Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Vendakkai Benefits in Tamil: இது தெரிஞ்சா இனி வெண்டைக்காயை சாப்பிடாம இருக்கவே மாட்டீங்க..!!

Nandhinipriya Ganeshan July 11, 2022 & 09:15 [IST]
Vendakkai Benefits in Tamil: இது தெரிஞ்சா இனி வெண்டைக்காயை சாப்பிடாம இருக்கவே மாட்டீங்க..!!Representative Image.

புற்றுநோய்:

ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகமுள்ள வெண்டைக்காயை ஹெல்த்டானிக் என்றே சொல்லலாம். இதிலுள்ள கரையும் நார்ச்சத்தானது கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்தி இருதய நோய்கள் நம்மை நெறுங்காதவாறு பார்த்துக் கொள்கிறது. அதுமட்டுமல்லாமல், இந்த ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் உடலில் புற்றுநோய்க்கு காரணமான செல்களின் வளர்ச்சியையும் அழிக்க கூடியது.

கர்ப்பிணி பெண்கள்:

ர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமான ஃபோலிக் அமிலம் வெண்டைக்காயில் நிறையவே இருக்கிறது. வயிற்றில் வளரும் குழந்தையானது உள்ளே நல்லபடியாக வளரவும் முதல் ட்ரைமெஸ்டரின் போது குழந்தையின் நரம்புக் குழாய்களின் வளர்ச்சிக்கும் இந்த ஃபோலிக் அமிலம் மிகவும் அவசியமான ஒன்று.

சரும அழகு:

வெண்டைக்காய்க்கு சரும அழகைக் கூட்டும் குணம் உள்ளதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வெண்டைக்காய் சாப்பிடுவதன் மூலம் குடல் சுத்தமாகிறது. அதனால் சருமம் தெளிவாகிறது. முகத்தில் பரு வருவதுகூட தடுக்கப்படுகிறது. வெண்டைக்காயை கொதிக்க வைத்த தண்ணீரில் எலுமிச்சை சாறு சேர்த்து தலைமுடியை அலசினால் கூந்தல் பளபளப்பாகும்.

எடை குறைப்பு:

எடை குறைப்பு முயற்சியில் இருப்போருக்கு மிகவும் உகந்த காய் இந்த வெண்டைக்காய். காரணம், இதிலிருக்கும் அதிகப்படியான நார்ச்சத்தும் குறைந்த ஆற்றலும் தான். 100 கிராம் வெண்டைக்காயில் வெறும் 35 கிலோ கலோரிகள் தான் இருக்கின்றன.

ஆஸ்துமா:

வெண்டைக்காயில் உள்ள வைட்டமின் சி, ஆஸ்துமாவின் தீவிரத்தைக் குறைக்க கூடியது. அதுமட்டுமல்லாமல், இதில் இருக்கும் ஃபோலோட், எலும்புகளை உறுதியாக்கி, ஆஸ்டியோபொரோசிஸ் பாதிப்பை குறைக்க கூடியது.


இந்த டிப்ஸ மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ரோஜா செடி என்ன; ரோஜா தோட்டமே வெக்கலாம்… அதுவும் கொத்து கொத்தான ரோஸ் பூக்களோட..


சர்க்கரை வியாதி:

இந்த காலத்தில் அதிக பேர் பாதிக்கப்படைந்துள்ள ஒரு நோய் சர்க்கரை வியாதி. அவர்கள் அடிக்கடி வெண்டைக்காயை சேர்த்துக் கொள்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும்.

வயிற்று பிரச்சனை:

சிலர் வெண்டைக்காயை ஒதுக்குவதற்கு காரணம் அது வழவழப்பாக இருப்பதனால் தான். ஆனால், வெண்டைக்காயின் சிறப்பே அதன் வழவழப்புத் தன்மைதான். இந்த வழவழப்பில் உள்ள நார்ச்சத்து அல்சர் பாதித்தவர்களுக்கு அருமருந்து என்றே சொல்லலாம். அது தவிர, வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல் உள்ளிட்ட வயிற்றுப் பிரச்சனைகள் பலவற்றையும் குணப்படுத்தக்கூடியதும் கூட.

நோயெதிர்ப்பு சக்தி:

வெண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பார்வை திறன் மேம்படும். இதில் உள்ள பீட்டா கரோட்டின், கேட்டராக்ட் மற்றும் க்ளாக்கோமா பிரச்சனைகளைத் தவிர்க்க கூடியது. மேலும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அடிக்கடி சளி, இருமல் வருவதும் தவிர்க்கப்படுகிறது.

Tags:

Vendakkai Benefits in Tamil | Ladies finger health benefits in tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்