Tue ,Apr 16, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57
Exclusive

பாக்கும் போது எச்சு ஊறுதே...கிறிஸ்துமஸ் அன்னைக்கு...சூப்பரா செஞ்சு சாப்பிடலாம் | Christmas roast chicken

Priyanka Hochumin Updated:
பாக்கும் போது எச்சு ஊறுதே...கிறிஸ்துமஸ் அன்னைக்கு...சூப்பரா செஞ்சு சாப்பிடலாம் | Christmas roast chicken Representative Image.

செம்மையா கொண்டாடப் போறோம். அந்த கொண்டாட்டத்துக்கு தேவையான ஏற்பாடுகள் தான் இப்பொது நடந்துகொண்டிருக்கிறது. அந்த நாளில் நாம் என்ன செய்ய வேண்டும், என்னென்ன அலங்காரங்கள், என்ன உணவு, என்ன ஸ்னாக்ஸ் என்று லிஸ்ட் போட்டு வைத்திருப்போம். ஆனால் அதில் என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருந்தீர்கள் என்றால் இதோ உங்களுக்கு சிறப்பான ஐடியா.

கிறிஸ்துமஸ் அன்று நாம் சூப்பரான ரோஸ்ட் சிக்கன் செய்து சாப்பிடலாம். அதிலும் ஒரு முழு கோழியை எடுத்து அதில் மசாலாக்களை சேர்த்து சும்மா கடிச்சு சாப்பிட்டா எப்படி இருக்கும். சொல்லும் போதே நாக்கு ஊறுதே, உடனே செய்முறை எப்படின்னு பார்க்கலாம். ரோஸ்ட் சிக்கன் செய்வதற்கு முன்னர் என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

பாக்கும் போது எச்சு ஊறுதே...கிறிஸ்துமஸ் அன்னைக்கு...சூப்பரா செஞ்சு சாப்பிடலாம் | Christmas roast chicken Representative Image

ஸ்டேப் 1:

தேவையான பொருட்கள் - 2 லிட்டர் தண்ணீர், 4 டீஸ்பூன் உப்பு, 3 டீஸ்பூன் பெப்பர், நசுக்கிய பூண்டு 8 பல், நறுக்கிய கொத்தமல்லி 3 டீஸ்பூன், மிளகாய் செதில்கள் 1 டீஸ்பூன், சர்க்கரை 2 டீஸ்பூன், லெமன் 3. 

இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலந்த கலந்த பிறகு முழு சிக்கனை அதில் 10 - 12 மணி வரை ஊற வைக்கவும்.

பாக்கும் போது எச்சு ஊறுதே...கிறிஸ்துமஸ் அன்னைக்கு...சூப்பரா செஞ்சு சாப்பிடலாம் | Christmas roast chicken Representative Image

ஸ்டேப் 2:

இப்பொது சிக்கன் மீது தடவ மசாலா ரெடி செய்ய வேண்டும். அதற்கு தேவையான பொருட்கள் - 1/2 கப் நசுக்கிய பூண்டு, சிறிது கொள்ளத்தமல்லி தளை, சிறிது thyme, சிறிது பெப்பர், தேவையான அளவு உப்பு, காரம் தேவையான அளவு மிளகாய் தூள், 1/2 கப் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு அரைக்கவும். பின்னர் 3 டீஸ்பூன் பட்டர் சேர்த்து களரி விடவும். இதனை பிரிட்ஜில் வைத்து பதப்படுத்தவும்.

பாக்கும் போது எச்சு ஊறுதே...கிறிஸ்துமஸ் அன்னைக்கு...சூப்பரா செஞ்சு சாப்பிடலாம் | Christmas roast chicken Representative Image

ஸ்டேப் 3:

இப்பொது சிக்கனை துணி ஒன்றை வைத்து ஈரம் இல்லாமல் கிளீன் செய்யவும். பின்னர் ரெடி செய்த மசாலாவை அனைத்து பகுதியிலும் சமமாக தடவவும். பிறகு சிக்கனின் கால், விங்க்ஸை ஒரு நூல் எடுத்து ப்ரெஸ்ட் உடன் சேர்த்து கட்டவும். ஒரு மணி நேரம் மசாலா நன்கு ஊறிய பின்னர் 125 டிகிரி செல்சியஸில் 1 மணி நேரம் பேக் செய்யுங்கள்.

அவ்ளோ தான் பின்னர் தயார் செய்த மீதம் மசாலாவை சிக்கன் மீது தடவி 30-45 நிமிடம் 250 டிகிரி செல்சியஸில் பேக் செய்யுங்கள். கூடுதலாக - கேரட், முள்ளங்கி, கொத்தமல்லி, பெப்பர், உப்பு, ஆலிவ் ஆயில், பெல் பெப்பர் ஆகியவற்றையும் அத்துடன் சேர்த்து பேக் செய்யலாம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்