Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

MS Dhoni Workout Plan And Diet Routine: 40 வயதிலும் இளமையாக இருக்கும் தல தோனியின் ஃபிட்னஸ் சீக்ரெட் என்ன தெரியுமா?

Nandhinipriya Ganeshan July 11, 2022 & 14:15 [IST]
MS Dhoni Workout Plan And Diet Routine: 40 வயதிலும் இளமையாக இருக்கும் தல தோனியின் ஃபிட்னஸ் சீக்ரெட் என்ன தெரியுமா?Representative Image.

MS Dhoni Workout Plan And Diet Routine: நம்மில் பலருக்கும் மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் தான் மகேந்திரசிங் தோனி. இவரை ரசிகர்கள் 'தல, MSD' என்று அழைப்பதுண்டு. கிரிக்கெட்டில் எப்போதும் சுறுசுறுப்பாக தன்னுடைய ரசிகர்களுக்கு தன் பேட்டிங் மற்றும் கீப்பிங் திறமையால் மகிழ்ச்சியை கொடுத்துக் கொண்டே இருப்பவர்.

எவ்வளவு பெரிய சவால்களை கடக்க வேண்டியதாக இருந்தாலும் மிக கூலாகவே இருப்பார். அதுமட்டுமல்லாமல், எதை செய்தாலும் வித்தியாசமாக செய்ய முயற்சிப்பார், இது தான் அனைவருக்கும் இவரை பிடிக்க முதல் காரணம். உலகின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவரான தோனி தனது 40 வயதிலும் இவ்வளவு இளமையுடன் துடிப்புடனும் இருபதற்கு காரணம் என்ன தெரியுமா? இவர் கடைப்பிடித்து வரும் உணவு முறையும், உடற்பயிற்சியும் தான்.

டயட் பிளான்:

ஏற்கனவே சொன்னது போல இவர் எதையுமே கடினமாக செய்ய விரும்பமாட்டாராம். அப்படி தான் தனது டயட்டிலும் இருக்கிறார். அதாவது, தோனி பின்பற்று டயட் முறை மற்றவர்களை போல் கடினமான டயட்டெல்லாம் இல்லையாம். இருந்தாலும், டயட் விஷயத்தில் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டாக இருப்பாராம். பெரும்பாலும் வீட்டு உணவுகளையே அதிகம் விரும்பும் தோனி, அதில் பால், மற்றும் பால் சார்ந்த பொருட்கள், பழம், காய்கறிகள், கோழி இறைச்சி ஆகியவற்றை அதிகம் எடுத்துக்கொள்கிறார்.

அவற்றில், கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள், சோடா, துரித பானங்கள் போன்றவற்றை முற்றிலும் தவிர்த்துவிடுகிறாராம். அதேபோல், ஹோட்டல்களில் சாப்பிடுவது அவருக்கு பெரிதாக பிடிக்காதாம். போட்டி நடைபெறும் நாட்களில் அதிக புரதம் கொண்ட பானங்கள், ஃபுரூட் ஜூஸ் எடுத்துக்கொள்வாராம். உங்களுக்கு தெரியுமா தல தோனி ஒரு “பால் பிரியர்”. ஒரு நாளைக்கு 5-7 லிட்டர் பால் குடிப்பாராம். அதோடு, உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ள இவற்றுடன் சேர்த்து நிறைய தண்ணீர் குடித்துக் கொண்டே இருப்பார்.

உடற்பயிற்சி:

மற்ற வீரர்களை போன்று அதிக நேரம் ஜிம்மில் சென்று உடற்பயிற்சி செய்வதை விரும்பாத தோனி, தினமும் போதுமான அளவு உடற்பயிற்சிகளை தவறாமல் செய்துவிடுவாராம். மேலும், தனது வீட்டிலேயே ஒரு உடற்பயிற்சி கூடத்தையும் வைத்திருக்கிறார். தோனி மிக திறமையான விக்கெட் கீப்பர் என்று நம் அனைவருக்குமே தெரியும். அப்படி இருப்பதற்கு பல மணி நேரம் மைதானத்தில் தரையை பார்த்தபடி, குனிந்தவாறே நிற்க வேண்டும். அது அவ்வளவு ஈசியான விஷயம் கிடையாது.

அப்படி நிற்க வேண்டுமென்றால் தோள்பட்டைக்கும், இடுப்புப் பகுதிக்கும் அதிக பலம் இருக்க வேண்டும். அதனால், தன்னுடைய ஸ்டாமினாவை பலபடுத்த இவர் குந்துகைகள் எனப்படும் ஸ்குவாட்ஸ் பயிற்சிகளையே அதிகம் செய்வாரம். இது தான் அவருடைய எடையை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும், இளமையாக காட்டவும் செய்கிறது. அதுமட்டுமல்லாமல், உடல் எடை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் பயிற்சியையும் மேற்கொள்கிறார்.

தூக்கத்தில் ஸ்ரிக்ட்:

நல்ல உணவு முறை, உடற்பயிற்சி மட்டும் ஒரு மனிதனை ஆரோக்கியாகவும் வைத்திருக்குமா என்று கேட்டால், அதற்கு தோனியிடன் மற்றொரு ரகசிய பதில் உண்டு. அது என்ன தெரியுமா? நல்ல தூக்கம். எவ்வளவு பிசியாக இருந்தாலும், தூக்கத்தை மட்டும் கெடுத்துக் கொள்ளவே மாட்டாராம். தினமும் குறைந்தது 7-8 மணி நேரம் எப்படியாவது தூங்கி விடுவாராம்.

அதுமட்டுமல்லாமல், தோனி தன மன அமைதியை உறுதிசெய்ய தியானம் செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தினமும் உடற்பயிற்சிக்கு பின்பு 20 நிமிடங்கள் தியானம் செய்வாராம்.

விளையாட்டு பிரியர்:

கிரிக்கெட்டிற்கு வருவதற்கு முன்பு அவர் மிகத் தீவிரமான ஃபுட்பால் பிளேயராக இருந்தாராம். தற்போது, என்னதான் கிரிக்கெட் விளையாண்டாலும் தனது கட்டுடலை பாதுகாக்க கால்பந்து மற்றும் பேட்மிண்டன் விளையாடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில், உடற்பயிற்சி செய்ய முடியாத நாட்களில் இந்த விளையாட்டில் கவனம் செலுத்துவாராம்.

இதெல்லாம் தாங்க இவரை இன்னமும் இளமையுடன் வைத்திருக்க காரணம்.  

Tags:

Dhoni fitness routine | Dhoni exercise routine | Ms dhoni fitness routine | Mahendra singh dhoni diet plan


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்