Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Leftover Idli Snack in Tamil: இட்லி மீதமாயிடிச்சா? இப்படி செஞ்சிப் பாருங்க... 10 நிமிசத்துல மொறுமொறு ஈவ்னிங் ஸ்நாக்ஸ்..!!

Nandhinipriya Ganeshan June 21, 2022 & 19:30 [IST]
Leftover Idli Snack in Tamil: இட்லி மீதமாயிடிச்சா? இப்படி செஞ்சிப் பாருங்க... 10 நிமிசத்துல மொறுமொறு ஈவ்னிங் ஸ்நாக்ஸ்..!!Representative Image.

Leftover Idli Snack in Tamil: சூரிய வம்சம் பட வந்ததும் தான் வந்தது நம்ம அம்மாக்கள் மீதமான இட்லியை வைத்து உப்புமா செஞ்சி தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். தற்போது இதையும் தாண்டி மீதமான இட்லியை வைத்து விதவிதமான நிறைய பலகாரங்கள் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அந்த வகையில், கொஞ்சம் வித்தியாசமான ஒரு ரெசிபியை பற்றி தான் பார்க்கப்போகிறோம். 

அதுதான் இட்லி முறுக்கு, மீதமான இட்லியை வைத்து முறுக்க சுட்டு கொடுத்துப்பாருங்க யாராலும் கண்டுபிடிக்கவே முடியாது. இதை செய்வது மிகவும் சுலபம் தான். வாங்க, வித்தியாசமான இட்லி முறுக்கு எப்படி (idli maavu murukku seivathu eppadi) சுடுவது என்று பார்க்கலாம். 

காலையில் சுட்ட இட்லி மீதமாகிடிச்சா? இனி தூக்கிப்போட வேண்டாம், அதை வைத்து ஈவ்னிங் ஸ்நாக்ஸ் ரெடி (leftover idli recipe in tamil) பண்ணலாம். 

தேவையான பொருட்கள்:

மீதமான இட்லி - 7

மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்

ஓமம் - 1/2 

எள்ளு - 1 ஸ்பூன்

அரிசி மாவு - 1/4 கப்

பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்

எண்ணெய் - 2 ஸ்பூன்

கடலை மாவு - 1/4 கப்

செய்முறை

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் மீதமான இட்லியை சின்ன சின்னதாக வெட்டி போட்டு தண்ணீர் ஊற்றாமல் மைய அரைத்து, ஒரு பவுலில் மாற்றிக் கொள்ளவும்.

பின்னர், அதில் மிளகாய் தூள், ஓமம், எள்ளு,  அரிசி மாவு, எண்ணெய், பெருங்காயத்தூள், கடலை மாவு ஆகியவற்றை போட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்.

தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் தெளித்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ளுங்கள். முடிந்த வரை கடலை மாவை கடையில் வாங்காமல் நீங்களே அரைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது, முறுக்கு பிழியும் அச்சை எடுத்து எப்பவும் போல சிறிதளவு மாவை எடுத்து அதில் போட்டு தனியாக ஒரு தட்டில் பிழிந்து கொள்ளுங்கள்.

இப்படி எல்லா மாவையும் பிழிந்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர், ஒரு வாணலி அரை லிட்டர் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்தது இந்த முறுக்கை போட்டு பொரித்து எடுங்கள்.

இப்போது மொறுமொறு டேஸ்டான முறுக்கு ரெடி. இதற்காக அரிசி ஊறவைத்து அதை தனியாக அரைத்து சிரமமே இல்லை. இனி இப்படி செய்து பாருங்க.

இந்த ரெசிபி பிடித்திருந்தால் தவறாமல் வீட்டில் செய்து பாருங்க. எல்லாருக்கும் கண்டிப்பா பிடிக்கும். 10 நிமிசத்துல மொறுமொறு முறுக்கை சுட்டு (murukku suduvathu eppadi) அசத்துங்க..!

உடனுக்குடன் செய்திகளை (Latest Startup News Tamil) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்