Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Mango Recipes in Tamil: வந்தாச்சு மாம்பழ சீசன்.. குளுகுளு டேஸ்டியான மாம்பழ குச்சி ஐஸ்/மாம்பழ பாப்ஸிகல்..!

Nandhinipriya Ganeshan April 20, 2022 & 21:45 [IST]
Mango Recipes in Tamil: வந்தாச்சு மாம்பழ சீசன்.. குளுகுளு டேஸ்டியான மாம்பழ குச்சி ஐஸ்/மாம்பழ பாப்ஸிகல்..!Representative Image.

Mango Recipes in Tamil: என்ன தான் வெயில் காலம் வந்தாலும், கூடவே நமக்கு பிடிச்ச பழங்களின் சீசனும் ஆரம்பிச்சிடுது. அதில் ஒன்று மாம்பழம்... அதன் கண்ணை கவரும் கலரும், சுவையும், வாசனையும் யாருக்காவது பிடிக்காமல் இருக்குமா? இந்த சமயங்களில் தான் நாம் மாம்பழங்களை ஆசை தீரும் அளவிற்கு சாப்பிட முடியும். இது நாள் வரை நாம் மாம்பழத்தை நேரடியாக அல்லது ஜூஸ் போட்டு தான் குடித்திருப்போம். அதே நேரத்தில் இந்த மாம்பழத்தைக் கொண்டு சில நிமிடங்களில் குச்சி ஐஸ் (Mango Popsicles in Tamil) செய்யவும் முடியும். ரெசிபி இதோ..!

வெயிலுக்கு ஜில்லுனு ஒரு மாம்பழ லஸ்ஸி...இரண்டே பொருள் லஸ்ஸி ரெடி...!.

தேவையானவை:

  • சர்க்கரை - 150 கிராம்
  • பால் - 150 மில்லி
  • இனிப்பான மாம்பழம் - 1/2 கிலோ
  • முந்திரி, பிஸ்தா, பாதாம் - தலா 5

குடை மிளகாய்ல இத்தனை விதமான சத்துக்களா? அதோட மெயின் என்னனு தெரியுமா?

செய்முறை:

  • முதலில் மாம்பழத்தை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
  • பிறகு, முந்திரி, பாதாம், பிஸ்தா மூன்றையும் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • மாம்பழத்தை மிக்ஸி ஜாரில் போட்டு அதோடு சர்க்கரை மற்றும் பாலை சேர்த்து நன்றாக குழையாக அரைத்துக்கொள்ளவும்.
  • அதை ஒரு பவுளில் ஊற்றி, அதில் அரைத்த வைத்த பருப்புகளை சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.
  • இப்போது இதை குல்பி மக் இருந்தால் அதில் ஊற்றிக் கொள்ளலாம். ஒருவேளை, இல்லையெனில் சில்வர் டம்ளர்களில் முக்கால் அளவு வரும் வரை நிரப்பிக் கொள்ளவும்.
  • அவற்றை ஃப்ரீசரில் ஒன்று அல்லது ஒன்றரை மணி வைத்துவிட்டு, அதை எடுத்து குச்சிகளை நடுவில் செருகவும். பின்பு அதை மறுபடியும் 6 மணி நேரம் ஃபிரீசரில் வைக்கவும்.
  • 6 மணி நேரம் கழித்து எடுத்தால் சுவையான குளு குளு குச்சி ஐஸ் (mango kulfi recipe without condensed milk) ரெடி..!

மாம்பழ சீசன் வந்தாச்சு...! ரெண்டே நிமிடத்தில் வீட்டிலேயே செய்யலாம் மாம்பழ கேக்..!​​​​​​​

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்