Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

வெறும் அரை மணி நேரம் நடங்க.. அது தரும் நன்மைகள பாருங்க..

Nandhinipriya Ganeshan September 13, 2022 & 15:20 [IST]
வெறும் அரை மணி நேரம் நடங்க.. அது தரும் நன்மைகள பாருங்க..Representative Image.

உடல் உழைப்பு வெகுவாகக் குறைந்துவிட்ட இன்றைய வாழ்க்கை முறையில், நடைப்பயிற்சி (Walking) என்பது அனைவருக்கும் அத்தியாவசியம். அந்த காலத்தில் எல்லாம் நம் முன்னோர்கள் உடல் வலிமையுடன் நீண்ட காலம் ஃபிட்டாக இருந்தார்கள். இதற்கு காரணம் அவர்களுடைய உணவுப் பழக்கமும், வாழ்க்கை முறையும் தான். ஆனால், இன்றோ காலையில் கம்ப்யூட்டர், மொபைலின் முன் தான் விழிக்கிறோம். ஏன் நம்மில் பலரும் இரவிலும் விடுவது கிடையாது. இதன் விளைவாக நமக்கு கிடைக்கும் மிகப் பெரிய பரிசு 'நோய்'.

'எனக்கு நேரம் இருப்பது கிடையாது, இதில் நான் எங்கு நடைப்பயிற்சி செய்வது என்று' சொல்பவர்களும் இருப்பீர்கள். நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் மணி கணக்கில் அந்த போனை பயன்படுத்துவீர்கள் அல்லவா? அதில் ஒரு அரை மணி நேரத்தை மட்டும் உடல்நலத்திற்காக ஒதுக்குங்கள். 

தினமும் ரன்னிங் பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்...

குறைந்தது அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் இவற்றை முறையாக கடைப்பிடித்து வந்தாலே நீங்கள் முழுமையான உடல் ஆரோக்கியத்தை பெறலாம். இந்த நடைப்பயிற்சி என்பது உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் பயிற்சி கொடுக்கும்படியான ஓர் சிம்பிலான ஈசியான செலவில்லாத உடற்பயிற்சி. இதனால் தான் நடைப்பயிற்சியை 'உடற்பயிற்சியின் அரசன்' என்று அழைக்கிறார்கள். ஒரு மனிதன் தினமும் குறைந்தது அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை பற்றி பார்க்கலாம். 

நடைப்பயிற்சியின் நன்மைகள்:

ஞாபக சக்தி மேம்படும்:

தினமும் காலை நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் மூளையில் உள்ள ’ஹிப்போகாம்பஸ்’ (Hippocampus) பகுதி சிறப்பாக செயல்பட்டு ஞாபக சக்தி அதிகரிக்கும். மேலும், நாள் முழுவதும் சோர்வில்லாமல் சுறுசுறுப்பாக வைக்கத்துக் கொள்ளவும் உதவும். தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் தினமும் மாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டால் போதும், ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும்.

மன அழுத்தம் குறையும்:

தொடர்ந்து தினமும் நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு  ‘எண்டார்பின்’ எனும் ஹார்மோன் சுரக்கிறது. இது மன அழுத்தத்தைக் குறைத்து, மன அமைதிக்கு வழி வகுக்கிறது. நாள் முழுவதும் உற்சாகமாக உழைப்பதற்கும் இது உதவும். எனவே, மன அழுத்தத்தில் இருந்து காப்பாற்றி கொள்ள தினமும் காலையில் நடைப்பயிற்சி செய்யுங்கள். 

நோ டயட், நோ எக்ஸர்சைஸ்... 30 நாளில் மின்னல் வேகத்தில் உடல் எடை குறையும்..

செலவில்லாமல் உடல் எடை குறையும்:

தினமும் 1 மணி நேரம் நடைப்பயிற்சி செய்வதால் உங்களுக்கு கிட்டத்தட்ட 250 கலோரி கரையும். இதை தொடர்ந்து பின்பற்றி வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் அனைத்தும் கரைந்து உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள உதவும். ஈசியா வலியில்லாமல், செலவில்லாமல் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைபவர்களுக்கு இது ஒரு பெஸ்ட் சாய்ஸ்.

சர்க்கரை நோய்க்கு பை பை:

காலை, மாலை இருவேளைகளிலும் 45 நிமிடம் நடைப்பயிற்சி செய்வதால், சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். அதுமட்டுமல்லாமல், சர்க்கரை நோய் வராமலும் தடுக்கலாம். 

மூட்டு வலியா?

தினமும் நடைப்பயிற்சி செய்வதால் மூட்டுகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. இதனால் எலும்புகள் வலு பெற்று மூட்டு வலி, மூட்டு தேய்மானம் போன்ற பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம். மேலும், இது முதுமையில் வருகின்ற ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ எனும் எலும்புச் சிதைவு நோயைத் தடுக்கிறது. அதுமட்டுமல்லாமல், உங்களை எப்போதும் இளமையாக வைத்திருக்க உதவும். 

எடையை குறைக்க வேண்டுமா? இந்த ஒரு யோகா போதும்...

தன்னம்பிக்கை பிறக்கும்:

தினசரி நடைப்பயிற்சி செய்வதால் தசைகளின் வலிமை அதிகரிக்கும். அதுமட்டுமில்லாமல் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவும் உறுதுணையாக இருக்கும் நண்பர்களே. மேலும், உடல் கட்டுக்கோப்பாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் இருப்பதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். 

மலச்சிக்கல் பிரச்சனை: 

தினமும் காலையில் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் செரிமான மண்டலத்தின் செயல்பாடு மேம்படும் மற்றும் இரைப்பையில் சுரக்கும் செரிமான அமிலத்தின் அளவை அதிகரிக்கவும் உதவும். இதனால் மலச்சிக்கல் பிரச்சனையே வராது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்