Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Make Skin Whitening Cream at Home in Tamil: ஒரே வாரத்தில் வெள்ளையாக மாறணுமா? இந்த ஹோம் மேட் கிரீமை பயன்படுத்துங்க..!!

Nandhinipriya Ganeshan July 24, 2022 & 14:50 [IST]
How to Make Skin Whitening Cream at Home in Tamil: ஒரே வாரத்தில் வெள்ளையாக மாறணுமா? இந்த ஹோம் மேட் கிரீமை பயன்படுத்துங்க..!!Representative Image.

How to Make Skin Whitening Cream at Home in Tamil: உடல் முழுவதும் ஒரே வாரத்தில் வெள்ளையாக மாற்றும் ஸ்கின் வைட்னிங் கிரீமை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்பதை தான் இப்பதிவில் பார்க்கப் போகிறோம். இது முழுக்க முழுக்க வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களை பயன்படுத்தி தயாரிப்பதால், எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது. இதை உடல் முழுவதும் எந்த பகுதியில் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரே வாரத்தில் அப்பகுதியில் இருக்கும் கருமை நீங்கி சருமம் ஜொலிப்பதை நீங்களே கண்டு ஆச்சரியப்படுவீர்கள். வாங்க! இதற்கு என்னென்ன பொருட்கள் தேவை மற்றும் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

அரிசி – ½ டம்ளர்

உருளைக்கிழங்கு – 1

தயிர் – 5 ஸ்பூன்

காய்ச்சாத பால் – 5 ஸ்பூன்

சோள மாவு – 2 ஸ்பூன்

Most Read: கருகரு கூந்தலுக்கு ஹோம் மேட் ஹேர் ஆயில்.. 7 நாட்களில் முடி உதிர்வுக்கு குட் பை..!!

செய்முறை:

❖ முதலில் அரிசியை கிட்டதட்ட 2 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.

❖ பின்பு, உருளைக்கிழங்கை எடுத்து துருவி, அதை ஒரு வடிக்கட்டியில் போட்டு ஸ்பூனை பயன்படுத்தி அதோட சாற்றை மட்டும் வடிகட்டி எடுத்துக்கோங்க.

❖ சோள மாவை சிறிதளவு தண்ணீரில் கலந்து தனியாக வைத்து கொள்ளவும். தயிரை ஒரு வெள்ளை துணியில் போட்டு அதிலிருக்கும் தண்ணீரை பிழிந்துவிட்டு அதை துணியிலேயே கட்டி வைக்கவும்.

❖ இப்போது, ஊறவைத்த தண்ணீரோடு அரிசியை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து,  வடிக்கட்டியில் அந்த தண்ணீரை மட்டும் வடித்து கொள்ளவும். எல்லா பொருட்களும் ரெடி.

❖ அடுத்தது, அடுப்பில் பேனை வைத்து சூடானதும் அரிசி தண்ணீரை ஊற்றி கலந்துக் கொள்ளுங்கள். அதில் காய்ச்சாத பாலை ஊற்றி குறைவான தீயில் கிளறி விடவும்.

❖ இப்போது இந்த கலவை ஓரளவுக்கு கெட்டியாக ஆரம்பிக்கும் அந்த சமயத்தில் நாம் கலந்து வைத்திருந்த சோள மாவு கரைசலை ஊற்றி நன்றாக கிளறி விடவும்.

Most Read: ஆல் டைம் ஃபேவரட்! ரோட்டுக்கடை பானிபூரி வீட்டிலேயே செய்யலாம்.. அதுவும் இவ்வளவு ஈஸியாக…!!

❖ இந்த கலவை அல்வா பதத்திற்கு வரும் வரை குறைவான தீயில் வைத்து கிளறிக்கொண்டே இருக்கவும். பதம் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு அந்த கிரீமி கலவையை ஒரு பவுளில் மாற்றிக்கொள்ளவும்.

❖ இப்போது நாம் கட்டி வைத்திருந்த தயிரை சேர்த்துக்கொள்ளவும். அதன்பின் நாம் எடுத்து வைத்திருந்த உருளைக்கிழங்கு சாற்றின் அடிப்பகுதியில் வெள்ளை நிறத்தில் ஸ்டார்ச் படிந்திருக்கும். அதை மட்டும் எடுத்து இந்த கலவையோடு சேர்த்து முட்டையை கலக்குவதற்கு பயன்படுத்தும் பிளெண்டரில் கிரீம் பதத்திற்கு வரும் வரை நன்றாக அடித்துக் கொள்ளுங்கள்.

❖ அவ்வளவு தான் ஸ்கின் வைட்னிங் கிரீம் ரெடி… இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்து 10 நாட்கள் வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பயன்படுத்தும் முறை:

கிரீமை எடுத்து கருப்பாக இருக்கும் இடத்தில் தடவி 20 நிமிடங்கள் வரை அப்படியே வைக்கவும்.

பின்னர், குளிர்ந்த நீரில் கழுவிடுங்கள். இதை தினமும் செய்து வந்தால் ஏழே நாட்களில் கருப்பாக இருக்கும் சருமம் வெள்ளையாக மாறிவிடும்.

Most Read: கேரளத்து பெண்களின் நீளமான கூந்தலின் ரகசியம் இதுதானா? அட... இவ்வளவு நாளா தெரியாமபோச்சே…!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்