Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஒரு வருசம் ஆனாலும் புளியில் புழு, பூச்சி, வண்டு வராமல் இருக்க இத பண்ணுங்க..

Nandhinipriya Ganeshan September 13, 2022 & 18:20 [IST]
ஒரு வருசம் ஆனாலும் புளியில் புழு, பூச்சி, வண்டு வராமல் இருக்க இத பண்ணுங்க..Representative Image.

பொதுவாக புளி ஏப்ரல், மே மாதங்களில் அதிகம் கிடைக்கூடியது. ஏனென்றால், அந்த மாதம் தான் புளி சீசன். அந்த நேரத்தில் புளியை வாங்கி வைத்துக்கொள்ளலாம். விலையும் மலிவாக கிடைக்கும். இப்படி ஒரே அடியாக கிலோ கணக்கில் வாங்கி வைப்பதால் எளிதில் புழு, பூச்சி, வண்டு விழுவதற்கு வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல், விரைவில் காய்ந்து கருப்பாகவும் வாய்ப்புள்ளது. ஆனால், முறையாக பராமரித்து வைப்பதன் மூலம் ஒரு வருடமே ஆனாலும் புளி பழசாகாமலும், கருப்பாகாமலும், மற்றும் புழு, பூச்சி, வண்டு விழாமலும் இருக்கும். 

புளியை வாங்கி வந்ததுமே அதில் கொட்டைகள் மற்றும் நார்கள் இல்லாதவாறு சுத்தம் செய்துக்கொள்ளுங்கள். 

பின்னர், ஒரு தாம்பளத்தில் கொட்டி நன்றாக 4 மணி நேரம் வெயிலில் காய வைத்து கொள்ள வேண்டும்.

காய வைத்துள்ள புளியை சின்ன சின்ன உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும். 

அடுத்ததாக, ஈரமில்லாத ஒரு பிளாஸ்டிக் டப்பா அல்லது பீங்கான் ஜாடியை எடுத்து அதில் சிறிதளவு கல் உப்பு போட்டு கொள்ளவும்.

பின்னர், சிறதளவு தூள் உப்பை ஒரு தட்டில் கொண்டு நாம் பிடித்துவைத்துள்ள புளி உருண்டையை ஒவ்வொன்றாக அந்த உப்பில் மேலோட்டமாக உப்பு படும்படி தொட்டு அழுத்தி உருண்டை பிடித்து அந்த டப்பாவில் போட்டுக் கொள்ளுங்கள்.

இப்படி சேமித்து வைப்பதன் மூலம் புளி ஒரு வருடம் ஆனாலும் புழுவோ, பூச்சியோ, வண்டோ எதுவும் வராது.

சில குறிப்புகள்:

எப்போதும் டப்பாவில் இருந்து புளியை எடுக்கும்போதும் ஈர கையுடன் எடுக்க கூடாது.

மேலும், நாம் ஏற்கனவே உப்பு இதில் போட்டு வைத்திருப்பதால் குழம்பு அல்லது ரசத்திற்கு போடும்போது உப்பு குறைவாகவே போட வேண்டும்.

புளியை சில்வர் பாத்திரத்தில் சேமித்து வைக்கக் கூடாது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்