Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Thengai Kadalai Paruppu Urundai Recipe: நாலே பொருள் தான் ஆரோக்கியமான கடலைப்பருப்பு உருண்டை ரெடி.. அதுவும் 5 நிமிசத்துல!!

Nandhinipriya Ganeshan July 09, 2022 & 15:45 [IST]
Thengai Kadalai Paruppu Urundai Recipe: நாலே பொருள் தான் ஆரோக்கியமான கடலைப்பருப்பு உருண்டை ரெடி.. அதுவும் 5 நிமிசத்துல!!Representative Image.

தேவையான பொருட்கள்:

கடலை பருப்பு – 100 கிராம்

தேங்காய் – 1 கப் (துருவியது)

ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்

நாட்டுச்சர்க்கரை – 5 டீஸ்பூன்

செய்முறை:

❖ முதலில் கடலை பருப்பை கழுவி, அதை குக்கரில் போட்டு 3 விசில் விட்டு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

❖ பின்னர், கடலை பருப்பை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி, ஆறவைத்துக் கொள்ளுங்கள்.

❖ மிக்ஸி ஜாரில் கடலை பருப்பு, துருவிய தேங்காய், ஏலக்காய் பொடி, நாட்டுச்சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து கொள்ளுங்கள்.

❖ இதை நைசாக அரைத்து கொள்ளுங்கள். இதற்கு தண்ணீர் எதுவும் ஊற்றக் கூடாது.

❖ அரைத்து எடுத்த கலவையை ஒரு தட்டில் கொட்டி, உங்களுக்கு வேண்டிய வடிவில் உருண்டை பிடித்துக் கொள்ளலாம்.

❖ அவ்வளவு தான் ஹெல்த்தியான குழந்தைகளுக்கு பிடித்த தேங்காய் கடலை பருப்பு உருண்டை (Thengai Kadalai Paruppu Urundai Recipe) ரெடி..!

டிப்ஸ்: புடலங்காய் கூட்டு செய்யும்போது கடலைப் பருப்பு மீதமாகிவிட்டால் உடனே இப்படி ட்ரை பண்ணி பாருங்க. சட்டுனு சூப்பரான ஸ்நாக்ஸ் ரெடி.

பயன்கள்:

❖ கடலை பருப்பை அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு தோல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியும் எளிதில் நெறுங்காது.

❖ உடலில் தசைகளின் வலுவிற்கும் வளர்ச்சிக்கும் தேவையான புரதச் சத்து கடலை பருப்பில் அதிகம் உள்ளது. எனவே, குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுக்க வேண்டும்.

❖ மேலும், இதில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் மற்ற தாது சத்துக்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

❖ அதுமட்டுமல்லாமல், கடலை பருப்பில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம், குறைந்தளவு, கொழுப்பு சத்து போன்றவை இருதய நலத்திற்கு மேம்படுத்துகிறது.

❖ கடலை பருப்பை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் புரத சத்து அதிகரித்து முடிஉதிர்வு பிரச்சனையில் இருந்து பாதுகாக்கும்.

❖ சர்க்கரை நோயாளிகள் கடலை பருப்பு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டால் உடலில் பலத்தை தரும்.

Tags:

Thengai Kadalai Paruppu Urundai Recipe | Kadalai paruppu benefits in tamil | Kadalai paruppu uses in tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்