Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இடது பக்கம் படுத்து தூங்குபவரா நீங்க.. இத தெரிஞ்சிக்கோங்க..

Nandhinipriya Ganeshan October 12, 2022 & 23:00 [IST]
இடது பக்கம் படுத்து தூங்குபவரா நீங்க.. இத தெரிஞ்சிக்கோங்க..Representative Image.

பகல் முழுவதும் வேலை செய்துவிட்டு இரவு தூங்கும்போது உடல் வழியில் பல்வேறு விதமாக படுப்போம். அதாவது, மல்லாந்து படுப்பது, குப்புற படுப்பது, வலதுபுறம் திரும்பி படுப்பது, இடதுபுறம் திரும்பி படுப்பது என பல்வேறு கோணத்தில் படித்திருப்போம். ஆனால், ஒரு மனிதன் எப்படி தூங்க வேண்டும் என்று ஒரு நெறிமுறை இருக்கிறது. ஆம், ஒவ்வொரு மனிதனும் எப்போது தூங்கினாலும் இடது பக்கம் சாய்ந்து தான் தூங்க வேண்டும். இவ்வாறு தூங்குவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்பதை பார்க்கலாம். 

இடது பக்கம் தூங்குவதால் ஏற்படும் நன்மைகள்:

➤ இடது பக்கம் சாய்ந்து தூங்குவதால் இதயம் சீராக செயல்படும். மேலும், உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராக பாய்வதற்கு உதவுகிறது.

➤ நம்மில் சிலருக்கு இரவு சாப்பாடு சாப்பிட்டு தூங்கும்போது நெஞ்சு எரிச்சல் ஏற்படும். அந்த சமயத்தில் இடது பக்கமாக திரும்பி படுத்தால் அந்த உணர்வு குறையும். இதையே பின்பற்றினால் இரவில் நெஞ்சு எரிச்சல் ஏற்படாது. 

➤ மேலும், இடது பக்கமாக படுத்து தூங்கும்போது குறட்டை வராது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். முக்கியமாக கர்ப்பிணிகள் இடது பக்கம் சாய்ந்து தூங்கினால் இரத்த ஓட்டம் மற்றும் சிறுநீரகங்களுக்கு நல்லது. 

➤ இடது பக்கம் சாய்ந்து தூங்கும்போது கழிவுகளை சிறுகுடலிருந்து பெருங்குடலுக்கு ஈசியாக வெளியேற செய்கிறது. இது இரவு நேரத்தில் செரிமான பிரச்சனை ஏற்படாமல் பாதுகாக்கும். 

➤ இதுவரைக்கும் நீங்கள் எப்படி படுத்து தூங்கிருந்தாலும் சரி, இனியாவது இடது பக்கம் சாய்ந்து தூங்க முயற்சி செய்யுங்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்