Mon ,Apr 22, 2024

சென்செக்ஸ் 73,694.27
605.94sensex(0.83%)
நிஃப்டி22,362.00
215.00sensex(0.97%)
USD
81.57
Exclusive

How to Eat Dates During Pregnancy in Tamil: கர்ப்பிணிகள் பேரிச்சம் பழத்தை இப்படி சாப்பிடுங்க.. உங்க வயிற்றில் வளரும் குழந்தைக்கும் நல்லது..

Nandhinipriya Ganeshan July 23, 2022 & 19:30 [IST]
How to Eat Dates During Pregnancy in Tamil: கர்ப்பிணிகள் பேரிச்சம் பழத்தை இப்படி சாப்பிடுங்க.. உங்க வயிற்றில் வளரும் குழந்தைக்கும் நல்லது..Representative Image.

இரத்த சோகை பிரச்சனைக்கு

பொதுவாக, இரத்த சோகை இருப்பவர்களை பேரிச்சம் பழத்தை அதிகம் எடுத்துக் கொள்ள பரிந்துரைப்பார்கள். ஏனென்றால், பேரிச்சம் பழம் அவ்வளவு ஊட்டச்சத்துகளை கொண்டது.

குறிப்பாக இதில் காணப்படும் அதிகப்படியான இரும்புச் சத்து இரத்த சிவப்பணுக்களில் உள்ள புரதமான ஹீமோகுளோபினின் உற்பத்திக்கு இன்றியமையாதது.

எப்போதும் டல்லாகவே இருப்பவர்களுக்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் பாலில் ஊறவைத்த இந்த பேரிச்சை மற்றும் பாலை குடித்துவந்தால், உடலுக்கு தேவையான ஆற்றல் மற்றும் பலம் கிடைக்கப் பெற்று ஆக்ட்டிவ்வாக இருப்பார்கள்.

Most Read: அழகா இருக்குனு அடிக்கடி திரெட்டிங் பண்ணுறிங்களா? அப்பா இந்த பிரச்சனையெல்லாம் சந்திக்க ரெடியா இருந்துக்கோங்க..

கர்ப்பிணி பெண்கள்

பொதுவாக முதல் மூன்று மாதம் வரை பேரிச்சம் பழத்தை கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்க மாட்டார்கள். ஆனால், மூன்று மாதத்திற்கு பிறகு பசும் பாலில் ஊறவைத்த பேரிச்சம் பழத்தை (5-6) கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டு வந்தால், அவர்களுக்கு மட்டுமின்றி வயிற்றில் வளரும்  குழந்தைக்கும் ஏராளமான நன்மைகளை வழங்குகிறது.

ஆய்வுகளின் படி, பால் மற்றும் பேரிச்சம் பழம் கலவையை தவறாமல் உட்கொள்வதால் கருவில் உள்ள குழந்தைக்கு உறுதியான எலும்புகள் மற்றும் அதிக அளவிலான இரத்தத்தை உருவாக்க உதவியாக அமையும்.

Most Read: சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய & தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன?

சரும அழகிற்கு

முகத்தில் இருக்கும் சுருக்கத்தை போக்க வேண்டுமா? 4-5 பேரிச்சம் பழத்தை அரை மணி நேரம் ஊற வைத்து அத்துடன் தேன் கலந்துக் கொள்ளுங்கள்.

இதை மிக்ஸியில் பேஸ்ட் போல அரைத்து, முகத்தில் பேக் போல போட்டுக்கொள்ளவும். இதை 20 நிமிடங்கள் அப்படியே விட்டு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவிக் கொள்ளவும்.

இவ்வாறு வாரத்திற்கு ஒருமுறை இதை பின்பற்றி வந்தால் முகச்சுருக்கம் காணாமல் போவதோடு, மீண்டும் அழகான இளமையான சருமத்தை பெறுவீர்கள்.

Most Read: 6+ குழந்தைகளுக்கு வீட்டிலேயே சத்து மாவு தயாரிப்பது எப்படி?

ஆண்களுக்கு

பேரிச்சம் பழம் ஆயுர்வேதத்தில் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ஆண்களின் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய நன்மைகளை அளிக்கிரது. ஆண்கள் உலர்ந்த பேரிச்சம் பழத்தை சாப்பிடுவதை காட்டிலும் பாலில் சமைத்த பேரிச்சம் பழத்தை (2-3) தினமும் குடித்து வந்தால் வலிமையும் விந்துவும் அதிகரிக்கும்.

Tags:

Benefits of soaked dates in milk in tamil | Benefits of soaked dates in milk | Benefits of eating dates soaked in milk in tamil | Benefits of dates with milk at morning | Can we soak dates in milk | How to eat dates with milk | How to consume dates with milk | How to eat dates during pregnancy | Dates during pregnancy in tamil | How many dates to eat per day for pregnancy


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்