Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஒரு ரெசிபி ஆனா மூனு வகையா சாப்பிடலாம்...இப்படி செஞ்சு வேலைய மிச்சப்படுத்துங்க!

Priyanka Hochumin Updated:
ஒரு ரெசிபி ஆனா மூனு வகையா சாப்பிடலாம்...இப்படி செஞ்சு வேலைய மிச்சப்படுத்துங்க!Representative Image.

கார்த்திகை மாதம் காலை மற்றும் மாலையில் நல்ல குளுரு. அப்ப நல்ல சுட சுட காரமா ஏதாச்சும் சாப்பிட்டா நல்லா இருக்கும் தான் நம்ப எல்லாரும் நினைப்போம். அதுக்கு தனியா ஸ்னாக்ஸ் செஞ்சா அப்புறம் நைட் சாப்பாடு ஒழுங்கா சாப்பிட மாட்டாங்க வீட்ல. இது ரெண்டுத்துக்கும் பொருந்தும் வகையில் இருக்கும் ஒரு உணவு தான் பூரி. அதுவும் அந்த உருளை கிழங்கு மசாலா செஞ்சி, நல்ல சுட சுட பூரி கூட அந்த மசாலா சாப்பிடும் போது சொல்லவே வேணாம். அது எவ்ளோ சூப்பரா இருக்கும்! கார்த்திகை மாதத்தில் மட்டும் இல்ல மத்த நாட்களிலும் பூரின்னா கூடுதலாகவே சாப்பிடுவோம். அது எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

உருளை கிழங்கு - 1/4 கிலோ.

வெங்காயம் - 1.

பச்சை மிளகாய் - 2

கடலைப் பருப்பு - 1 ஸ்பூன்

பூண்டு - 8 பல்

கடுகு - 1/4 ஸ்பூன்

கருவேப்பிலை - 1 கொத்து

மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை

முதலில் உருளை கிழங்கை ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைத்து, தோலை எடுத்து, சுத்தம் செய்து வைத்துக்கவும்.

பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பின்பு பாத்திரத்தை அடுப்பில் பற்ற வைத்து, எண்ணெய்யை ஊற்றி நன்கு காய வைக்கவும். எண்ணெய் காய்ந்த உடன் கடுகு, கடலைப் பருப்பு, கருவேப்பிலை எல்லாத்தையும் போட்டு தாளிக்கவும்.

அடுத்து நறுக்கி வாய்த்த பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறத்தில் இருக்கும் போது வேக வைத்த உருளை கிழங்கு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும். அடுத்து 2 - 3 நிமிடத்தில் வதக்கி அடுப்பை நிறுத்தி இறக்கி விடவும்.

பைனல் டச் என்னென்னா வாசத்துக்கு கொத்தமல்லி தழைய எடுத்து பொடியா நறுக்கி மேல தூவிட்டா போதும். சுட சுட சுவையான பூரி மசாலா ரெடி. இதை நீங்க பூரி இல்ல தோசைக்கு தொட்டு சாப்பிடலாம். மேலும் தோசைக்கு நடுவில் வைத்து மசாலா தோசையாகவும் சாப்பிடலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்