Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Women Empowerment: புகுந்த வீட்டில் சீர்வரிசையில் குறை என்று மாமியார் கொடுமை படுத்துகிறார்களா? அதை எதிர்கொள்வது எப்படி?

Priyanka Hochumin June 06, 2022 & 16:40 [IST]
Women Empowerment: புகுந்த வீட்டில் சீர்வரிசையில் குறை என்று மாமியார் கொடுமை படுத்துகிறார்களா? அதை எதிர்கொள்வது எப்படி?Representative Image.

Women Empowerment: இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு திருமணம் என்பதை விட சுயமரியாதை மற்றும் சுய சம்பாத்தியம் என்பது தான் மிக முக்கியம். எதனால் இந்த கருத்து என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

Women Empowerment: புகுந்த வீட்டில் சீர்வரிசையில் குறை என்று மாமியார் கொடுமை படுத்துகிறார்களா? அதை எதிர்கொள்வது எப்படி?Representative Image

ஒரு பெண் என்பவள் பிறந்ததில் இருந்து அனைத்தையும் சகித்துக் கொண்டு வாழ வேண்டும் என்பதை அவர்கள் மனதில் ஆழமாக பதியவைக்கின்றனர். இதில் ஒரு முக்கிய பங்கு அவளின் பெற்றோர்களுக்கு உண்டு. தனது சுற்றத்தினர் அக்கம் பக்கத்தினர் என்ன பேசி விடுவார்களோ என்று பயந்து பயந்து தங்களின் பெண் குழந்தைகளை சுதந்திரமாக இருக்க அனுமதிக்க மறுக்கின்றனர். இதனால் ஒரு வயதிற்கு வந்த உடன் அவர்களால் மற்றவர்களுடன் சகஜமாக பழக முடியவில்லை. அவர்கள் அறியாமல் ஒரு தயக்கம், தாழ்வு மனப்பான்மை போன்றவை ஏற்படுகிறது. சரி திருமணம் நடப்பதற்கு முன்பு தான் இந்த பிரச்சனை கவலை என்றால், திருமணம் ஆனா பின்பு இதை விட டபுள் மடங்கு அவஸ்த்தைகள் அனுபவிக்க நேரிடும். அதற்கான புரிதல் தான் இந்த குட்டி கதை.

Women Empowerment: புகுந்த வீட்டில் சீர்வரிசையில் குறை என்று மாமியார் கொடுமை படுத்துகிறார்களா? அதை எதிர்கொள்வது எப்படி?Representative Image

(Dowry Demand Meaning in Tamil) தனது பெற்றோர்களுக்கு ஒரே ஒரு மகள் என்பதால், அந்த பெண்ணுக்கு நிறைய செல்லம். அவளை நன்கு படித்து ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டுவந்தனர் அவளின் பெற்றோர்கள். B.E முடித்த அவள் வேலை தேடும் மும்மரத்தில் இருந்தால், ஆனால் அவளின் பெற்றோர்களோ அவளின் திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தனர். இவளோ எனக்குத் திருமணம் இப்பொழுது வேண்டாம் நான் ஒரு நல்ல வேலைக்கு செல்கிறேன், அதற்கு பின்பு திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்கிறாள். இருப்பினும் பெற்றோர்கள் 'உனக்கு திருமணம் நடந்தால் எங்களுடைய கடமை முடிந்து விடும்' என்று அவளை வற்புறுத்துகிறார்கள். எனவே, பெற்றோர்களே உங்களுடைய கடமை முடிய வேண்டும் என்பதற்காக உங்களின் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்காதீர்கள். அது யாருக்கும் நல்லது இல்லை.

Women Empowerment: புகுந்த வீட்டில் சீர்வரிசையில் குறை என்று மாமியார் கொடுமை படுத்துகிறார்களா? அதை எதிர்கொள்வது எப்படி?Representative Image

பிறகு ஒரு நல்ல குடும்பம் அவளை பொண்ணு கேட்டு வந்தனர். இவர்களுக்கும் பிடித்து போக உடனே நிச்சியதார்தம் நடத்தி வைக்கின்றனர். அதற்கு பின்பு தான் மாப்பிளை வீட்டாரின் சுயரூபமே தெரியவருகிறது. கல்யாணத்திற்கு முன்பு பையனுக்கு கார், டிவி, தங்கம், வீடு பொருட்கள் மற்றும் பொண்ணுக்கு 70 சவரன் நகை என்று அடுக்கிக்கொண்டே போகிறார்கள் (Dowry Demand in India). இவை அனைத்தையும் சீராக கேட்க, பெண் வீட்டார் சற்று யோசிக்கிறார்கள். அந்த சமயத்தில் தேவையில்லாமல் என்ட்ரி ஆகும் இந்த சொந்தக்காரர்கள் தான் மெயின் வில்லனே. ஏனென்றால் இவர்கள் மூலியமாக தான் இந்த சம்மந்தம் அமைந்தது. அந்த சொந்தக்காரர்கள் உடனே 'ஒரே ஒரு பொண்ணு தான் வச்சிருக்க, அவளுக்கு செய்யாம வேற யாருக்கு செய்யப்போற' என்று நல்லா ஏத்தி விட்டுட்டாங்க. அவங்களும் சரி பையன் நல்ல சம்பாதிக்கிறான், சொந்த வீடு இருக்கு, பேமிலி நல்லா செட்டில் ஆகியாச்சு என்று யோசித்து ஒப்புக்கொண்டனர்.

Women Empowerment: புகுந்த வீட்டில் சீர்வரிசையில் குறை என்று மாமியார் கொடுமை படுத்துகிறார்களா? அதை எதிர்கொள்வது எப்படி?Representative Image

சரி ஒரு வழிய எல்லா கொளறுபடிகளையும் தாண்டிய திருமனம் நடந்து முடிந்துவிட்டது. அந்த பொண்ணுக்கு திருமணம் நடந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. இப்பொழுது தான் மாமியார் மற்றும் நாத்தனாரின் ஆட்டமே ஆரம்பம். அந்த புது பொண்ணுகிட்ட 'உங்க வீட்ல அதா கேட்டோம், இது தான் கொடுத்திருக்காங்க. இன்னும் காஸ்டிலியான கார் கொடுத்திருக்கலாம்' என்று தினமும் குறை சொல்ல ஆரம்பித்துவிட்டாங்க. இவ்ளோ சிறிது காலம் இவற்றை தாங்கிக் கொண்டே தனது வாழ்க்கையை வாழ தொடங்கினாள். இருப்பினும் அவர்களின் அட்டூழியம் குறையவில்லை, இவளோ அதனை பொறுக்க முடியாமல் எதிர்த்து பேசி விட்டால். உடனே மாமியார் மற்றும் நாத்தனார் இருவருக்கும் கோபம் வந்து விட்டது. நீ மட்டும் என்ன சும்மாவா கல்யாணம் பண்ணி கிட்ட, பயன் இவ்ளோ சம்பாதிக்கிறான் ரொம்ப வசதியான குடும்பம் என்று தானே கல்யாணம் பண்ணிக்கிட்ட. நீங்கள் செஞ்சா சரி நாங்க கெட தப்பு என்று கடுமையான வாகு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர் (Dowry Demand after Marriage).

Women Empowerment: புகுந்த வீட்டில் சீர்வரிசையில் குறை என்று மாமியார் கொடுமை படுத்துகிறார்களா? அதை எதிர்கொள்வது எப்படி?Representative Image

பிறகு தான் இவளுக்கு தெரியவந்தது, அவளின் புகுந்த வீட்டினர் பிளான் பண்ணி இந்த திருமணத்தை நடத்தி வைத்துள்ளார் என்று. இவளின் குடும்பத்தை பற்றி நன்கு விசாரித்து ஒரே பெண் என்பதால் எவ்ளோ வேண்டுமானாலும் கேட்கலாம், கொடுத்து தான் ஆகா வேண்டும் என்று தெரிந்துக்கொண்டு தான் சம்மந்தம் பேச வந்துள்ளனர். இது தெரிந்ததும் அவளோ நொறுங்கி போய்விட்டால். பிறகு தன்னுடைய கணவனிடம் இப்படி வீட்டில் நடப்பதை கூறினால், அதற்கு அவனோ என்னால் என்னுடைய வீட்டில் இருப்பவர்களை கண்டிக்க முடியாது. உனக்கு சப்போர்ட் பண்ணியும் பேச முடியாது. எனக்கு இந்த சீர் மேல எல்லாம் எந்த ஆசையும் கிடையாது என்று கூறுகிறான். நீ தான் சூழ்நிலையை புரிந்து கொண்டு நடந்துக்க வேண்டும் என்று அறிவுரை கூறுகிறான்.

Women Empowerment: புகுந்த வீட்டில் சீர்வரிசையில் குறை என்று மாமியார் கொடுமை படுத்துகிறார்களா? அதை எதிர்கொள்வது எப்படி?Representative Image

இதற்கு பிறகு அவளோ தன்னுடைய கஷ்டத்தை அவளின் புகுந்த வீட்டிற்கும் சொல்ல முடியாமல், புருஷனிடமும் சொல்ல முடியாமல் வேதனையில் தினமும் செத்து செத்துப் பிழைக்கிறாள். இதில் இருந்து தப்பிக்க ஒரே வழி தான், பெண் என்பவள் தனக்கென்று ஒரு வேலை, தனக்கென்று ஒரு சம்பந்தனை இருக்க வேண்டும். அப்பொழுது தான் அவள் துணிச்சலாக பேச முடியும், தெயிரியமாக முடிவு எடுக்க முடியும்.  
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்