Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வெஜ் சாண்ட்விச் தீயில்லாமல் செய்வது எப்படி | How To Make Veg Sandwich Without Fire

Vaishnavi Subramani Updated:
வெஜ் சாண்ட்விச் தீயில்லாமல் செய்வது எப்படி | How To Make Veg Sandwich Without FireRepresentative Image.

நம் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பச்சைக் காய்கறிகளை சாப்பிடுவது என்பது நடக்காத காரியம். அதனால் இந்த ரெசிபி செய்வதால் நம் வீட்டில் பலருக்கும் பிடிக்கும் எளிதில் பச்சையான காய்கறிகளை சாப்பிடுவார்கள். அந்த ரெசிபி தான் வெஜ் சாண்ட்விச். பொதுவாகக் கடைகளில் விற்கும் சாண்ட்விச் எல்லோருக்கும் பிடிக்கும் அதை விரும்பி வாங்கி சாப்பிடுவார்கள். அந்த சாண்ட்விச் வீட்டில் அதுவும் அடுப்பைப் பயன்படுத்தாமல் (Fireless cooking) செய்தால் எப்படி இருக்கும். சரிவாங்க இந்த பதிவில் வெஜ் சாண்ட்விச் தீயில்லாமல் செய்வது என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

வெஜ் சாண்ட்விச் தீயில்லாமல் செய்வது எப்படி | How To Make Veg Sandwich Without FireRepresentative Image

தேவையான பொருள்கள

✤ சாண்ட்விச் ரொட்டி – 4 ரொட்டிகள்

✤ மயோனைஸ் – ஒரு டேபிள்ஸ்பூன்

✤ வெள்ளரிகாய் – ஒன்று

✤ தக்காளி – ஒன்று

✤ சாட் மசாலா – 5 டேபிள்ஸ்பூன்

✤ கேரட் – ஒன்று

✤ உப்பு -தேவையான அளவு

வெஜ் சாண்ட்விச் தீயில்லாமல் செய்வது எப்படி | How To Make Veg Sandwich Without FireRepresentative Image

செய்முறை

✤ முதலில் ஒரு பாத்திரத்தில் கேரட் நன்றாகத் துருவிக் கொள்ளவும்.மற்றொரு பாத்திரத்தில் தக்காளி மற்றும் வெள்ளரிக்காய் வட்டவடிவத்தில் வெட்டிக் கொள்ளவும்.

✤ நான்கு துண்டு சாண்ட்விச் ரொட்டிகளின் மேல் முழுவதுமாக மயோனைஸ் தேய்த்து கொள்ளவும்.

✤ ஒரு துண்டின் மேல் வெட்டிய வெள்ளரிக்காய் துண்டு மற்றும் தக்காளி துண்டுகளை வைக்கவும்.

✤ அதன் மேல் துருவிய கேரட் தூவிய பின்,அதில் உப்பு சிறிதளவு தூவிடவும்.

✤ அதற்கு பிறகு, அதில்  சாட்மசாலா தூவிய பின், அதன் மேல் மயோனைஸ் தேய்த்து மற்றொரு ரொட்டியால் மூடினால் சுவையான சாண்ட்விச் தயார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்