Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Skipping Benefits in Tamil: அழகான கவர்ச்சியான உடலமைப்பை பெற இத மட்டும் பண்ணுங்க…

Nandhinipriya Ganeshan July 19, 2022 & 19:15 [IST]
Skipping Benefits in Tamil: அழகான கவர்ச்சியான உடலமைப்பை பெற இத மட்டும் பண்ணுங்க…Representative Image.

Skipping Benefits in Tamil: ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடற்பயிற்சி அவசியமான ஒன்று. இது உடலில் இருக்கும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதற்கான எளிதான மற்றும் விரைவான வழியாகும். உடற்பயிற்சி என்றவுடன் ஜிம்மிற்கு சென்று கடுமையான உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று நினைக்காதீர்கள். வீட்டிலேயே எளிமையான முறையில் செய்யக்கூடிய எவ்வளவோ உடற்பயிற்சிகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் ஸ்கிப்பிங். இந்த வார்த்தையை எங்கையோ கேட்டது போல இருக்கின்றதா? ஆம் நாம் பள்ளிப்பருவத்தில் விளையாடிய விளையாட்டு தான். ஆனால், அது இவ்வளவு நன்மைகளை நமது உடலிற்கு வழங்குகிறது என்று தெரியாமலே அந்த உடற்பயிற்சியை செய்திருக்கிறோம்.

ஆமாங்க.. இந்த உடற்பயிற்சியை புதிதாக செய்ய தொடங்குபவர்களுக்கு ஆரம்பத்தில் கால், தொடை பகுதி, உடம்பு பகுதிகளில் வலியை ஏற்படுத்தும். ஆனால், அந்த வலி அனைத்தும் நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அதாவது அதிக கலோரிகள் எரிக்கப்படுவதால் ஏற்படுகின்றன. அந்த வகையில் இந்த ஸ்கிப்பிங் பயிற்சியை தொடர்ந்து காலை நேரத்தில் வெறும் வயிற்றில் செய்து வந்தால் பல நன்மைகளை நம் உடலுக்கு வழங்குகின்றன. அது என்னென்ன நன்மைகள் என்று தெரிந்துக் கொள்வோம்.

❖ உடலில் உள்ள கூடுதல் கொழுப்பை குறைக்கிறது.

❖ தினமும் 10 நிமிடம் ஸ்கிப்பிங்க் செய்தால், அழகான கவர்ச்சியான உடலமைப்பை பெற உதவுகிறது.

❖ தசை மற்றும் எலும்புகளின் வலிமையை அதிகரிக்கிறது.

❖ ஒளிரும் சருமத்தை பெற உதவுகிறது.

❖ உங்களை நாள் முழுக்க சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க உதவுகிறது.

❖ இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

குறிப்புகள்:

❖ உங்களுடைய உயரத்திற்கு ஏற்றவாறு நல்ல தரமான ஸ்கிப்பிங் கயிறை பயன்படுத்துங்கள்.

❖ தினமும் 15-25 நிமிடங்கள் வரை செய்தாலே போதுமானது.

❖ இந்த உடற்பயிற்சியை சற்று காற்றோட்டமான இடத்தில் செய்தால் நல்லது. உதாரணமாக, பால்கனி, வீட்டு தோட்டம், அல்லது வீட்டின் மொட்டை மாடி போன்ற இடங்களில்.

❖ பிளாஸ்டிக்கால் செய்த ஸ்கிப்பிங் கயிறை தவிர்ப்பது நல்லது.

Tags:

Skipping benefits in tamil | How many skipping per day | How many skipping per day for beginners | Jump rope benefits | How to do jump rope correctly | Skipping uses in tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்