Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Roja Gulkand Benefits in Tamil: இளமையான தோற்றத்தை கொடுக்கும் ரோஜா குல்கந்து.. உடல் துர்நாற்றத்தையும் போக்கும்..

Nandhinipriya Ganeshan August 23, 2022 & 10:45 [IST]
Roja Gulkand Benefits in Tamil: இளமையான தோற்றத்தை கொடுக்கும் ரோஜா குல்கந்து.. உடல் துர்நாற்றத்தையும் போக்கும்..Representative Image.

Roja Gulkand Benefits in Tamil: ரோஜா மலர்கள் கூந்தலுக்கு அழகு சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கிய குறைப்பாட்டை நிவர்த்தி செய்யக்கூடிய அளவிற்கு ஏராளமான அற்புத நன்மைகளை கொண்டுள்ளது. எவ்வாறாயினும் ரோஜாவை அப்படியே சாப்பிட பலருக்கும் பிடிக்காது அல்லவா! எனவே, ரோஜா மலர்களை கொண்டு குல்கந்து தயார் செய்து சாப்பிடலாம். இது ஒரு மருத்துவ குணமிக்க சுவையான உணவுப்பொருள். ரோஜா குல்கந்து மட்டும் வீட்டில் இருந்தால் போதும், பலவிதமான உடல் ஆரோக்கிய குறைப்பாட்டை தீர்த்துவிட முடியும். அவ்வகையில், ரோஜா குல்கந்து சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். 

Most Read: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் 'தேன் கொழுக்கட்டை' செய்வது எப்படி? 

மலச்சிக்கலுக்கு தீர்வு

ரோஜா குல்கந்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மலச்சிக்கல் இருக்கும்போது சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் குல்கந்தை கலந்து குடித்து வந்தால், வயிற்றில் இருக்கும் செரிமான அமிலங்களின் சமநிலையை சீர்செய்யப்பட்டு, மலம் இளகி மலச்சிக்கல் குறையும். கர்ப்பிணிப் பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க எக்காலத்திலும் இதை வெந்நீருடன் சாப்பிட்டு வரலாம். 

Most Read: ரோஜா குல்கந்து வீட்டிலேயே செய்வது எப்படி? 

வயிறு கோளாறுகள்

தொண்டை எரிச்சல், நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண், வாயு கோளாறுகள், அஜீரணம், வயிற்று வலி, குடல்புண்கள் போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கு குல்கந்தை தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு சாப்பிட்டு வரலாம். பசியின்மையால் குழந்தைகள் சாப்பிட அடம்பிடிப்பார்கள். அவர்களுக்கு காலை வேளையில் 1 டீஸ்பூன் அளவு ரோஜா குல்கந்து கொடுத்துவந்தால் பசியின்மை நீங்கி, நன்றாக சாப்பிடுவார்கள். ஜீரணக்கோளாறுகளால் அவதிப்படுவர்கள் தொடர்ந்து 21 நாட்கள் இதை சாப்பிட்டு வர ஜீரண மண்டலம் சீராக செயல்படும். 

உடல் துர்நாற்றத்தை போக்கும்

பொதுவாக, உடலில் அதிகம் வியர்வை சுரக்கும் நபர்களுக்கும், அதிகமாக மாமிசம் சாப்பிடும் நபர்களுக்கும் உடல் துர்நாற்றம் அதிகமாக இருக்கும். அவர்கள், ரோஜா குல்கந்தை தொடர்ந்து சாப்பிட்டு வர, உடலில் வியர்வையால் உண்டாகும் விஷ தன்மையை நீக்கி உடலை குளிர வைக்கும். இதனால், உடல் துர்நாற்றம் வீசுவதில் இருந்து தப்பிக்கலாம். குறிப்பாக, வெயில் காலங்களில் இதை அதிகமாக சாப்பிடுவது சிறந்த பலனை அளிக்கும்.

Most Read: இயற்கையாக முடி வளர்ச்சியை தூண்டும் 7 உணவுப் பொருட்கள்..

உடல் உபாதைகள்

உடலில் பித்தம் அதிகமாகும் போது வாந்தி, குமட்டல், கிறுகிறுப்பு போன்றவற்றை உண்டாக்க கூடும். இதற்கு ரோஜா குல்கந்தை தினமும் இரண்டு வேளை சேர்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் சோர்வு, தசைவலி, சோம்பல், மன அழுத்தம் போன்றவையும் குறையும். அதுமட்டுமல்லாமல், கண் பார்வையும் மேம்படும். அதுமட்டுமல்லாமல், குடல்புழுக்கள் உருவாவதையும் தடுக்கிறது. 

Most Read: தேங்காய் மாவின் அற்புத நன்மைகள்..

பிரகாசமான சருமத்திற்கு

தினமும் 1 டீஸ்பூன் குல்கந்து சாப்பிட்டு வர உடல் உஷ்ணம் குறைந்து முகத்தில் பருக்கள் நீங்கும். தோல் செல்களின் வளர்ச்சியை மேம்படுத்தி சருமத்தை தெளிவாகவும், பளபளப்பாகவும், சுருக்கம் இல்லாமலும் வைத்துக் கொள்ள உதவுகிறது. எனவே, இளமையாகவே இருக்க வேண்டும் என்றால் நினைத்தால் குல்கந்தை சாப்பிட மறவாதீர்கள். தீக்காயங்களால் ஏற்படும் கொப்பளங்களை சீக்கிரத்தில் குணமாக்கவும் இது உதவுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்