Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

சளி, காய்ச்சலை விரட்டியடிக்கும் சுவாச பயிற்சிகள்...

Nandhinipriya Ganeshan Updated:
சளி, காய்ச்சலை விரட்டியடிக்கும் சுவாச பயிற்சிகள்... Representative Image.

சளி மற்றும் காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க பல ஆயுர்வேத வைத்தியங்கள் வீட்டிலேயே இருக்கின்றன. இதற்காக, அதிகமாக செலவு செய்யவே தேவையில்லை. இருப்பினும், சில யோகா பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலமும் சளி மற்றும் இருமலை விரட்டியடிக்க முடியும். இதோ சிம்பிலான சுவாச பயிற்சிகள். இதை தொடர்ந்து வருவதன் மூலம் நுரையில் ஆரோக்கியமும் மேம்படும். அதுமட்டுமல்லாமல், யோகாவிற்கு ஈடான சிறந்த வேறேது. 

சளி, காய்ச்சலை விரட்டியடிக்கும் சுவாச பயிற்சிகள்... Representative Image

திர்கா ஷ்வாசனம்

ஒரு குறுக்கு-கால் நிலையில் நேராக உட்கார்ந்து, மூக்கு வழியாக ஆழமான மூச்சு உள்ளிழுக்கவும்; மூச்சை உள்ளிழுக்கும் போது, வயிறு விரிவடைய வேண்டும், மேலும் மூச்சை வெளியேற்றும்போது வயிறு தட்டையாக இருக்க வேண்டும். இதை குறைந்தது 10 முறை செய்யுங்கள்.

பலன்கள்:

  • மூக்கடைப்பை போக்கும்.

  • இரத்தத்தை சுத்திகரித்து, சகிப்புத்தன்மையை மேம்படுத்துகிறது.

சளி, காய்ச்சலை விரட்டியடிக்கும் சுவாச பயிற்சிகள்... Representative Image

அனுலோம் – விலோம்

முதலில் நேராக உட்காருங்கள். உங்கள் கையின் ஆள்காட்டி மற்றும் நடுவிரலை மடித்து, வலது நாசியை மூடி, இடது நாசி வழியாக மூச்சை கட்டை விரலைப் பயன்படுத்தி உள்ளிழுக்கவும். கடைசி இரண்டு விரல்களால் உங்கள் இடது நாசியை மூடி வலது நாசி வழியாக மூச்சை வெளியே விடவும். 8 முதல் 10 முறை செய்யவும். இதேப்போல் மாற்று நாசி வழியாக மூச்சை உள்ளிழுத்து வெளிவிடவும். 

பலன்கள்:

  • நாசி பாதையைத் திறக்கிறது.

  • உடல் வெப்பநிலையை பராமரிக்கிறது.

  • இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

  • உங்களை புத்துணர்ச்சியுடனும் உணர வைக்கிறது.

சளி, காய்ச்சலை விரட்டியடிக்கும் சுவாச பயிற்சிகள்... Representative Image

கபல் பதி

உடலில் சுவாசம் மற்றும் வயிற்று இயக்கம் சரியான இயக்கத்தை கொண்டிருக்க வேண்டும். இது மிகவும் முக்கியமான ஒன்றாகும். உங்கள் வலது கட்டை விரலால், வலது நாசியைத் தடுத்து மெதுவாக மூச்சை உள்ளிழுத்து, அதே நாசியின் வழியாக மூச்சை வெளிவிடவும். 20 முதல் 25 முறை செய்யவும். இதையே இடது நாசியில் இடது கட்டை விரலால் மூடி 20 முதல் 25 முறை செய்யவும். பின்னர், இரு நாசியையும் மூடாமல் மூச்சை உள்ளிழுத்து மூச்சை வெளியிடவும் இதை 40 முறை  செய்யவும்.

பலன்கள்:

  • உடல் உஷ்ணத்தை அதிகரிக்கிறது.

  • வயிற்றின் இயக்கம் வலிமையான சுவாசத்துடன் ஒருங்கிணைக்கப்படும்போது கொழுப்பை எரிக்கிறது.

  • நாசி பாதையை சூடாக்குகிறது மற்றும் வெப்பத்துடன் சளி உண்டாக்கும் வைரஸ்களை அழிக்கிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்