Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,086.15
-402.84sensex(-0.56%)
நிஃப்டி21,868.60
-127.25sensex(-0.58%)
USD
81.57
Exclusive

Margazhi Naivedyam: ஆஞ்சநேயருக்குப் படைக்கும் மிளகு வடை செய்வது எப்படி? | Milagu Vadai Recipe in Tamil

Gowthami Subramani Updated:
Margazhi Naivedyam: ஆஞ்சநேயருக்குப் படைக்கும் மிளகு வடை செய்வது எப்படி? | Milagu Vadai Recipe in TamilRepresentative Image.

மார்கழி மாதம் என்றாலே பெண்களுக்கான சிறப்பான மாதம் ஆகும். இந்த சிறப்பு மிக்க மாதத்தில், பெண்கள் காலையில் எழுந்து நீராடி வாசலில் கோலமிட்டு கடவுளை வணங்குவர். இந்த சிறப்பான மாதத்தில் கடவுளுக்கு நெய்வேத்தியங்கள் படையலிட்டு வணங்குவதால், நல்லதே நடக்கும் எனக் கூறுவர்.

மிளகு வடை

பருப்பு வடை, மெது வடை, கிழங்கு வடை, உளுத்த வடை இது போல எத்தனையோ வகை வகையான வடைகளை செய்து பார்த்திருப்போம். ஆஞ்சநேயருக்கு உகந்த மிளகு வடைகளைச் செய்வது என்று இந்தப் பதிவில் காணலாம்.

Margazhi Naivedyam: ஆஞ்சநேயருக்குப் படைக்கும் மிளகு வடை செய்வது எப்படி? | Milagu Vadai Recipe in TamilRepresentative Image

மிளகு வடை செய்யத் தேவையான பொருள்கள்

கருப்பு உளுத்தம் பருப்பு: 1 கப்

அரிசி மாவு: 1 டீஸ்பூன்

கருப்பு மிளகு: 1 டீஸ்பூன்

பெருங்காயம் – ஒரு சிட்டிகை

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – சிறிதளவு

கறிவேப்பிலை – தேவையான அளவு

Margazhi Naivedyam: ஆஞ்சநேயருக்குப் படைக்கும் மிளகு வடை செய்வது எப்படி? | Milagu Vadai Recipe in TamilRepresentative Image

மிளகு வடை செய்வது எப்படி

✤ முதலில் உளுத்தம் பருப்பைக் கழுவி 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

✤ அதன் பின், அந்த தண்ணீரை வடிகட்டிய பின் மிக்ஸி ஜாரில் உளுத்தம் பருப்பை எடுத்து, அதில் தண்ணீர் சேர்க்காமல் உப்பு சேர்த்து கரடு முரடான விழுதாக அரைக்க வேண்டும்.

✤ பிறகு கடைசியாக கருப்பு மிளகு சேர்த்து ஒரு முறை அறைக்க வேண்டும்.

✤ அதன் பிறகு ஜாடியில் இருந்து இறக்கி, அதனை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.

✤ பின், பாத்திரத்தில் அரிசி மாவு, கறிவேப்பிலை, சாதம் போன்றவற்றை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

✤ கடாயில் எண்ணெய்யை சூடாக்கவும்.

✤ அதன் பிறகு, ஒரு அலுமினிய ஃபாய்ல் ஷீட் அல்லது பிளாஸ்டிக் ஷீட்டை எடுத்து அதில் எண்ணெய் தடவ வேண்டும்.

✤ மாவில் எலுமிச்சை அளவு உருண்டையாக எடுத்து, அதை மெல்லிய வடையாக அழுத்தவும்.

✤ அதன் பிறகு, நடுவில் ஒரு சிறிய துளையிட வேண்டும்.

✤ பிறகு சூடான எண்ணெயில் பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.

✤ இவ்வாறு மிளகு வடையை எளிதாக தயார் செய்யலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்