Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Heart Health Tips Tamil: தயிரோடு இந்த பொருளை சேர்த்து சாப்பிட்டு வர, மாரடைப்பு வராதாம்…!!

Nandhinipriya Ganeshan May 26, 2022 & 16:45 [IST]
Heart Health Tips Tamil: தயிரோடு இந்த பொருளை சேர்த்து சாப்பிட்டு வர, மாரடைப்பு வராதாம்…!!Representative Image.

Heart Health Tips Tamil: கோடைக்காலத்தில் தயிர் மற்றும் தயிர் சார்ந்த உணவுகளை உண்பது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா? இதற்கு தயிரில் இருக்கும் குளிர் தன்மைதான். கோடைக்காலத்தில் குளிர்ச்சியான பொருட்களை சேர்த்துக் கொள்வது உடலின் வெப்பநிலையை கட்டுக்குள் வைக்க உதவும். உடலை குளிர்ச்சியாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்கும் உணவுகள் மற்றும் பானங்களை பெரும்பாலான மக்கள் இந்த சம்மரில் அதிகம் சேர்த்துக் கொள்வதற்கு இதுவே காரணம். 

தயிரின் மகிமை: தயிர் கோடைக்காலம் மட்டுமல்லாமல், எல்லா சீசனிலும் அனைவருக்கும் ஃபேவரட்டான ஒரு உணவு பொருள். தயிர் உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு, உடல் சூட்டையும் விரைவில் குறைத்துவிடும் இப்போது, இந்த தயிருடன் இந்த சீக்ரெட் உணவுப்பொருளை சேர்த்து சாப்பிட்டால், இதய ஆரோக்கியம் மேம்படுத்துவதோடு, மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றை (curd health benefits in tamil) குறைக்குமாம். அப்படி என்ன பொருள் என்று தானே கேட்கிறீர்கள்.. அதுதான் தேன், தயிருடன் தேன் கலந்து சாப்பிடுவது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும் சக்தி வாய்ந்த மருந்தாக செயல்படுகிறது. 

Also Read: தினமும் வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிப்பதால் இத்தனை நன்மைகளா...? 

தயிரும் தேனும்: தயிரில் ஆரோக்கியமான பால் கொழுப்புகள், புரோட்டீன், கால்சியம் போன்றவை இயற்கையாகவே நிறைந்துள்ளன. இந்த சத்துக்கள் உடலில் வைட்டமின் டி அளவை அதிகரிக்கச் செய்கிறது. வைட்டமின் டி தமனிகளில் உள்ள அடைப்பைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் (then benefits in tamil) உதவுகிறது. மேலும், தேன் மற்றும் தயிர் ஆகியவற்றின் கலவை எடையை அதிகரிக்க ரொம்பவே உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், இந்த கலவையில் ஆக்ஸிஜனேற்றங்கள், பைட்டோகெமிக்கல்கள் இருப்பதால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்தும் பாதுகாக்கிறது.

குறிப்பு: இம்மாதிரியான உணவுக் கலவையை சாப்பிடுவதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று கொள்வது நல்லது.

Also Read: பனை வெல்லத்தோட மருத்துவ குணம் தெரிஞ்சா சர்க்கரையை தொடவே மாட்டீங்க…!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்த ளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்