Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Protein Rich Recipes for Pregnancy: கர்ப்பகாலத்தில் பழம், நட்ஸ் தனி தனியா சாப்பிட பிடிக்கலையா...! இப்படி ட்ரை பண்ணுங்க..!

Priyanka Hochumin August 12, 2022 & 16:15 [IST]
Protein Rich Recipes for Pregnancy: கர்ப்பகாலத்தில் பழம், நட்ஸ் தனி தனியா சாப்பிட பிடிக்கலையா...! இப்படி ட்ரை பண்ணுங்க..!Representative Image.

Protein Rich Recipes for Pregnancy: ஒரு பெண்ணுக்கு கர்ப காலம் என்பது கனவு மாதிரி. அந்த கனவு சீக்கிரம் முடிந்து தன்னுடைய சிசுவில் இருக்கும் குழந்தையை பார்க்க துடிக்கும் அந்த 10 மாதங்கள் மிகவும் அழகாகவே இருக்கும். அந்த குறிப்பிட்ட மாதங்களும் தன்னைப் பற்றி யோசிக்காமல், எது சாப்பிட்டா நம் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் என்று நினைத்து உருகும் தாய்க்கு தெரியும் அது எவ்ளோ அர்த்தமான காலம் என்று.

சரி இப்பொழுது First Trimester அதாவது உங்கள் கடைசி மாதவிடாயின் முதல் நாள் முதல் வாரம் 12 வரை இருக்கும் காலகட்டத்தில் எந்த மாறியது உணவு நீங்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று உங்களுக்கு தெரியுமா? அந்த சமயத்தில் பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக அவர்களின் சுவை மாறிக்கொண்டே இருக்கும். மேலும் குமட்டல் நெஞ்செரிச்சல் போன்ற அறிகுறிகள் உங்களுக்கு ஏற்படலாம்.

அந்த சமயங்களில் சத்தான ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியம். அதற்காகவே இந்த பதிவில் மிகவும் எளிதாக தயாரிக்கும் fruit and nut milkshake ரெசிபியை தெரிந்துகொள்ளலாம்.

கிடைக்கும் சத்து

கர்பிணி பெண்களுக்கு மாலை நேரத்தில் எடுத்துக்கொள்ளும் ஸ்னாக்ஸில் இதுவே சிறந்தது. ஒரு கிளாஸில் 8mg புரத சத்து மிக்க இந்த fruit and nut milkshake உங்கள் கருவில் வளரும் குழந்தைக்கு தேவையான எனர்ஜி மற்றும் ஊட்டச்சத்தை வழங்கும்.

ஒரு கிளாஸின் ஊட்டச்சத்து மதிப்பு

புரதம்  -  8.1 gm

கால்சியம் - 247.3 mg

தேவையான பொருட்கள்

வாழைப்பழம் - 1 1/4 கப்

பால்  - 2 கப்

அக்ரூட் பருப்புகள் (Walnuts) - 2 ஸ்பூன்

பிஸ்தா - 1 ஸ்பூன்

பாதாம் - 1 ஸ்பூன்

அரைத்த சர்க்கரை - 1 ஸ்பூன்

செய்முறை

இங்கே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களுள் - வாழைப்பழம், அக்ரூட் பருப்புகள், பிஸ்தா மற்றும் பாதாம் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

பின்பு அதனை மிக்சி ஜாரில் ஒவ்வொன்றாக போடவும். சர்க்கரை மட்டும் சற்று குறைவாக எடுத்துக்கொள்ளவும். ஏனெனில் வாழைப்பழம் இனிப்பாக இருப்பதால் அதிக சர்க்கரை எடுத்துக்கொண்டால் திகட்ட ஆரம்பிக்கும். அப்படி உங்களுக்கு ஒருவேளை சர்க்கரை பிடிக்க வில்லை என்றால் நீங்கள் தேன் கூட சேர்த்துக்கொள்ளலாம்.

இப்பொழுது அனைத்தையும் நன்கு மையும் அளவுக்கு அரைக்கவும்.

இப்பொழுது ஒரு டம்பளரில் மாற்றி நீங்கள் குடிக்கலாம். அவ்ளோ தான் சுவையான ஆரோக்கியமான மில்க் ஷேக் தயாராகி விட்டது. இது கர்பிணி பெண்கள் மட்டுமல்லாது யார் வேண்டுமானாலும் குடிக்கலாம். உங்களுக்கு நட்ஸ் அல்ர்ஜியாக இருந்தால் தயவு செய்து அதனை பயன்படுத்தாதீர்கள். வெறும் பழம் மற்றும் பால் பயன்படுத்தி கூட இதை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். இருப்பினும் மருத்துவரிடம் ஒரு முறை ஆலோசனை கேட்டுக்கொள்வது நல்லது.

Protein Rich Recipes for Pregnancy, protein rich snacks for pregnancy, protein rich foods for pregnancy in tamil, milkshake for pregnancy, dry fruit milkshake for pregnancy, fruit and nut milkshake for pregnancy, breakfast shake for pregnancy.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்