Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Rose Plant Growing Tips in Tamil: இந்த டிப்ஸ மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ரோஜா செடி என்ன; ரோஜா தோட்டமே வெக்கலாம்… அதுவும் கொத்து கொத்தான ரோஸ் பூக்களோட..!! [பகுதி-2]

Nandhinipriya Ganeshan July 10, 2022 & 19:45 [IST]
Rose Plant Growing Tips in Tamil: இந்த டிப்ஸ மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ரோஜா செடி என்ன; ரோஜா தோட்டமே வெக்கலாம்… அதுவும் கொத்து கொத்தான ரோஸ் பூக்களோட..!! [பகுதி-2]Representative Image.

Rose Plant Growing Tips in Tamil: ரோஜா பூவை யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். கடையில் வாங்கும் போதே அதன் அழகை ரசிக்கும் நாம் வீட்டில் வளர்க்க விரும்பமாட்டோமா என்ன? பொதுவாக பூ செடிகளிலேயே ரோஜா செடியை தான் அதிகம் ஆசையோடு வளர்க்கிறார்கள். ரோஜா பூக்களில் சுமார் 700 வகைகளுக்கும் மேல், பல நூறு கண்ணைக் கவரும் வண்ணங்களில் காணப்படுகின்றன. மேலும், ரோஜா பூக்கள் வண்ணத்திற்காகவும், நறுமணத்திற்காகவும், அழகிற்காகவும் இப்படி பல்வேறு காரணங்களுக்காக பலரால் விரும்பி வளர்க்கப்படுகின்றன.

அப்படி வளர்க்கும் போது நாம் பல்வேறு தவறுகளை செய்கிறோம்.  இதனாலையே நர்சரி கார்டனில் இருந்து வாங்கிட்டு வந்த பத்து நாட்களிலேயே செடி இறந்துவிடுகின்றன. மற்றவை பூக்களே விடுவதில்லை. ஆனால், ரோஜா செடியை எப்படி பராமரிக்க வேண்டும் என்ற நுணுக்கங்களை தெரிந்துக் கொண்டால் ரோஜா செடி என்ன, ரோஜா தோட்டமே வைக்கலாம். இப்போது ரோஜா செடிகள் ஆரோக்கியமாக வளர்வதற்கு நாம் என்ன வேண்டும் என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.


கொத்து கொத்தாக ரோஸ் பூ கிடைக்க இத பண்ணுங்க.. [பகுதி - 1]


பூச்சிக்கொல்லி மருந்துகள்:

சிறிதளவு வேப்ப இலைகளை எடுத்து, அத்துடன் 4-5 பூண்டு தோலை சேர்த்து, தண்ணீர் ஊற்றி மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.

இதை வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி செடிகளுக்கு ஸ்பிரே செய்து வந்தால் பூச்சி தொல்லை இல்லாமல் இருக்கும்.

முடிந்த வரை கடையில் விற்கும் இராசாயன பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

ரோஜா செடிகள் வளர்வதற்கு தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. வெயில் காலங்களில் குறைந்தது வாரத்திற்கு இரு முறையாவது செடிகளுக்கு தண்ணீர் விட வேண்டும். முடிந்த வரை தண்ணீர் இலைகளின் மீது படாதவாறு விடுங்கள்.

பூக்களை எப்படி பறிக்க வேண்டும்?

ரோஜா செடியிலிருந்து பூக்களை கவனமாக பறிக்க வேண்டும். அப்போது தான் மீண்டும் மொட்டு விடும். அதன் மூலம் நிறைய பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். பூவை பறிக்கும் போது, பூ பூத்திருக்கும் தண்டில் கீழ்ப்பகுதியில் 2, 3, 4 இலை என இருக்கும்.

அதில் நான்கு இலை எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்தில் ரோஜா பூக்களை கத்தரித்து பறிக்க வேண்டும்.

ரோஜா செடிகளுக்கு குறைந்தது 15 நாட்களுக்கு ஒரு முறை எப்சம் உப்பு ஒரு ஸ்பூன் வீதம் வேர்ப்பகுதியில் போட்டு தண்ணீர் ஊற்றி வந்தால், நிறைய பூக்கள் பூக்க ஆரம்பிக்கும்.

அதேப்போல், உதிரும் நிலையில் உள்ள மலர்களை அவ்வப்போது அகற்றி விட வேண்டும்.

வருடத்திற்கு ஒரு முறை மட்டும் கவாத்து செய்து விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் செடி ஆரோக்கியமாக அடர்த்தியாக வளர தொடங்கும். இதை வசந்த காலத்தில் செய்யுங்கள்.

ரோஜா செடியில் சில சமயங்களில் இலைகள் மஞ்சள் நிறத்தில் மாறிவிடும் அப்போது அந்த இலைகளை நறுக்கிவிட வேண்டும். இதனால் செடிகள் ஆரோக்கியமாக வளரும்.

ரோஜா செடிகளை பொறுத்த வரையில், உயரமாக வளர்ந்தால் பூக்கள் அதிகமாக பூக்காது. எனவே, உயரமாக வளரவிடாமல், அவ்வப்போது கிளைகளை நறுக்கிவிட வேண்டும்.

அவ்வளவு தாங்க… என்னாது இது உனக்கு அவ்வளவு தானா என நீங்கும் கேள்வி எனக்கு கேட்கிறது. பிறகு, அதிக பூக்கள் வேண்டுமென்றால் இத்தனையும் செய்துதானே ஆக வேண்டும். இதை மட்டும் ஃபாலோ பண்ணி பாருங்க. ரோஜா தோட்டமே வைக்கலாம்.

Tags: 

Rose plant growing tips | How to get more roses in rose plant in tamil | Rose plant growing tips in tamil | Rose plant care in tamil | How To Get More Flowers On Rose Plant In Tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்