Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

கர்ப்பம் மாதம் 1: கர்ப்பத்தின் முதல் மாதத்தில் செய்யக் கூடாதவை.. | Things to Avoid During Early Pregnancy in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
கர்ப்பம் மாதம் 1: கர்ப்பத்தின் முதல் மாதத்தில் செய்யக் கூடாதவை.. | Things to Avoid During Early Pregnancy in TamilRepresentative Image.

நீங்க குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், மாதவிடாய் சுழற்சி முடிந்ததும் சரியான தருணத்தில் பாலுறவில் ஈடுபட வேண்டும். குறைந்தது வாரத்தில் இரண்டிலிருந்து மூன்று முறையாவது பாலுறவில் ஈடுபட வேண்டியது அவசியம். இதைவிட முக்கியமானது குறிப்பிட்ட சில செயல்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டியதும் அவசியம். ஏனென்றால், இது கருக்கலைப்புக்கு வழிவகுக்கலாம். எனவே, கர்ப்பத்தின் முதல் மாதத்தில் அதாவது ஆரம்பகால கர்ப்ப காலத்தில் செய்யக் கூடாத சில விஷயங்கள் என்னென்ன என்பதை கீழே குறிப்பிட்டுள்ளோம். 

கர்ப்பத்தின் முதல் மாதத்தில் செய்யக் கூடாதவை:

பொதுவாக நிறைய பெண்கள் இறுக்கமான ஆடைகள் அணிவதை விரும்புவார்கள். ஆனால், கருவுறுதலை திட்டமிட்ட பிறகு இறுக்கமான குறிப்பாக உள்ளாடைகளை தவிர்க்க வேண்டும். மேலும், லெகின்ஸ், ஜீன்ஸ் போன்ற இறுக்கமான மேல் ஆடைகளையும் அணிய வேண்டாம். ஏனென்றால், கரு உருவாகும் போது உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. 

அதுமட்டுமல்லாமல், இயற்கையாக சுவாசிக்க உடலுக்கு இடம் கொடுக்க வேண்டியதும் அவசியம். எனவே, முடிந்தவரை இறுக்கமான ஆடைகளை  கொஞ்சம் நாள் ஒதுக்கி வைத்துவிட்டு, தளர்வான ஆடைகளை அணியுங்கள். அதேபோல், ஹை ஹீல்ஸ் அணிவதை தவிர்த்துவிட்டு, தட்டையான மற்றும் வசதியான காலணிகளை அணியுங்கள்.

முதல் மாதத்தில் கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, முதல் மூன்று மாதங்களில் நீண்ட தூரம் பயணம் செய்வது காலை சுகவீனத்தை ஏற்படுத்துவதோடு, உங்கள் கர்ப்பத்தின் மீது தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தலாம். எனவே, முடிந்த வரை நீண்ட தூரம் நடப்பது, வேகமாக நடப்பது, வாகனத்தில் செல்வதை குறைத்துக் கொள்ளுங்கள்.

முதல் மூன்று மாதம் வரை 20 பவுண்டுகளுக்கு மேல் எடையுள்ள எந்தப் பொருளையும் தூக்க வேண்டாம். அதேப்போல், எந்த வீட்டு வேலைகளைச் செய்யும்போதும் குனிய வேண்டாம், அது உங்களுக்கு தலைச்சுற்றலை ஏற்படுத்தும்.

மண் சம்பந்தமான பணிகளில் ஈடும்படும் போது தவறாமல் கையுறைகளை பயன்படுத்த மறந்துவிடாதீர்கள். அதேபோல், நம்மில் பலரும் வீட்டில் செல்ல பிராணிகள் வளர்ப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். இருப்பினும், அவற்றின் முடி, மலம் ஆகியவற்றில் ஒட்டுண்ணிகள் இருக்கும். எனவே, கர்ப்பக் காலத்தில் செல்ல பிராணிகளை பராமரிப்பதை கொஞ்சம் தவிர்க்கவும். 

கர்ப்பம் உறுதியானதும் முதல் மூன்று மாதங்கள் வரை பாலுறவில் ஈடுபடுவதை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், அந்த சமயத்தில் உடலில் ஏற்படும் அழுத்தம் கருச்சிதைவுக்கு வழிவகுக்கலாம். 

பொறுப்பு துறப்பு: கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு தேவைப்படும் ஆலோசனைகளையும், மருத்துவ டிப்ஸ்களையும் இந்த பகுதியில் காண்போம். எனினும் கர்ப்பக் கால சிக்கல்கள் மற்றும் உடல் உபாதைகளைத் தீர்க்க கண்டிப்பாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். வீட்டிலேயே பிரசவம், ஆங்கில மருத்துவம் இல்லாத நாட்டு மருத்துவ முறைகளை Search Around Web இணையதளமோ ஆசிரியர்களோ பரிந்துரைப்பதில்லை.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்