Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பெண்களுக்கு கட்டாயம் தேவைப்படும் வைட்டமின் சி..! எதனால் தெரியுமா..? | Vitamin C Benefits For Women

Gowthami Subramani Updated:
பெண்களுக்கு கட்டாயம் தேவைப்படும் வைட்டமின் சி..! எதனால் தெரியுமா..? | Vitamin C Benefits For WomenRepresentative Image.

நவீன வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு பெண்கள், பல்வேறு தொழில்களில் அதிக ஆர்வத்துடனும், ஈடுபாடுடனும் செயல்பட்டு வருகின்றனர். அதே நேரத்தில், அவர்களின் உடல்நலத்தைப் பேணிக் காப்பதிலும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதிலும், பெண்கள் தினசரி உணவு சாப்பிடும் போது மிகவும் அதிக பயனுள்ள சில ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருள்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில், வைட்டமின் சி நிறைந்த உணவு பொருள்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

உடல்நலத்தைப் பேணிக் காப்பதிலும், ஊட்டச்சத்து மிகுந்த உணவுப் பொருள்களை எடுத்துக் கொள்வதிலும், ஆண், பெண் என இருவரும் அதீத முக்கியத்துவம் கொடுப்பது அவசியம். குறிப்பாக, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில், “வைட்டமின் சி” சார்ந்த உணவுகள் பெண்களுக்கு மிக அதிக பயன்களைத் தரும் என நம்பப்படுகிறது. இதில் பெண்களுக்கு , வைட்டமின் சி சார்ந்த உணவுப் பொருள்களை எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்.

பெண்களுக்கு வைட்டமின் சி நன்மைகள்

பெண்களுக்கு உயர் இரத்த அழுத்தம் தொடர்பான இருதய நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இதனைக் குறைப்பதற்காக, வைட்டமின் சி பெரிதும் உதவுகிறது.

மன அழுத்தம் ஏற்படுவதால், பெண்கள் ஹார்மோன் உற்பத்தி, பெண்கள் மற்றும் ஆண்களில் கருவுறுதல், நோயெதிர்ப்புச் செயல்பாடு, செரிமானம், போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படுவர். இந்த மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு வைட்டமின் சி உதவுகிறது.

இந்த வைட்டமின் சி நிறைந்த உணவுப் பொருள்களை உண்பதால், உடலில் இரும்புச்சத்தை மேம்படுத்த முடியும். இதனால், இரத்த சோகை ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.

வைட்டமின் சி சார்ந்த உணவுப் பொருள்கள், பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜஸ்ட்ரான் அளவை மேம்படுத்தும். இது கருப்பை சுருங்குவதற்கும், கருப்பையின் புறணி உடைவதற்கும் காரணமாக அமையும் எனக் கூறப்படுகிறது. இது மாதவிடாய் சுழற்சி சரியான முறையில் அமைக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்