Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Yoga vs Gym - Which is Better: யோகா, ஜிம் - ரெண்டுல எது பெஸ்ட்..?? 

Nandhinipriya Ganeshan June 21, 2022 & 14:00 [IST]
Yoga vs Gym - Which is Better: யோகா, ஜிம் - ரெண்டுல எது பெஸ்ட்..?? Representative Image.

Yoga vs Gym - Which is Better? யோகா சிறந்ததா அல்லது உடற்பயிற்சி சிறந்ததா என்று பார்க்கும் போது முக்கியமானது இரண்டில் எதையாவது ஒன்றை கட்டாயம் செய்ய வேண்டும் என்பது தான். உடலின் இயக்கத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் பயிற்சி தருவது, எந்த முறையில் செய்தாலும் நல்லது தான். ஆனால், இது இரண்டிற்கும் சின்ன சின்ன வேறுபாடுகள் தான் உள்ளன. 

யோகா என்பது ஒட்டுமொத்த உடல்நலனுக்கும் ஏற்றதுதான். ஆனால், நீங்கள் விரும்பும் விதத்தில் உடலை வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் உடற்பயிற்சியும் தேவை. இரண்டும் ஒன்றிற்கு ஒன்று சலித்தது கிடையாது. உங்களுக்கு இதன் இரண்டு பலன்களையும் அனுபவிக்க வேண்டும் என்றால் இரண்டையும் செய்யலாம். ஆனால், முறையான ஆசிரியர் வழிகாட்டுதலுடன் செய்ய வேண்டும். இப்போது இதற்கு இடையேயான வேறுபாடுகளை (yoga and gym difference) பார்க்கலாம். 

1. உடற்பயிற்சி செய்வது யோகா செய்வதை காட்டிலும் விரைவான பலனைக் கொடுக்கிறது. இதனால் தான் பல இளைஞர்கள் ஜிம்மை தேர்ந்தெடுக்கிறார்கள். பாதுகாப்பு என்று வரும்போது யோகாசனங்கள் சிறந்தது. ஏனென்றால், முறையான வழிகாட்டுதல்கள் இல்லாமல் ஜிம்மில் உபகரணங்களை கையாளும்போது காயம் ஏற்பட வாய்ப்புள்ளது.

2. யோகா என்பது உடலையும், மனதையும் ஒன்றிணைக்கும் ஒரு அற்புத கலை. இதை முழுக்க முழுக்க அமைதியான இடத்தில் செய்ய வேண்டும். இதற்கு ஒரு விரிப்பு, அமைதியான இடம் மட்டுமே போதுமானது. ஆனால், உடற்பயிற்சி அப்படி இல்லை எளிமையான பயிற்சிகள் முதல் சிக்கலான பயிற்சிகள் வரை எல்லாவற்றிற்கும் உபகரணங்கள் தேவை. 

3. உடற்பயிற்சி செய்யும் போது மிக அதிகமான எடை மற்றும் கடினமான பயிற்சிகளை செய்ய வேண்டும். ஆனால், யோகாவில் அதெற்கெல்லாம் அவசியமே கிடையாது. இதில் உங்களுடைய உடல் மட்டுமே உபகரணமாக பயன்படுத்தப்படுகிறது. இருந்தாலும், யோகாவிலும் மிக கடினமாக ஆசனங்கள் இருக்கின்றன. 

4. யோகாசனங்கள் ஒரு மணி நேரத்திற்கு 298 முதல் 362 கலோரிகள் வரை செலவிட வைக்கின்றன. ஆனால், கார்டியோவாஸ்குலர் பயிற்சிகள் அதிக கலோரிகளை செலவிட வைக்கின்றன. ஒரு மணி நேர ஒர்க் அவுட்டில் 600 கலோரி செலவிடப்படுகிறது.

5. ஆசனங்கள் செய்யும்போது தசைகள் இறுகுகின்றன. ஆனால், உங்களால் கட்டுடல் பெற முடியாது. ஜிம்மில் அது சாத்தியம். 

6. முதுகை வளைப்பது, சுவாச உத்திகள், நிற்கும் நிலை மூலம் பலவகையான ஆசனங்கள் செய்யலாம். உங்களுடைய பிட்னஸ், இலக்கு, மருத்துவ தேவைகளுக்கு ஏற்ப குண்டலினி, ஹத, ஐயங்கார், அஷ்டாங்க, வினியோகா, விக்ரம் போன்ற பல வகை ஆசனங்களிலிருந்து ஒன்றை தேர்ந்தெடுத்து செய்யலாம். இருந்தாலும் உடலுக்கு தேவையான பலனைப் பெறவேண்டுமென்றால் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆசனங்களை சேர்த்து செய்ய வேண்டும். 

ஆனால், ஜிம்மில் உபகரணங்களுக்கு ஏற்பவே பயிற்சியின் வகைகள் அமையும். அதிகப்படியான ஜிம்களில் ஹிப் அப்டக்டர்ஸ், ஸ்டேர்மாஸ்டர்ஸ், ஆஃப் கிரஞ்சர்ஸ், எலிப்டிகல் எந்திரங்கள், டிரெட்மில்கள், நிலையான சைக்கிள் ஆகியவை இருக்கும். இவை ஒவ்வொன்றும் உடலின் ஒவ்வொரு பகுதியை இலக்காக கொண்டது. 

இரண்டுமே உடலை இயக்கச்செய்வதுதான், ஆனால் ஒட்டுமொத்த நலன் என்று வரும்போது ஜிம் பயிற்சியுடன் ஆன்மாவையும் உடலையும் இணைக்கும் தியானத்தை செய்வது சிறந்தது. 

உடனுக்குடன் செய்திகளை (Latest Startup News Tamil) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்