Mon ,Jun 17, 2024

சென்செக்ஸ் 76,992.77
181.87sensex(0.24%)
நிஃப்டி23,465.60
66.70sensex(0.29%)
USD
81.57
Exclusive

Optical Illusion for finding Human Fear: இத பார்த்து உங்களுடைய பயம் என்னென்னு தெரிஞ்சிக்கலாமா? ட்ரை பண்ணி பாருங்க!

Priyanka Hochumin June 07, 2022 & 15:15 [IST]
Optical Illusion for finding Human Fear: இத பார்த்து உங்களுடைய பயம் என்னென்னு தெரிஞ்சிக்கலாமா? ட்ரை பண்ணி பாருங்க!Representative Image.

Optical Illusion for finding Human Fear: மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் பயம் என்பது இயல்பான ஒன்று. எதனால் நமக்கு பயம் ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொண்டு அதை சரி செய்வது நல்லது. உங்களுடைய பயம் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? தொடர்ந்து படியுங்கள்.

நாம் சிறு குழந்தையாக இருக்கும் காலத்தில் ஏதேனும் ஒரு நிகழ்வு, நமக்கு வாழ் நாள் முழுவதும் மறக்க முடியாத துயரத்தை ஏற்படுத்தும். நாம் வளர்ந்த பிறகு அதே போல் ஒரு சம்பவம் நமக்கு நடக்க நேர்ந்தால், நம்மால் அதை சமாளிக்க முடியாது. நமக்கு கிட்டத்தட்ட மரணம் வரையில் சென்று திரும்புவது போன்ற பயம் ஏற்படும். எனவே, அந்த பயம் என்ன என்று தெரிந்து அதை சரி செய்ய தற்போது நிறைய வழிகள் உள்ளன. அதனைப் பயன்படுத்தி நீங்கள் அதில் இருந்து வெளிவர வேண்டும்.

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஆப்டிகல் இல்யூஷன் பற்றி தான் இந்த பதிவில் பார்ப்போம். இது முக்கியமாக யாருக்கு பயன்படும் என்றால், தனக்கு பயமே இல்லை என்று கூறுகிறார்கள் தெரியுமா அவர்களுக்குத் தான் அதிகம் தேவைப்படுகிறது. ஏனென்றால் அவர்களின் ஆழ்மனதில் ஒளிந்திருக்கும் பயத்தை இந்த ஆப்டிகல் இல்யூசன் மூலம் கண்டறிய முடியும். சரி ஆப்டிகல் இல்யூசன் என்றால் என்ன? இது ஓவியங்கள் மற்றும் புகைப்படங்களில் மறைந்திருக்கும் உருவங்களை கண்டுபிடிப்பது மட்டுமல்லாது, ஒருவரின் மனநிலை என்ன என்பதை கண்டறிய உதவுகிறது.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஓவியத்தில் உங்களுக்கு என்ன தெரிகிறது? என்று பாருங்கள்.

இந்த ஓவியத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறதோ அதை வைத்து தான் உங்களின் ஆழ்மனதில் இருக்கும் பயத்தை தெரிந்துகொள்ள முடியும். தி மைண்ட்ஸ் ஜர்னலின் படி, இந்த ஓவியத்தில் முதலில் உங்க கண்கள் பார்கிறதோ அது உங்களின் பயத்தை வெளிப்படுத்தும் என்று கூறப்படுகிறது. எனவே, இந்த ஓவியத்தில் உங்களுக்கு முதலில் தெரிந்தது என்ன? சிறுமியா, பட்டாம்பூச்சியா அல்லது ஸ்ட்ராபெரியா அப்ப அதற்கு என்ன அர்த்தம்! பார்ப்போம்.

முதலில் சிறுமி தெரிந்தால்?

ஒரு மரத்தின் அடியில் அமர்ந்துள்ள சிறுமி உங்கள் கண்களுக்கு தெரிந்தால், குழந்தை பருவத்தில் ஏற்பட்ட கசப்பான சம்பவம் உங்களுக்கு பயத்தை ஏற்படுத்தியது என்று அர்த்தம். குழந்தை பருவத்தில் ஏற்பட்டுள்ள ஒரு அதிர்ச்சி சம்பவம் பெரும் மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். இதற்கு ஒரே மருந்து, அன்னையின் அரவணைப்பு. எனவே, அம்மாவுடன் நேரத்தை செலவழித்து அரவணைப்பைப் பெற்று அந்த பயத்தில் இருந்து வெளிவருங்கள்.

இல்ல முதல்ல பட்டாம்பூச்சி பார்த்தால்?

இல்லை அதற்கு பதிலாக பட்டாம்பூச்சி தெரிந்தால், அதற்கான அர்த்தம் வாழ்க்கையின் முக்கிய வாய்ப்புகளை இழக்க நேரிடும் அல்லது மரணம் பயம் போன்றவை ஏற்படும் என்பதாகும். இதற்கு பின்னால் இருக்கும் அர்த்தம் என்ன என்றால், பொதுவாக பட்டாம்பூச்சி ஒரு நல்ல அல்லது நேர்மையான விஷயங்களுடன் தொடர்புடையது. எப்படி ஏலத்துக்கு இரண்டு பக்கங்கள் இருக்கிறதோ, அதே போல் இதற்கும் மற்றொரு அர்த்தம் இருக்கிறது. உங்களின் கனவில் பட்டாம்பூச்சி தோன்றினால், அது உங்களின் வாழ்வில் ஒரு மாற்றம் மற்றும் தொடக்கத்திற்கான அறிகுறியாகும்.

புராணக்கதைகளின் படி, இறந்தவர்களின் ஆன்மாவை அவர்களின் உலகத்திற்கு கூட்டிச்செல்ல பட்டாம்பூச்சி காரணமாக இருக்கிறது என்று பொருள்.

அப்ப ஸ்ட்ராபெர்ரி தென்பட்டால்?

உங்களுக்கு ஸ்ட்ராபெர்ரி தெரிந்தால், அது ஒருவரின் இதயத்தை குறிக்கும். இது அன்பின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. 

உடனுக்குடன் செய்திகளை (Latest News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்