Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அம்மனுக்கு படைக்க வேண்டிய நைவேத்தியங்கள்...

Nandhinipriya Ganeshan September 16, 2022 & 13:20 [IST]
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அம்மனுக்கு படைக்க வேண்டிய நைவேத்தியங்கள்...  Representative Image.

Navratri Prasadam in Tamil: மகேஸ்வரி, கௌமாரி, வராகி, மகாலெட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்ஹி, சாமுண்டி போன்ற அனைத்து தெய்வங்களையும் வீட்டிற்கே வரவழைத்து போற்றி வணங்கி வழிபடும் விழாவே நவராத்திரி. இந்த ஒன்பது நாட்களில் முதல் 3 நாட்கள் துர்க்கையாகவும், அடுத்த 3 நாட்கள் மகாலட்சுமியாகவும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதியாகவும் நம்மை காத்து ரட்சிக்கிறாள் சக்தி தேவி. 

இந்த ஒன்பது நாட்களிலும் சக்தி எந்த ரூபத்தில் நமக்கு காட்சி கொடுப்பாள் என்பதையும், படைக்க வேண்டிய நைவேத்தியம் பற்றியும் பார்க்கலாம். 

நவராத்திரியில் இந்த மலர்களை கொண்டே அம்மனுக்கு பூஜை செய்ய வேண்டும் 

முதல் நாள்:

அன்னை மகேஸ்வரியாக காட்சி கொடுக்கும் சக்தி தேவிக்கு வெண் பொங்கல் நைவேத்தியம் செய்து, தோடி ராகப்பாடல்களை பாடலாம்.

இரண்டாம் நாள்:

கௌமாரி ரூபத்தில் இருப்பவளுக்கு புளியோதரை நிவேதனம் செய்யலாம்.

மூன்றாம் நாள்:

வராகியாக காட்சி கொடுக்கும் சக்தி தேவிக்கு சர்க்கரை பொங்கல் படைத்து வழிபடலாம்.

பெருமாளுக்கு பிடித்த எள்ளு சாதம்.. இப்படி செஞ்சி பாருங்க...

நான்காம் நாள்:

மகாலட்சுமியாக காட்சியளிக்கும் தேவிக்கு அன்னம் நைவேத்தியம் பண்ண வேண்டும்.

ஐந்தாம் நாள்:

வைஷ்ணவி தேவி ரூபத்தில் இருப்பவளுக்கு தயிர் சாதம் படைத்து வணங்கலாம்.

ஆறாம் நாள்:

இந்திராணியாக காட்சியளிக்கும் தேவிக்கு தேங்காய் சாதம் நிவேதனம் செய்யலாம்.

நவராத்திரி கொலு வைப்பது எப்படி? 

ஏழாம் நாள்:

சரஸ்வதியாக அருள் தரும் அன்னைக்கு எலுமிச்சை சாதம் நிவேதனம்  செய்யலாம்.

எட்டாம் நாள்:

நரசிம்ஹி ரூபத்தில் காட்சி தரும் அம்பிகைக்கு பால் சாதம் படைத்து வணங்கலாம்.

பாரம்பரிய பிரசாதமான எள்ளு பாயாசம் ரெசிபி..

ஒன்பதாம் நாள்:

சாமுண்டியாக தோற்றம் கொள்கிறாள், இன்றைய தினம் பால் பாயாசம், சுண்டல் நைவேத்தியம் செய்து வழிபடலாம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்