Sat ,Jul 20, 2024

சென்செக்ஸ் 80,604.65
-738.81sensex(-0.91%)
நிஃப்டி24,530.90
-269.95sensex(-1.09%)
USD
81.57
Exclusive

நாம் அன்றாடம் சாப்பிடும் ஆப்பிளில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?? 

Nandhinipriya Ganeshan October 12, 2022 & 09:00 [IST]
நாம் அன்றாடம் சாப்பிடும் ஆப்பிளில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?? Representative Image.

Apple Uses in Tamil: ஆப்பிள் மிகவும் பிரபலமான மற்றும் மக்கள் அதிகம் விரும்பி உண்ணக்கூடிய பழங்களில் ஒன்று. அதுமட்டுமல்லாமல், “தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரிடமே செல்ல வேண்டாம்” என்ற கருத்தை அனைவருமே கேள்வி பட்டிருப்போம். ஏனெனில், அவ்வளவு அற்புதமான நன்மைகளை தனக்குள் கொண்டுள்ளது.

இதில், வைட்டமின்கள், புரோட்டீன்கள் என்று உடலுக்கு வேண்டிய சத்துக்கள் நிறைந்திருக்கின்றன, இவை அனைத்தும் உடலை வலுவோடு வைப்பதுடன், எந்த நோயும் உடலை தாக்காமல் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது. நோயால் பாதிக்கப்பட்டவரை பார்க்கச் செல்லும் போது ஆப்பிளை வாங்கி கொடுக்கும் வழக்கம் வந்தது இதனால் தான். 

கண்களை காக்கும் கருப்பு திராட்சை..

ஆப்பிள் ரோசேசி குடும்பத்தை சேர்ந்த ஒரு பழவகை. இந்த ஜூசி பழத்தை "அதிசய உணவு" என்றும் அழைப்பார்கள். ஆப்பிளை அப்படியேவுன் சாப்பிடலாம் அல்லது ஜூஸ் போட்டும் (apple juice benefits in tamil) குடிக்கலாம். மற்றொரு முக்கியமான விஷயமும் ஆப்பிளில் உள்ளது. அதுதான் அதன் விதைகள், அதிக அளவு ஆப்பிள் விதைகளை உட்கொள்வது உயிரே போகும் அளவிற்கு ஆபாத்தானது. ஏனெனில் அதில் ஹைட்ரஜன் சயனைடு உள்ளது. இது மனித உடலுக்கு மிகவும் தீங்கானது.

நாம் அன்றாடம் சாப்பிடும் ஆப்பிளில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?? Representative Image

இருதய ஆரோக்கியம்

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வருவதன் மூலம் உயர் இரத்த அழுத்த ஆபத்து குறைந்து, இருதய நோய்கள் வராமல் தடுக்கிறது. அதோடு, கெட்ட கொலஸ்ட்ராலை கரைத்து உடலில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. சந்தேகத்திற்கு இடமின்றி ஆப்பிள் சாப்பிடுவதன் மூலம் பக்கவாதம் ஏற்படும் அபாயம் முழுவதும் குறைக்கப்படுகிறது. 

கருமையான தலைமுடி, தெளிவான கண் பார்வை, சுருக்கமில்லாத சருமம் வேண்டுமா?

நாம் அன்றாடம் சாப்பிடும் ஆப்பிளில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?? Representative Image

சர்க்கரை நோய்

ஆப்பிளில் பிரக்டோஸ் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் பாலிஃபீனால்கள் உள்ளன, அவை உடல் சர்க்கரையை உறிஞ்சும் விகிதத்தை குறைக்கிறது. இது வளர்சிதை மாற்ற சமநிலையை மேம்படுத்துகிறது, எனவே ஆப்பிள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.

தக்காளி பழத்தின் அற்புதமான மருத்துவ பயன்கள்!

நாம் அன்றாடம் சாப்பிடும் ஆப்பிளில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?? Representative Image

ஆஸ்துமாவைத் தடுக்கிறது

ஆப்பிளில் குர்செடின் என்ற ஃபிளாவனாய்டு உள்ளது, இது ஆஸ்துமா அறிகுறிகளின் அபாயத்தைத் தடுக்க உதவுகிறது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது மற்றும் அழற்சியைக் குறைக்கிறது. இந்த அழற்சி எதிர்ப்பு பண்பு சுவாச ஆரோக்கியத்தை அதிகரித்து ஆஸ்துமா மற்றும் சுவாசப் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறாது. எனவே, ஆஸ்துமா பிரச்சனை ஏற்படமால் இருக்க அடிக்கடி ஆப்பிளை (apple health benefits in tamil) சாப்பிடுங்கள்.

ஆயுளை நீடிக்கணுமா? மலை நெல்லிக்காய் சாப்பிடுங்க.... தினமும் எத்தன சாப்பிட வேண்டும்...?

நாம் அன்றாடம் சாப்பிடும் ஆப்பிளில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?? Representative Image

எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது

நல்ல குடல் பாக்டீரியாவை மேம்படுத்த உதவும் பயோஆக்டிவ் சேர்மங்களை ஆப்பிள் கொண்டுள்ளது. இந்த பாக்டீரியம் உங்கள் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருந்து பருமனானவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஆப்பிள் அதன் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து காரணமாக எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அதுக்காக ஆப்பிளை சாப்பிட்டே உடம்பை குறைக்க போகிறேன் என்று இறங்கிவிட கூடாது.

அவகேடோ பழத்தின் 8 ஆரோக்கிய நன்மைகள்!

நாம் அன்றாடம் சாப்பிடும் ஆப்பிளில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?? Representative Image

பல் ஆரோக்கியம்

பொதுவாக ஆப்பிள் சுத்தப்படுத்தும் முகவர்களாக செயல்படுகின்றன. ஆப்பிளில் உள்ள மாலிக் அமிலம் உமிழ்நீர் உற்பத்தியை அதிகரித்து, வாயிலிருந்து பாக்டீரியாவை அகற்ற உதவுகிறது. அதோடு பாக்டீரியாவால் ஏற்படும் பல் சிதைவையும் குறைக்கிறது. ஆப்பிளில் இருக்கும் வைட்டமின் மற்றும் தாதுக்கள் ல் சொத்தையைத் தடுக்கவும், ஒட்டுமொத்த பல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் ஈறு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.

பப்பாளி சாப்பிட்டா கேன்சர் வராதாம்!

நாம் அன்றாடம் சாப்பிடும் ஆப்பிளில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?? Representative Image

புற்றுநோய் வராமல் தடுக்கிறது

ஆப்பிளில் உள்ள பைட்டோகெமிக்கல்ஸ் மற்றும் ஃபைபர் புற்றுநோய் தடுப்பு முகவராக செயல்படுகின்றன, இது உயிரணுவின் DNAவை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. இந்த இயற்கை நார்ச்சத்து மற்றும் இரசாயனங்கள் உடலில் புற்றுநோய் செல்கள் உருவாவதை எதிர்த்து போராடுகின்றன. இது மார்பகம், வயிறு, நுரையீரல், பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய்களுக்கு சிறந்த மருந்தாகும்.

கர்ப்ப காலத்தில் சீதாப்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா...? 

சிவப்பு ஆப்பிளில் உள்ள குவெர்செடின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அம்ப்ரோசியா ஆப்பிளில் உள்ள பல்வேறு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது பாக்டீரியா, வைரஸ்கள், தொற்றுகள் மற்றும் சில நோய்களுடன் போராடி, நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க (apple fruit benefits in tamil language) உதவுகிறது.

கர்ப்பிணிகள் பேரிச்சம் பழத்தை இப்படி சாப்பிடுங்க.. உங்க வயிற்றில் வளரும் குழந்தைக்கும் நல்லது..


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்