Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தினம் ஒரு மூலிகை: வயிற்றுப் புண் முதல் கல்லீரல் நோய் வரை.. மருந்தாகும் மணத்தக்காளி...

Nandhinipriya Ganeshan August 18, 2022 & 12:45 [IST]
தினம் ஒரு மூலிகை: வயிற்றுப் புண் முதல் கல்லீரல் நோய் வரை.. மருந்தாகும் மணத்தக்காளி...Representative Image.

மணி மணியாய் வாசனை நிறைந்த பழங்களைக் கொண்டிருப்பதால், இதை 'மணத்தக்காளி' என்று அழைக்கிறோம். இதற்கு 'மணித்தக்காளி' என்றும், 'மிளகுத்தக்காளி' என்றும் மற்ற பெயர்களும் உண்டு. இதை தவிர, வாயசம், காகமாசீ, விடைக்கந்தம், உலகமாதா என பல பெயர்களும் இந்த கீரைக்கு உண்டு.

மணத்தக்காளியின் மருத்துவ குணங்கள்!

❖ இந்த மணத்தக்காளி கீரையுடன் தேங்காய் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் குடல் புண் மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சல் போன்ற பிரச்சனைகள் நீங்கும். 

❖ நாள்தோறும் இந்த கீரையை சேர்த்துக் கொள்வதால் கல்லீரல் நோய் குணமாவதோடு, இரத்தத்திற்கு தேவையான சிவப்பணுக்களையும் உருவாக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், வயிற்று வலி, மூல வியாதி மற்றும் பெருங்குடல் வீக்கம் போன்றவற்றையும் விரைந்துக் குணமாக்கும்.

❖ உடல் சூட்டால் அவதிப்படுபவர்கள் இந்த கீரையை சமைத்து சாப்பிடுவதால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சியாக்கும். அதுமட்டுமல்லாமல், இதன் பழங்களை அப்படியே சாப்பிட்டாலும் உடல் வெப்பம் குறையும். 

❖ இந்த கீரையை காலை நேரத்தில் பச்சையாக மென்று சாப்பிடுவதால் வயிற்றுப்புண்களால் ஏற்படும் வாய்துர்நாற்றத்தையும் போக்கக்கூடியது. பொதுவாக, கிராமங்களில் வாய்ப்புண் என்றாலே முதலில் தேடப்படும் மூலிகையே இந்த மணத்தக்காளி தான்.

❖ அதிக காய்ச்சல் இருக்கும் நேரத்தில், இந்த கீரையின் பொடியை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, சூட்டுடன் அருந்த உடனே நோயாளியை நன்கு வியர்க்கச் செய்துவிடும். வியர்வை வெளியேறுவதால், காய்ச்சல் விரைவில் குணமாகும். 

❖ இதன் பழங்களை பச்சையாக உண்பது நல்லதல்ல. எனவே, நன்றாக பழுத்த பழங்களை உண்பதால், செரிமானப் பாதையில் உண்டாகும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கலாம். அதுமட்டுமல்லாமல், இந்த பழம் பசியைத் தூண்டுவதிலும் சிறந்த மருந்தாக விளங்குகிறது. எனவே, பசியே எடுக்கமாட்டீங்கிது என்று வருத்தப்படுபவர்கள், மணித்தக்காளி பழங்களை தினமும் சாப்பிட ஆரம்பியுங்கள். வித்தியாசத்தை நீங்களே உணரலாம்.

குறிப்பு: மணித்தக்காளி போன்றே உருவ அமைப்புடைய சில செடிகள் இருக்கின்றன. அவை, உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை. எனவே, சாப்பிடுவதற்கு முன்பு அது மணித்தக்காளி தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Tags:

solanum nigrum benefits in tamil, Health benefits of black nightshade in tamil, makoy benefits in tamil, manathakkali keerai benefits in tamil, manathakkali keerai uses in tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்