Sat ,Jun 22, 2024

சென்செக்ஸ் 77,209.90
-269.03sensex(-0.35%)
நிஃப்டி23,501.10
-65.90sensex(-0.28%)
USD
81.57
Exclusive

Nayanthara Fitness Secret: நயன்தாராவின் சிம்பிளான ஃபிட்னஸ் சீக்ரெட்...!! 

Nandhinipriya Ganeshan June 08, 2022 & 18:05 [IST]
Nayanthara Fitness Secret: நயன்தாராவின் சிம்பிளான ஃபிட்னஸ் சீக்ரெட்...!! Representative Image.

Nayanthara Fitness Secret: தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் கதாநாயகியாக வலம் வருபவர் தான் நயன்தாரா. இவரை ரசிகர்கள் அன்போடு "லேடி சூப்பர் ஸ்டார்" என்று அழைப்பதுண்டு. 2005 ஆம் ஆண்டு "ஐயா" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தற்போது நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் டாப் ஹீரோயினியாக வளர்ந்துள்ளார். தன்னுடைய திறமையான நடிப்பால், தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார். 

திரையுலகிற்கு ஒரு பெண்ணின் பங்களிப்பு அழகு மட்டுமல்ல என்பதை நிரூபித்தவர் நயன். ரஜினி பட டயலாக் ஒன்றை கேட்டிருப்போம், "வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் உன்ன விட்டு போகவே இல்லை". அந்த டயலாக்கிற்கு ஏற்ற ஒரே ஆளு நயன்தாரா. என்னதான் சினிமா, படம் என்று பிஸியாக இருந்தாலும், தன்னுடைய ஃபிட்னஸை சரியாக பராமரித்து (nayanthara’s fitness diet) வருகிறார். 

எத்தனை படம் வந்திருந்தாலும் அதே அழகு அதே ஃபிட்னஸ் கொஞ்சம் கூட மாற்றம் கிடையாது. அது எப்படி தான் முடிகிறது? வாங்க நயன்தாராவின் பர்சனாலிட்டி, ஃபிட்னஸ் ரகசியத்தை தெரிந்துக் கொள்வோம்.

வொர்க்அவுட் |nayanthara workout and diet

37 வயசாக இருந்தாலும் இவர் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள எந்த ஒரு சிறப்பு சிகிச்சைகளை எடுத்துக் கொள்வதில்லை என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆமாம், அவர் வொர்க்அவுட் செய்தாலும், யோகாவை தான் அதிகம் விரும்புகிறாராம். எந்த வேலையாக இருந்தாலும், தினமும் யோகாவை மட்டும் செய்ய மறக்கவே மாட்டாங்களாம். யோகா மற்றும் வொர்க்அவுட் தவிர, நயன்தாரா தனது தூக்க நேரத்தையும் எதற்காகவும் காம்பரமைஸ் செஞ்சிக்கவே மாட்டாங்களாம். தினமும் 8 மணிநேரம் சரியாக தூங்குவாங்கலாம். 

நயன்தாராவின் கருத்தின்படி, யோகா ஒரு நல்ல உடலைக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், ஒரு நல்ல மனநிலையையும் அளிக்கிறது, இதன் மூலம் அவர் தன்னை அமைதியாகவும் சமநிலையுடனும் வைத்திருக்க முடியும்.

டயட் ப்ளான் | nayanthara’s diet plan

பொதுவாக யோகா செய்தாலே சருமம் பொலிவாகவும், உடல் கட்டுக்கோப்பாகவும் இருக்கும். இருந்தாலும், சரியான உணவு முறையும் அவசியம். ஆனால், நயன்தாராவின் சரியான டயட் ப்ளான் என்ன என்பது சீக்ரெட்டாகவே இருக்கிறது. ஏனென்றால், நயன் எல்லாவற்றையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்துக் கொள்வதில்லை. அதனால், அவர் காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவில் என்ன வகையான உணவை எடுத்துக்கொள்கிறார் என்று இன்னும் யாருக்குமே தெரியவில்லை. ஆனால், சர்க்கரையை மட்டும் உணவில் சேர்த்துக் கொள்ளமாட்டாராம். எப்போதும், நிறைய தண்ணீர் குடிப்பாராம். 

ஆனாலும் கூட "குறைவாக சாப்பிடுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள்" என்று ஒரு கோல்டன் ஃபார்முலா உள்ளது, அதை நயன் தவறாமல் கடைப்பிடுகிறார். இது குறித்து பேசிய நயன்,

"என் அழகு கடவுள் கொடுத்த வரம் என்று நினைக்கிறேன். நான் எந்த ஒரு ஸ்பெஷல் டயட் அல்லது உடற்பயிற்சியையும் பின்பற்றுவதில்லை. எனது உருவத்தை பராமரிக்க வேண்டும் என்பதற்காக நான் உணவில் இருந்து ஒதுங்கி இருப்பதில்லை. படப்பிடிப்பின் போது கூட, மற்ற யூனிட் உறுப்பினர்களுக்கு எதைக் கொடுக்கிறார்களோ அதையே தான் நானும் சாப்பிடுவேன்" என்று சொல்கிறார். இதிலிருந்து  அவர் சாதாரணமாக எல்லாரும் சாப்பிடுவது போல சாப்பிடுகிறார், ஆனால் அளவோடு சாப்பிடுகிறார் என்று தெரிகிறது.

வெயிட் லாஸ் டிப்ஸ் | nayanthara’s weight loss tips

நயன்தாரா தனது ஃபிட்னஸை பராமரிக்கவும் சமநிலையாக வைத்துக் கொள்வும் ஒரு பயிற்சியாளரை வைத்திருக்கிறாராம். தனது உடலின் கூடுதல் கலோரிகளிலிருந்து விடுபட, நயன்தாரா ஜிம்மிற்குச் சென்று தனது பயிற்சியாளரின் வழிகாட்டுதலின் கீழ் முறையான உடற்பயிற்சிகளை செய்வாராம். நயன் சினிமாவில் அறிமுகமாகும் போது குண்டாக தான் இருந்தார். எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதற்குப் பிறகு தான் பயிற்சியாளரின் அறிவுறுத்தலின் படி பயிற்சி செய்து உடல் எடையை குறைத்தாராம். இதுவே, இவருடைய ஃபிட்னஸ் சீக்ரெட். 


Samantha Fitness - பிட்னெஸ் மான்ஸ்டர் சமந்தா...விராட் கோலியாக இருந்திருக்கும் சமந்தா!

 


 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்த ளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்