிப்ஸ்...!!Representative Image.

World Menstrual Hygiene Day 2022: உலகின் பல பகுதிகளில் மாதவிடாய் இன்னும் அபச்சாரமான ஒன்றாக தான் பார்க்கப்படுகிறது. பருவமடைந்த பிறகு ஒவ்வொரு பெண்ணுக்கும் இது ஒரு இயற்கையான நிகழ்வு என்றாலும், இது இன்னும் "சாதாரணமானது" தான் என்று எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. இந்த மாதிரியான நேரத்தில் பல பெண் குழந்தைகளுக்கு சானிட்டரி பேட் அல்லது பயன்படுத்திய துணிகளை பாதுகாப்பாக அகற்றுவது கூட தெரிவதில்லை. இது சிறுநீர் தொற்றுக்கு வழிவகுப்பது மட்டுமல்லாமல், சரியான நேரத்தில் கவனிக்கப்படாவிட்டால் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும். 

உலக மாதவிடாய் சுகாதார தினம் மே 28 கொண்டாடுவதற்கான காரணம்:

அந்த வகையில், மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான நடைமுறைகளை வழங்கவும், அவநம்பிக்கையை உடைக்கவும், உலக மாதவிடாய் சுகாதார தினம் மே 28 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. மேலும், ஒவ்வொரு பெண்ணும் 28 நாட்களுக்கு பிறகு மாதவிடாய் சுழற்சியை எதிர்க்கொள்கிறார்கள். அதைத் தான் இந்த 28 என்ற தேதி குறிக்கிறது. 

அதோபோல், சராசரி மாதவிடாய் என்பது ஐந்து நாட்கள் நீடிக்கும், இந்த ஐந்து நாட்களின் எண்ணிக்கையை தான் ஐந்தாவது மாதமான "மே" குறிக்கிறது. எனவே, ஒரு பெண்ணின் உடலில் ஏற்படும் மாற்றத்தைக் குறிக்கவும், அதற்கு ஒரு அர்த்தம் கொடுக்கவும் மே 28 உலக மாதவிடாய் சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, உலக மாதவிடாய் சுகாதார தினத்தின் கருப்பொருள் ‘2030-க்குள் மாதவிடாயை வாழ்க்கையின் சாதாரண விஷயமாக மாற்றுவதே" ஆகும். மேலும், இந்த நாளில் மாதவிடாயின் போது ஏற்படும் சுகாதாரமின்மையால் உண்டாகும் சில பொதுவாக பிரச்சனைகள் பற்றி பார்க்கலாம். 

1. ஈஸ்ட் தொற்று | Yeast infection

ஒவ்வொரு முறை சானிட்டரி நாப்கின்களை மாற்றிய பிறகு கைகளை சோப்பு போட்டு கழுவது நல்லது. இது ஈஸ்ட் தொற்று வராமல் பாதுகாக்கும். 

2. பூஞ்சை தொற்று | Fungal infections 

பேட், கப் அல்லது டேம்பான்ஸ்  போன்றவற்றை அதிக நேரம் அணிந்தால் பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. பேட் ஈரமாக இருந்தால் பாக்டீரியா செழித்து வளர ஆரம்பிக்கும். இதனால், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள், பிறப்புறுப்பு நோய்த்தொற்றுகள் போன்றவற்றால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். அதுமட்டுமல்லாமல், பேட் லைனிங் மெல்லிய தோலுக்கும் எரிச்சலை ஏற்படுத்தலாம். 

3. டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம் | Toxic shock syndrome

டேம்பானை நீண்ட நேரம் உள்ளே வைத்திருந்தால், அது டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம் என்ற நோய்த்தொற்றை ஏற்படுத்தும். இது ஒருவிதமான பாக்டீரியா தொற்றின் காரணமாக ஏற்படும் நோய்த்தொற்று ஆகும். 

4. பாக்டீரியா வஜினோசிஸ் | Bacterial vaginosis

இது இயற்கையாகவே பிறப்பு உறுப்பில் காணப்படும் பாக்டீரியாக்களின் அதிகப்படியான வளர்ச்சியால் ஏற்படும் ஒரு வகை வஜினா அழற்சி, மற்றும் இது இயற்கை சமநிலையை சீர்குலைத்துவிடும். மாதவிடாய் காலங்களில் சுத்தமாக இல்லாததால் இந்த மாதிரியான நோய்த்தொற்று ஏற்படுகிறது.

5. இனப்பெருக்க பாதை தொற்று | Reproductive tract infections

இனப்பெருக்க பாதை நோய்த்தொற்றுகள் பிறப்புறுப்பில் ஏற்படும் தொற்றுகள். மாதவிடாய் காலங்களில் சுகாதாரமின்மை மற்றும் நாட்டில் தற்போதுள்ள பெரிய சுகாதார பிரச்சனைகள் காரணமாக கூட இம்மாதிரியான நோய்த்தொற்றுகள் ஏற்படலாம்.

மாதவிடாய் காலத்தில் இந்த சுகாதார குறிப்புகளை பின்பற்றுங்கள்:

ஒவ்வொரு ஐந்து மணி நேரத்திற்கும் ஒருமுறை சானிட்டரி பேட் அல்லது டேம்பனை மாற்ற மறந்துவிடாதீர்கள். குறிப்பாக, மாதவிடாய் கப் (menstrual cup) கழுவ வேண்டும். மாதவிடாய் கப்களில் அளவு பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள். எனவே, மாதவிடாய் கப் பயன்படுத்த விரும்பினால், மகளிர் மருத்துவரிம் ஆலோசனை (menstrual hygiene tips for school students) கேட்டுக்கொள்ளுங்கள். 

உங்கள் பிறப்புறுப்பை சுத்தமாக வைத்திருப்பது அவசியம். பின்பக்கத்திலிருந்து முன்னால் கழுவினால், ஆசனவாயில் இருந்து யோனி அல்லது சிறுநீர்க்குழாய் திறப்புகளுக்கு பாக்டீரியாக்கள் பரவி, தொற்றுநோய்களுக்கு ஆளாக நேரிடும். எனவே, மேலிருந்து அதாவது முன்புறத்திலிருந்து கீழ் நோக்கி கழுவ வேண்டும். கழுவிய பிறகு கட்டாயம் ஒரு சுத்தமான துணியைக் கொண்டு துடைத்துவிட்டு தான் பேட் பயன்படுத்த வேண்டும். மேலும், மாதவிடாய் காலத்தில் சுத்தமான பருத்தி உள்ளாடைகளை அணிய முயற்சி செய்யுங்கள். 

பிறப்புறுப்பு என்பது தன்னைத்தானே சுத்தம் செய்யும் உறுப்பு என்பது அனைவரும் அறிந்த உண்மை. எனவே அடிக்கடி கழுவதை (douching) தவிர்க்கவும். மேலும், மணமாக இருக்க வேண்டுமென்பதற்காக கண்ட கண்ட இரசாயன அல்லது வாசனை பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. அதைவிட முக்கியம் சோப்பு, நாம் குளிப்பதற்கு பயன்படுத்தும் சோப்பை ஒருபோதும் பிறப்புறுப்பை சுத்தம் செய்ய பயன்படுத்த கூடாது. ஏனெனில், இந்த சோப்பு பிறப்புறுப்பில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அழித்து வறட்சியை ஏற்பட்டுத்தி, நோய்த்தொற்றுகள் ஏற்பட வழிவகுக்கும். எனவே, சாதாரண தண்ணீரை கொண்டு சுத்தம் செய்தாலே போதுமானது.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்