Sat ,Feb 24, 2024

சென்செக்ஸ் 73,142.80
-15.44sensex(-0.02%)
நிஃப்டி22,212.70
-4.75sensex(-0.02%)
USD
81.57
Exclusive

Putrunoi Symptoms in Tamil: உங்க காலு அடிக்கடி உறைஞ்சு போகுதா…?? அது இந்த புற்றுநோயின் அறிகுறியாகும்..!!

Nandhinipriya Ganeshan May 21, 2022 & 16:00 [IST]
Putrunoi Symptoms in Tamil: உங்க காலு அடிக்கடி உறைஞ்சு போகுதா…?? அது இந்த புற்றுநோயின் அறிகுறியாகும்..!!Representative Image.

Putrunoi Symptoms in Tamil: நம் உடலில் சத்தமில்லாமல் உருவாகி, கொஞ்சம் கொஞ்சமாக நம்மை இறப்பின் வாயிலுக்கு கொண்டு செல்லும் மிகவும் மோசமான நோய்களுள் ஒன்று தான் புற்றுநோய். இந்த நோய் வந்துவிட்டாலே மரணம் தான் என்ற நிலை மாறி, அதற்காக பல்வேறு சிகிச்சைமுறைகள் வந்திருந்தாலும் கூட மக்களிடன் அந்த பயமும், பாதிப்பும் இருக்க தான் செய்கிறது. புற்றுநோயில் பல வகை உண்டு. அந்த வகையில், ஆண்களுக்கு வயிறு, குடல், நுரையீரல், ப்ராஸ்ட்ரேட் சுரப்பி, உணவுக்குழாயிலும், பெண்களுக்கு நுரையீரல், மார்பகம், குடல், வயிறு, கர்ப்பப்பை வாய் ஆகியவற்றிலும் அதிகமாக வருகிறது. 

உடலில் தோன்றும் அனைத்து கட்டிகளுமே புற்றுநோய் கட்டிகள் கிடையாது. புற்றுநோய் அல்லாத கட்டிகளால் உயிருக்கு ஆபத்து இருக்காது. இதை வழக்கமான அறுவை சிகிச்சைகள் மூலமே அகற்றிவிட முடியும். ஒருமுறை அகற்றினால் மீண்டும் தோன்றாது. இருப்பினும், புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்த முடியும். எனவே, உடலில் ஏதேனும் கட்டிகள் தென்பாட்டால் உடனே மருத்துவரை அணுகுவது நன்மைப் பயக்கும். இந்த புற்றுநோய் பல வழிகளில் நம் உடலில் அறிகுறிகளை (Cancer Symptoms in Tamil) காட்டுகிறது. அந்த வகையில், கணைய புற்றுநோய் எம்மாதிரியான அறிகுறிகளை உங்கள் காலில் ஏற்படுத்துகிறது என்பதை பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

கணைய புற்றுநோய் என்றால் என்ன?

கணையத்தின் ஒரு பகுதியில் கட்டுப்பாடற்ற செல் வளர்ச்சி தொடங்கும் போது கணைய புற்றுநோய் (Pancreatic cancer in tamil) உருவாகிறது. இது உடல் முழுவதும் பெருகி மற்ற உறுப்புகளையும் பாதிக்கும் தன்மை கொண்டது. அதன் முதன்மை அறிகுறிகளாக வயிற்று வலி மற்றும் மஞ்சள் காமாலை போன்றவை அடங்கும். 

கணையம் வயிற்றின் பின்புறம், பித்தப்பைக்கு அருகில் வயிற்றின் பின்புறம் அமைந்துள்ளது. இதில் இன்சுலின், என்சைம்கள் உள்ளிட்ட ஹார்மோன்களை உருவாக்கும் சுரப்பிகள் உள்ளன. 

கணைய புற்றுநோயின் அறிகுறிகள் என்ன?

பொதுவாக கணையப் புற்றுநோயானது நோயாளியின் காலில் இரத்தத்தை உறைய (Pancreatic cancer symptoms in tamil) வைக்கிறது. சில சமயங்களில் கணையப் புற்றுநோயின் முதல் அறிகுறியாக கருதப்படுகிறது. இதை த்ரோம்பஸ் என்றும் அழைக்கப்படுகிறது. 

இந்த ஆழமான நரம்பு இரத்த உறைவு ஒரு காலில் வீக்கம் மற்றும் வலி, அல்லது இரண்டு கால்களிலுமே ஏற்படலாம். 

 • வீங்கிய நரம்பு
 • பாதிக்கப்பட்ட இடத்தை சுற்றி சிவப்பாக காணப்படுவது
 • காலில் கடினமான வலி

இந்த நிலை மிகவும் தீவிரமடையும் போது உறைவு துண்டு உடைந்து நுரையீரலுக்கு சென்று மார்பு வலி, மூச்சு திணறல் போன்றவற்றையும் ஏற்படுத்தும். 

கணைய புற்றுநோயின் பிற அறிகுறிகள்:

 • மஞ்சள் காமாலை
 • கருமையான சிறுநீர்
 • வெளிர் நிறத்தில் க்ரீஸ் மலம்
 • தோல் அரிப்பு
 • ஓவர் குமட்டல்
 • வாந்தி
 • எடை இழப்பு
 • மோசமான பசி

கணையப் புற்றுநோய் அரிதானது என்றாலும் இது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்து, நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கிறது. இதன் முக்கிய அறிகுறிகள் அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும் தாகம் ஆகியவை அடங்கும். 

மருத்துவ பரிசோதனை:

உடலில் கட்டி எந்த இடத்தில் உள்ளது? அது எவ்வளவு தீவிரமடைந்துள்ளது? மற்றும் நீங்கள் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறீர்கள்? ஆகியவற்றின் அடிப்படையில் உகந்த சிகிச்சையை மருத்துவர் தீர்மானிப்பார். அதாவது, புற்றுநோய் நிலையை பொறுத்து, அவற்றிற்கான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. எனவே, மேற்கூறிய அறிகுறிகளால் (Cancer Problem Symptoms in Tamil) நீங்க அவதி பட்டால் உடனே மருத்துவரிடம் செல்வது புற்றுநோயை ஆரம்பக் கட்டத்திலேயே அழிக்க உதவலாம். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்