Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Pranayama Yoga: தினமும் பிராணாயாமம் செய்துவந்தால் ஆயுளை நீட்டிக்கலாம்...!!!

Nandhinipriya Ganeshan June 19, 2022 & 09:15 [IST]
Pranayama Yoga: தினமும் பிராணாயாமம் செய்துவந்தால் ஆயுளை நீட்டிக்கலாம்...!!!Representative Image.

Pranayama Yoga: யோகா என்பது இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவான ஒரு கலையாகும். ஒரு மனிதனின் மனம், உடல், ஆத்மா மூன்றையும் ஒன்றாக இணைக்கும் சக்தி யோகாவிற்கு மட்டுமே உண்டு. தினமும் யோகா செய்வதன் மூலம் நமக்கு ஏற்படக்கூடிய இதயம் சம்பந்தமான நோய்களை தடுக்க முடியும். அதுமட்டுமல்லாமல், யோகா செய்பவர்களுக்கு இரத்த ஓட்டம் சீராக இருக்குமாம், இதயம் பலம் பெறுமாம். இதோடு, உடலில் பல விதமான வியாதிகளை தடுத்து, அவைகளை குணப்படுத்தும் சக்தியை கொண்டுள்ளது யோகா. பிராணயாமா யோகா என்பது யோகாவின் ஒரு பகுதியாகும். இது பெரும்பாலும் மூச்சுப்பயிற்சி சம்பந்தப்பட்டவை. 

பிராணயாமா யோகா:

இந்த யோகாவை செய்யும் போது சில முக்கிய விஷயங்களை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த யோகாவால் கிடைக்கும் அனைத்து பயன்களையும் அடைய வேண்டும் என்றால் அதனை விடியற்காலை, சூரிய உதயத்தின் போது செய்ய வேண்டும். இந்த யோகாவை செய்ய தொடங்குவதற்கு முன்பு யோகா ஆசிரியரிடம் பயிற்சி பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்.  

பிராணயாமா யோகாவின் நன்மைகள்:

தினமும் இந்த யோகாவை செய்து வந்தால், உங்கள் நுரையீரல் சிறப்பான முறையில் செயல்படும். சுவாசக்கோளாறுகள் அல்லது ஆஸ்துமா உள்ளவர்களுக்கு பேருதவியாக இருக்கும். 

பிராணயாமா உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து உடல் எடையை குறைப்பதற்கும் உதவுகிறது. 

நாம் தினமும் தவறாமல் முறையாக பிராணயாமா பயிற்சி செய்து வந்தால், ஆயுட்காலத்தை நீட்டிக்க முடியும் என்று பல ஆய்வுகள் தொிவிக்கின்றன.

உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றுவதில் முதல் இடத்தில் இருப்பது இந்த பிராணயாமா யோகா. 

தினமும் பிராணயாமா பயிற்சியை மேற்கொண்டால் உங்கள் மன அழுத்தம் மற்றும் பதற்றம் தணியும்.

பிராணயாமாவால் கிடைக்கும் முக்கியமான உடல் நல பயன்களில் ஒன்று, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு. 

உங்களுக்கு செரிமான பிரச்சனை இருந்தால், இன்றிலிருந்தே இந்த யோகாவை செய்ய தொடங்குங்கள். 

தினமும் பிராணயாமா யோகா செய்வதால், சைனல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். 

பிராணாயாமம்- செய்வது எப்படி?

தரை அல்லது யோகா மேட்டில் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டு உங்கள் கட்டைவிரலால் உங்கள் வலது பக்க மூக்கு துவாரத்தை மூடிக் கொள்ளுங்கள். இப்போது உங்கள் இடது பக்க மூக்கின் வழியே மூச்சை இழுக்கவும். உங்கள் முதுகை நேராகவும், உடல் தளர்வாகவும், இடது கையை உங்கள் இடது முழங்காலில் வைத்திருங்கள். அடுத்து வலது கையின் மோதிர விரலால் உங்கள் இடது பக்க மூக்கை மூடுங்கள். பின்னர் வலது மூக்கிலிருந்து மூச்சை வெளியே விடுங்கள். 15 நிமிடங்களுக்கு மீண்டும் மீண்டும் இதே போன்று செய்யவும். தேவைப்பட்டால், ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் ஒரு இடைவெளி எடுத்துக் கொள்ளலாம். 

உடனுக்குடன் செய்திகளை (Latest Startup News Tamil) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்