Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

சுவையான வரகு அரிசி சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி? | How to make Varagu Arisi Pongal Recipe

Vaishnavi Subramani Updated:
சுவையான வரகு அரிசி சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி? | How to make Varagu Arisi Pongal RecipeRepresentative Image.

தை மாதம் என்றாலே விழாக்கோலம் தான். விழாக்காலங்களில் எத்தனையோ வகையான பலகாரங்களைச் செய்து உண்டு மகிழ்ந்திருப்போம். ஆனால், தை மாத பண்டிகையில் பொங்கல் தான் ஸ்பெஷல். ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் திருநாளில் பொங்கல் செய்து வழிபடுவர். இது தமிழகத்தில் சிறப்பான பண்டிகையாகும். இந்த சிறப்பான நாளில் சுவையான வரகு அரிசி பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சுவையான வரகு அரிசி சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி? | How to make Varagu Arisi Pongal RecipeRepresentative Image

வரகு அரிசி சர்க்கரைப் பொங்கல்

   பொங்கல் என்றால் மிகவும் இனிப்பு மிகுந்த ஒரு கடவுள் பிரசாதம் மற்றும் எல்லோருக்கும் பிடித்த ஒரு இனிப்பு வகை. வரகு அரிசி சேர்த்துச் செய்தால் மிகவும் சுவை மிகுந்தவையாகவும் மற்றும் உடலுக்கு நன்மை தரக்கூடிய ஒரு உணவாகும். சரி வாருங்கள் வரகு அரிசி சர்க்கரைப் பொங்கல் எப்படிச் செய்வது என்பதைக் காணலாம்.

 

சுவையான வரகு அரிசி சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி? | How to make Varagu Arisi Pongal RecipeRepresentative Image

வரகு அரிசி சர்க்கரைப் பொங்கல் செய்யத் தேவையான பொருட்கள்

  • வரகு அரிசி - 1 கப் 

  • மூங் தால் - 1 டீஸ்பூன் 

  • வெல்லம் - 1 1/2 கப் 

  • நெய் - 4 டீஸ்பூன் 

  • முந்திரிப் பருப்பு - 2 டீஸ்பூன் 

  • ஏலக்காய்த் தூள் - 1 டீஸ்பூன் 

சுவையான வரகு அரிசி சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி? | How to make Varagu Arisi Pongal RecipeRepresentative Image

வரகு அரிசி சர்க்கரைப் பொங்கல் செய்யும் முறை

  • முதலில் குக்கரை எடுத்துக் கொண்டு அதில் வரகு அரிசி மற்றும் மூங் தால்   இவை இரண்டையும் ஒன்றுக்கு, மூன்று என்ற விகிதத்தில் கலந்து கொண்டு அதனுடன் தேவைக்கேற்ப நீரைச் சேர்த்துக் கொள்ளவும்.

  • குக்கரில் 7 முதல் 8 விசில் விட்டுப் பின் அடுப்பை அனைத்து குக்கரிலிருந்து வெளியே எடுத்து அதனை நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.

  • வெவ்வத்துடன் அரை கப் வெந்நீரைச் சேர்த்து நன்கு வடிகட்ட வேண்டும்..

  • அதன் வெல்லத்தை வேக வைத்து கெட்டியான பதத்திற்கு வந்தவுடன்,மசித்த வரகு அரிசியும் மற்றும் ஏலக்காய் தூளையும் சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும்.

  • நெய்யில் 3 டீஸ்பூன் முந்திரியைச் சேர்த்து  நன்கு வறுத்து எடுத்த பின்,வரகு அரிசி பொங்கலுடன் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும்.

  • வரகு அரிசி சர்க்கரைப் பொங்கல் ரெடி. இதைச் சூடாகப் பரிமாறலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்