Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டால் செய்ய வேண்டிய சில விஷயங்கள்.. உங்களாலும் ஒருவரது உயிரை காப்பாற்ற முடியும்..

Nandhinipriya Ganeshan September 05, 2022 & 18:20 [IST]
ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டால் செய்ய வேண்டிய சில விஷயங்கள்.. உங்களாலும் ஒருவரது உயிரை காப்பாற்ற முடியும்..Representative Image.

மாரடைப்பு மற்றும் மார்பு வலி என இரண்டு வகை உண்டு. எனவே, முதலில் இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்துக் கொள்ள வேண்டும். ஒருவருக்கு மார்பு வலி ஏற்பட்டால் 15 லிருந்து 20 நிமிடங்கள் நீடிக்கும். இந்த வலியால் இதய தசைகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. இதுவே, மாரடைப்பு ஏற்பட்டால் வலியானது 20 லிருந்து 30 நிமிடங்கள் நீடிக்கும். இது இருதய தசைகளுக்கு பெரிய சேதத்தை ஏற்படுத்தக் கூடியது. எனவே ஒருவருக்கு திடீரென மார்பை பிடித்து உட்கார்ந்து கொண்டால், முதலில் மார்பு வலி அல்லது மாரடைப்பா என்பதை கவனிக்க வேண்டும். ஒருவேளை 20 நிமிடங்களுக்கு மேல் வலி நீடித்தல் உடனே  இந்த முதலுதவி விஷயங்களை செய்யுங்கள். இதை அனைவரும்  கண்டிப்பாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். 

Also Read: மிகவும் இளம் வயதிலேயே மாரடைப்பு வருவதற்கான காரணங்கள் என்ன?

❖ ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட நபர் நல்ல காற்றை சுவாசிக்க ஏதுவாக முதலில் அவரை காற்றோட்டமாக விடுங்கள். அவரை சுற்றி மற்றவர்கள் கூட்டம் போடுவதை தடுக்க வேண்டும். அதாவது அவருக்கு தேவையான காற்று தடையின்றி கிடைக்க வழி செய்ய வேண்டும். 

❖ பிறகு, அவர் இறுக்கமான உடை அணிந்திருந்தால் உடைகளை சற்று தளர்த்தி விட வேண்டும். அவர் படுக்க விருப்பப்பட்டால் படுக்க வையுங்கள். அதன்பிறகு, அவருக்கு சுவாசம் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய நெஞ்சில் காது வைத்தோ, மூக்கின் துவாரத்தில் கை வைத்தோ பார்க்க வேண்டும்.

Also Read: பெண்களுக்கு மாரடைப்பு காரணங்கள் மற்றும் அறிகுறிகள்..

❖ குறிப்பாக, உடலில் சென்றுகொண்டிருக்கும் இரத்தம் உறைவதால் தான் மாரடைப்பு ஏற்படுகிறது. இதனால், இரத்தம் இதயத்தை அடைவது தடுக்கப்படுகிறது. எனவே, எப்போதும் அஸ்பிரின் (Aspirin) மாத்திரையை வீட்டிலேயே வைத்திருக்க வேண்டும். இது இரத்தம் உறைந்ததை சரி செய்து உடனடியாக இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை பாய்ச்சும். அந்தவகையில், மாரடைப்பு ஏற்பட்டவருக்கு சுவாசம் இருப்பது உறுதி செய்தவுடன் அடுத்த கட்டமாக இந்த மாத்திரையை, சோர்பிட்ரேட் (sorbitrate) மாத்திரயுடன் நாக்கின் அடியில் வைத்து விடவேண்டும்.

❖ பின்னர், ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுத்து அவரை ரிலாக்ஸ் செய்ய வேண்டும். ஒருவேளை பாதிக்கப்பட்டவர் மூச்சு விடமுடியாத நிலையில் இருந்தால், உடனே அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும். அதற்கு அவருடைய தலையை பின்பக்கம் கை கொண்டு மேலே உயர்த்தி, நாடியையும் மேல்நோக்கி உயர்த்தி மூச்சுக்குழலை நேராக இருக்குமாறு செய்து, பாதிக்கப்பட்டவரின் மூக்கின் இரு துவாரங்களையும் அழுத்தி மூடிக்கொண்டு, உங்களுடிய வாயை அவரோடு வாயோடு பொருத்தி மெதுவாக காற்றை உட்செலுத்த வேண்டும். 

Also Read: ஒருவருக்கு மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகள் இப்படி தான் இருக்குமா? 

❖ அதன்பின், இந்த முதலுதவிகளை செய்வதற்கு முன்பே ஆம்புலன்ஸை அழைத்துவிட வேண்டும். ஆம்புலன்ஸ் வர நேரமானால் சற்றும் தாமதிக்காமல் உடனடியாக நீங்களே அருகில் மருத்துவமனைக்கு காரில் அழைத்து செல்ல வேண்டும். 

மேற்கண்ட முதலுதவிகளை சரியான முறையில் மேற்கொண்டால் உயிருக்கு போராடும் ஒருவரின் உயிரை உங்களாலும் காப்பற்ற இயலும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்