Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Mango Cake Recipes in Tamil: மாம்பழ சீசன் வந்தாச்சு...! ரெண்டே நிமிடத்தில் வீட்டிலேயே செய்யலாம் மாம்பழ கேக்..!

Nandhinipriya Ganeshan April 19, 2022 & 23:00 [IST]
Mango Cake Recipes in Tamil: மாம்பழ சீசன் வந்தாச்சு...! ரெண்டே நிமிடத்தில் வீட்டிலேயே செய்யலாம் மாம்பழ கேக்..!Representative Image.

Mango Cake Recipes in Tamil: என்ன தான் வெயில் காலம் வந்தாலும், கூடவே நமக்கு பிடிச்ச பழங்களின் சீசனும் ஆரம்பிச்சிடுது. அதில் ஒன்று மாம்பழம்... அதன் கண்ணை கவரும் கலரும், சுவையும், வாசனையும் யாருக்காவது பிடிக்காமல் இருக்குமா? இந்த சமயங்களில் தான் நாம் மாம்பழங்களை ஆசை தீரும் அளவிற்கு சாப்பிட முடியும். இது நாள் வரை நாம் மாம்பழத்தை நேரடியாக அல்லது ஜூஸ் போட்டு தான் குடித்திருப்போம். அதே நேரத்தில் இந்த மாம்பழத்தைக் கொண்டு சில நிமிடங்களில் கேக் செய்யவும் முடியும். ரெசிபி இதோ..!

Most Read: வெயிலுக்கு ஜில்லுனு ஒரு மாம்பழ லஸ்ஸி...இரண்டே பொருள் லஸ்ஸி ரெடி...!.

தேவையானவை:

  • மாம்பழக் கூழ் - 1/4 கப்
  • பால் - 3 டேபிள் ஸ்பூன்
  • வெஜிடஃபிள் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
  • வெண்ணிலா எசன்ஸ் - 1/4 டீஸ்பூன்
  • சர்க்கரை - 1/4 கப்
  • மைதா - 1/4 கப்
  • பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
  • பேக்கிங் பவுடர் - 1/4 டீஸ்பூன்

​​​​​​​Most Read: சூப்பரான சுவையில் வெரைட்டியான பாயாசம்... எப்படி செய்வது?.. இதோ ரெசிபி!

செய்முறை:

  • கேக் பான் ஒன்றை எடுத்துக் கொள்ளவும். அதை சுற்றிலும் எண்ணெய் அல்லது நெய் தடவிக் கொண்டு, பின்னர் அதில் மாம்பழ கூழ், எண்ணெய், பால், வெண்ணிலா எசன்ஸ் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். இதை செய்யும் போது கைகளில் செய்யாமல், கரண்டி பயன்படுத்தி கலக்கவும்.
  • பின்னர், அதில் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, மைதா, சர்க்கரை போன்ற மற்ற பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • மைதா, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை நன்றாக கரையும் அளவுக்கு கலக்கிக் கொள்ளுங்கள்.. ஏனெனில் அப்போது தான் கட்டி விழாமல் இருக்கும்.
  • இதை ஒரு குக்கரில், சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதற்குள் ஒரு ஸ்டேண்ட் வைத்து கேக் பேனை வைக்கவும்.
  • குக்கரை மூடி ஒரு விசில் விட்டு எடுத்தால், உங்களுக்கான சுவையான மாம்பழ கேக் (Mango Cake in Tamil) தாயாராகிவிடும்.
  • அதை ஒரு தட்டில் கமிற்றி எடுத்து அதன்மீது சில மாங்காய் பீஸ், சாக்லேட் சாய், தேன், நட்ஸ் போன்றவற்றை தூவி அழகுபடுத்திக் கொள்ளலாம். நமக்கு ஸ்டேட்டஸ் வைப்பது தான் ஒரு வழக்கமான ஒன்றாகிவிட்டதே..
  • அதை அப்படியே ஒரு போட்டோ எடுத்து, வாட்ஸ்அப்பில் உங்களுடைய உறவினர்களுக்கு ஷேர் செய்யுங்கள்...!

​​​​​​​Most Read: அசத்தலான சுவையில் ருசியான, காரசாரமான பள்ளிப்பாளையம் சிக்கன்!.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்